பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து கோபி விலகல்: ரசிகர்கள் அதிர்ச்சி

Baakiyalakshmi Serial Update: பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலமான கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஸ் சீரியலில் இருந்து தான் விலகியுள்ளதாக தெரிவித்துல்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 25, 2023, 10:02 AM IST
  • பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து கோபி வெளியேற இது தான் காரணம்.
  • கண்கலங்கி வெளியிடப்பட்ட வீடியோ வைரல்.
  • சீரியலில் தற்போது எதிர்பார்க்காத பல திருப்பங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து கோபி விலகல்: ரசிகர்கள் அதிர்ச்சி title=

திரைப்படங்களுக்கு நிகராக சீரியல்களை களமிறங்கி பலரையும் கவர தொடங்கிவிட்டன. அந்த வகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இரவு ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகள் மட்டுமல்ல பல ஆண் மகன்களும் அடிமை என்றே கூறலாம். பாக்கியாவிற்கும், எழிலுக்கும் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேபோல கோபிக்கும் ஏரளமான ஆண் ரசிகர்கள் உள்ளனர். 

பெண்களுக்கு ஊக்கம் கொடுக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடிக்கும் சதீஷ் திடீரென்று வெளியிட்ட வீடியோவால் ரசிகர்களின் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதன்படி பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து கோபி விலகப் போவதாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார். விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கும் சீரியலில் இந்த திடீர் முடிவு எடுக்க என்ன காரணம் என்று அந்த வீடியோவில் கோபி என்கிற சதீஷ் கூறி இருக்கிறார்.

மேலும் படிக்க | ஜியோ சினிமாவில் இந்த 10 சூப்பர் ஹிட் படங்களை இலவசமாக பார்க்கலாம்!

நான் சொல்ல போறதை கேட்டு உங்களுக்கு கோபம் எரிச்சல் வருத்தம் எல்லாம் வரலாம் ஆனால் எனக்கும் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் இதை செஞ்சுதான் ஆக வேண்டும். இன்னும் கொஞ்ச நாட்களில் நான் இந்த சீரியலை விட்டு விலகப் போகிறேன். சதீஷ் ஆகிய நான் கோபியாக நடித்துக் கொண்டிருக்கிற இந்த கேரக்டரை விட்டு விலகுகிறேன். காரணங்கள் பல இருக்கு. ஆனா கொஞ்சம் பர்சனல் ரீசன்னும் இருக்கிறது. எனக்கு இந்த வாய்ப்பு தந்த விஜய் டிவிக்கு மிகவும் நன்றி. நான் எனக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக நடித்து முடித்து இருக்கிறேன். இதனால் எனக்கு அன்பு கொடுத்த உங்களுக்கு நன்றி என்று சதிஷ் சொல்லி வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

இதற்கிடையில் தற்போது  பாக்யாவின் வீட்டிற்கு வந்து ராதிகாவும் தங்கிவிடுகிறார், இதனால் வீட்டில் பிரச்சனை அதிகமாகிவிடுகிறது. இனி ராதிகா கொடுக்கும் டார்ச்சரால் பாக்யா வீட்டை விட்டுவிட்டு போய்விடுவாரா? அல்லது ராதிகா வீட்டை விட்டு போவாரா..மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து கோபியை பாடாய படுத்துவார்களா என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | விதிமுறைகளை மீறிய கேப்டன் மில்லர் படக்குழு? அடுக்கடுக்காக வரும் புகார்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News