கர்ப்பிணியாக இருந்த போதும் சீரியலில் நடித்து கொடுத்த சின்னத்திரை நடிகைகள்..!

Tamil Serial Actress: சின்னத்திரை நடிகைகள் சிலர், தாங்கள் கர்பமாக இருந்த நேரத்திலும் தங்களது கதாப்பாத்தித்திற்கு தேவையான காட்சிகளை நடித்து காெடுத்திருக்கின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா..?  

Written by - Yuvashree | Last Updated : Aug 25, 2023, 12:38 PM IST
  • தமிழ் சீரியல் நடிகைகள் சிலர் கர்பமாக இருந்த நேரத்திலும் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.
  • ஒரு நடிகைக்கு உண்மையாக வலைகாப்பு நடந்தது.
  • இந்த லிஸ்டில் எந்தெந்த நடிகைகள் உள்ளனர் தெரியுமா..?
கர்ப்பிணியாக இருந்த போதும் சீரியலில் நடித்து கொடுத்த சின்னத்திரை நடிகைகள்..!  title=

படத்தில் நடிப்பதற்கும் தொடர்களில் நடித்து கொடுப்பதற்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கின்றன. திரைப்படங்களின் படப்பிடிப்பு சில நாட்கள் அல்லது மாதங்களில் முடிந்து விடும். ஆனால், சீரியல்களின் படப்பிடிப்பு அப்படியல்ல. நெடு நாட்கள் தாெடரும் சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்பில் நடிக்கும் நடிகைகள் கர்பமாவதுண்டு. இதனால் அவர்களுக்கு பதிலாக வேறு ஏதேனும் நடிகை அந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பதுண்டு. ஆனாலும், ஒரு சில நடிகைகள் தங்களுக்கான கதாப்பாத்திரத்தை முழுமையாக நடித்து கொடுத்து விட்டு செல்வர். யார் அந்த நாயகிகள் தெரியுமா..? 

காயத்ரி யுவராஜ்:

சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர், காயத்ரி யுவராஜ். சின்னத்திரையின் பிரபலமான முகங்களுள் இவரும் ஒருவர். இவர், நடிகரும் நடன கலைஞருமான யுவராஜை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். காயத்ரி இரண்டாவது குழந்தைக்கு தாயாக உள்ளார். இந்த விஷயத்தை அவர் சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைதள பக்கங்களில் அறிவித்திருந்தார். இவர் தற்போது மீனாட்சி பொண்ணுங்க தொடரில் முகிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். 

மேலும் படிக்க | தேசிய விருது வென்ற படங்களின் லிஸ்ட்..! தமிழ் படங்களுக்கு இத்தனை விருதுகள் தானா..?

ஆலியா மானசா: 

இவரை ஆலியா மானசா என்று கூறுவதை விட, செம்பா என்று கூறினால்தான் பலருக்கு தெரியும். அந்த அளவிற்கு ‘ராஜா ராணி’ தொடரில் இவரது செம்பா கதாப்பாத்திரம் பிரபலம். தனக்கு சீரியலில் ஜோடியாக நடித்த சஞ்சீவ் கார்த்திக்கையே தனது வாழ்க்கை துணையாக மாற்றிக்கொண்டார். இவர், இரண்டாவது முறை கர்பமாக இருந்த போது ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகத்தில் நடித்துக்கொண்டிருந்தார். வயிறு பெரிதான நிலையிலும் அந்த தொடரில் நடித்த இவர் குழந்தை பிறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அந்த தொடரில் இருந்து விலகிக்கொண்டார். 

கண்மணி சேகர்: 

பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருப்பவர், கண்மணி சேகர். இவர், சின்னத்திரை நடிகரான நவீன் குமாரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர் தற்போது கர்பமாக உள்ளார். இந்த தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்த இவர், தான் இன்னும் நிகழ்ச்சிகளில் இருந்து விடுப்பு ஏதும் எடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். 

Serial Actress

நக்‌ஷதிரா:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ என்ற தொடரில் வெண்ணிலா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் நக்‌ஷதிரா. இவர் தற்போது வல்லி திருமணம் எனும் தொடரிலும் நடித்து வருகிறார். இவர், தான் கர்பமாக இருந்த விஷயத்தை கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தார். சமீபத்தில் இவருக்கு குழந்தை பிறந்தது. இவர் கர்பமாக இருந்த சமயத்திலும் தொடரில் நடித்து வந்துள்ளார். 

ஃபரீனா அசாத்: 

‘பாரதி கண்ணம்மா’ தொடரில் பயங்கர வில்லியாக நடித்திருந்தவர் ஃபரீனா. இவரை வென்பா என்றால் எல்லோருக்கும் தெரியும். தனக்கு குழந்தை பிறப்பதற்கு சில நாட்கள் முன்பு வரை, ஃபரீனா பாரதி கண்னம்மா தொடரில் நடித்துக்கொண்டிருந்தார். குழந்தை பிறந்த பிறகும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது பாரதி கண்ணம்மா தொடரின் 2ஆம் பாகத்தில் வில்லியாக நடித்து வரும் இவர் அபி டெய்லர் எனும் தொடரிலும் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துக்கொண்டிருக்கிறார். 

நந்திதா ஜெனிஃபர்: 

பாக்கியலக்‌ஷ்மி தொடரில் முதன் முதலில் ராதிகா கதாப்பாத்திரத்தில் நடித்தவர் நந்திதா ஜெனிஃபர். இவர் கர்பமாக இருக்கும் போது அம்மன் மற்றும் பாக்கியலக்‌ஷ்மி தொடரில் மாறி மாறி நடித்து கொண்டிருந்தார். ஆனால், ரசிகர்கள் சிலர் இவரது கதாப்பாத்திரத்தை பழிக்க ஆரம்பித்தனர். இதனால், பயந்து போன இவர் அந்த தொடரில் இருந்து விலகி தன் குழந்தையின் மீது கவனம் செலுத்தினார். 

ஹேமா ராஜ்குமார்: 

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தின் முக்கிய கதாப்பாத்திரம் மீனாட்சி. இதில் ஹேமா ராஜ்குமார் நடித்து வருகிறார். இவர் கர்பமாக இருப்பதை வைத்து இந்த சீரியலில் புதிய ட்விஸ்டை உருவாக்கினர். இவருக்கு படப்பிடிப்பு தளத்திலேயே வளைகாப்பு நடத்தப்பட்டு அது சீரியலிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஹேமா, தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார். 

மேலும் படிக்க | ஜெயிலர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! இரண்டு OTT தளங்களில் சூப்பர்ஸ்டாரை ரசிக்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News