சேலையில் அல்லு அர்ஜுன்.. கசிந்தது புஷ்பா 2 ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்

'புஷ்பா 2' படத்தின் அல்லு அர்ஜுனின் தோற்றம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கசிந்தது. கசிந்த இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 31, 2024, 09:00 AM IST
  • 'புஷ்பா 2' படத்தில் இருந்து அல்லு அர்ஜுன் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.
  • அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
  • இயக்குனர் சுகுமாரின் 'புஷ்பா 2' ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சேலையில் அல்லு அர்ஜுன்.. கசிந்தது புஷ்பா 2 ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் title=

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பிய திரைப்படம் புஷ்பா. செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த, 'புஷ்பா தி ரைஸ்' திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். வில்லனாக சுனிலும், முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரியாக ஃபஹத் ஃபாசிலும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்ததோ, அதே அளவிற்கு இப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனுடன் புஷ்பா 1 படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

கொரோனா பீக்கில் இருந்த சமயத்தில் வெளியான 'புஷ்பா தி ரைஸ்' படம் 350 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருந்தது. இந்த படம் தெலுங்கில் மட்டுமின்றி தமிழ், மலையாளம், இந்தி, கன்னடத்திலும் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது 'புஷ்பா' படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. 

மேலும் படிக்க | தனுஷ் 51 படப்பிடிப்பால் போக்குவரத்து பாதிப்பு..பரபரப்பை ஏற்படுத்திய படக்குழு!

சேலையில் அல்லு அர்ஜுன்:
இந்நிலையில் ஏற்கனவே புஷ்பா 2 போஸ்டரில் அல்லு அர்ஜுன் Gangamma Thalli லுக்கில் சேலை கட்டி இருப்பதும் காட்டப்பட்டு இருந்த நிலையில் தற்போது புஷ்பா 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு போட்டோ கசிந்து இருக்கிறது. அதில் அல்லு அர்ஜுன் Gangamma Thalli லுக்கில் சேலையுடன் தான் இருக்கிறார். வைரலாகும் போட்டோவை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

Allu Arjun's look from 'Pushpa 2

இன்னும் 200 நாள்களே:
இதனிடையே புஷ்பா 2 ( புஷ்பா தி ரூல் ) படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினம் அன்று வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. மேலும் தயாரிப்பு நிறுவனம், ’படம் வெளியாக இன்னும் 200 நாள்களே உள்ளன’ என நினைவுப்படுத்தும் போஸ்டரை நேற்று முன்தினம் பகிர்ந்துள்ளனர்.

புஷ்பா (தி ரூல்) நடிகர், நடிகைகள்:
புஷ்பா 2 திரைப்படத்தில் ராஷ்மிகாவே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் பகத் பாசில், சுனில், அனுஷ்யா பரத்வாஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்தப்படத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘புஷ்பா-2’ வின் ஓடிடி ரைட்ஸ் யாருக்கு: 
முதல் பாகத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கியது. அதனால் இப்படத்தையும் அதுவே வாங்கும் எனக் கூறப்பட்டுவந்தது. ஆனால் மற்றொரு பிரபல ஓடிடி நிறுவனமான டிஷ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனமும் இப்படத்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாம். இரு நிறுவனங்களும் பெரும் தொகை கொடுத்து இதனை வாங்கத் தயாராக உள்ளனவாம். இதனால் புஷ்பா- 2 வை எந்த நிறுவனம் கைப்பற்றப்போகிறது எனும் எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

மேலும் படிக்க | கமல்ஹாசன் கைவிட்ட படங்கள்..இவ்ளோ பெரிய லிஸ்டா..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News