தேசிய விருது வென்ற படங்களின் லிஸ்ட்..! தமிழ் படங்களுக்கு இத்தனை விருதுகள் தானா..?

69th National Film Awards 2023: 2021ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் சில தமிழ் படங்களுக்கு மட்டுமே விருது கிடைத்துள்ளன.   

Written by - Yuvashree | Last Updated : Aug 25, 2023, 06:40 AM IST
  • 69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதில் சில தமிழ் படங்கள் விருது பெற்றுள்ளன.
  • முழு விவரங்கள் உள்ளே...
தேசிய விருது வென்ற படங்களின் லிஸ்ட்..! தமிழ் படங்களுக்கு இத்தனை விருதுகள் தானா..?  title=

இந்திய திரையுலகில் 2021ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கான தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக சில தமிழ் படங்களும் தேர்வு செய்யப்பட்டன. ஆனால், எதிர்பார்த்த எந்த படங்களுக்கும் விருது கிடைக்காமல் போயுள்ளது. 

தமிழ் படங்களுக்கான விருது..

தேசிய விருதுக்காக பல தமிழ் படங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஆனால், அதில் சில படங்களுக்கு மட்டுமே விருதுகள் கிடைத்துள்ளன. 

>Non-Feature film வகையில், சிறந்த படிப்பினைக்கான படத்திற்கான விருதினை ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ என்ற படம்  பெற்றுள்ளது. 

>சிறந்த தமிழ் படத்திற்கான விருதினை ‘கடைசி விவசாயி’ படம் பெற்றுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த படத்தை எம்.மணிகண்டன் இந்த படத்தினை இயக்கியிருந்தார். 

>முழு நீள திரைப்படத்தில் சிறந்த பாடகிக்கான விருதினை “இரவின் நிழல்” திரைப்படத்திற்காக ஸ்ரேயா கோஷல் பெற்றுள்ளார். இந்த படத்தினை பார்த்திபன் இயக்கி நடித்திருந்தார். Non-linear வடிவில் உருவான திரைப்படம் இது. ஸ்ரேயா கோஷல் இந்த படத்தில் மாயவா சாயவா என்ற பாடலை பாடியிருந்தார். 

>குறும்படத்திற்கான சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை ஸ்ரீகாந்த் தேவா பெற்றுள்ளார். இந்த விருது அவருக்கு ‘கருவறை’ படத்திற்காக கிடைத்துள்ளது. 

மேலும் படிக்க | சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழா நாளை நடக்கிறது..! சிறப்பு விருந்தினர் இவரா!

சிறந்த நடிகருக்கான விருது..

சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை அல்லு அர்ஜுன் பெற்றிருக்கிறார். புஷ்பா 2 படத்தில் நாயகனாக நடித்ததற்காக இவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. புஷ்பா 2 படத்தினை சுகுமார் இயக்கியிருந்தார். 

சிறந்த இசையமைப்பாளருக்கான விருது..

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது, புஷ்பா 2 படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு கிடைத்துள்ளது. 

சிறந்த நடிகைக்கான விருது..

சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை ஆலியா பட் பெற்றுள்ளார். ‘கங்குபாய் கத்தியவாடி’ படத்திற்காக இவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. மிம்மி படத்திற்காக கிருத்தி சனோனுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. 

ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு மட்டும் 6 விருதுகள்..

ஆஸ்கர் விருது வாங்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு மொத்தம் ஐந்து தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. 

-சிறந்த நடன கலைஞருக்கான விருது

-சிறந்த சண்டை காட்சிகளுக்கான விருது

-சிறந்த ஸ்பெஷல் எஃபெக்டிற்கான விருது

-சிறந்த பிண்ணனி இசைக்கான விருது

-சிறந்த பிரபலமான படத்திற்கான விருது

-சிறந்த பிண்னனி பாடகர் விருது

என மொத்தம் 6 விருதிகளை ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தட்டிச்சென்றுள்ளது. 

ரசிகர்கள் ஏமாற்றம்..

2021ஆம் ஆண்டு தமிழில் வெளியாகியிருந்த இன்னும் சில படங்களும் தேசிய விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக ஜெய் பீம், கர்ணன் உள்ளிட்ட படங்களுக்காக விருது கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அப்படி எந்த விருதும் ரசிகர்கள் எதிர்பார்த்த படங்களுக்கு கிடைக்காததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

மேலும் படிக்க | 10 ஆண்டுகளில் பல பாடகர்களை திரையுலகிற்கு அறிமுகம் செய்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News