இயக்குனருக்கும் மகேஷ் பாபுவுக்கும் இடையே மோதல்? சிக்கலில் SSMB 28!

Mahesh Babu Next Movie: மகேஷ் பாபுவின் 28-வது படமான 'எஸ்எஸ்எம்பி 28' வெளியாவதில் சிக்கல் இருப்பதாக பரவி வரும் செய்திகளுக்கு படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி மறுப்பு தெரிவித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : May 2, 2023, 08:11 AM IST
  • த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு 'எஸ்எஸ்எம்பி 28' படத்தின் நடிக்கிறார்.
  • மகேஷ் பாபுவின் 'எஸ்எஸ்எம்பி 28' படத்திற்கு சிக்கல் இருப்பதாக வதந்திகள் பரவியுள்ளது.
  • 'எஸ்எஸ்எம்பி 28' படம் குறித்து வெளியான வதந்திகளுக்கு தயாரிப்பாளர் விளக்கம் கொடுத்துள்ளார்.
இயக்குனருக்கும் மகேஷ் பாபுவுக்கும் இடையே மோதல்? சிக்கலில் SSMB 28! title=

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் என்று ரசிகர்கள் கொண்டாடும் மகேஷ் பாபுவின் 'எஸ்எஸ்எம்பி 28' படம் தான் இப்போது தெலுங்கு திரையுலகில் டாக் ஆஃப் தி டவுன் ஆக மாறியுள்ளது.  மகேஷ் பாபுவின் 28வது படமான 'எஸ்எஸ்எம்பி 28' ஆரம்பத்திலிருந்தே பேசுபொருளாக இருந்து வருகிறது.  ஆரம்பத்தில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது, அதன்பின்னர் படம் பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாமல் இருந்து வந்தது.  இதனால் படம் கைவிடப்பட்டு விட்டதோ என ரசிகர்கள் வருத்தப்பட்ட நிலையில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வீடியோ வாயிலாக வெளியிட்டு ரசிகர்களை திருப்திபடுத்தியது. தற்போது மீண்டும்  'எஸ்எஸ்எம்பி 28' படத்தால் தெலுங்கு திரையுலகில் பரபரப்பான பேச்சுக்கள் எழுந்து வருகிறது.  அதாவது நடிகர் மகேஷ் பாபு சில காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டும் என்று கேட்டிருப்பதால் படத்தின் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவியது.  

மேலும் படிக்க | 20க்கும் மேற்பட்ட படங்கள்..2026-ல் மாஸான அறிவிப்பு: சரத்குமார் பரபரப்பு பேட்டி

ஆனால் படத்தின் தயாரிப்பாளர் சூர்யதேவரா நாக வம்சி இந்த செய்தி வதந்தி என்று கூறி மறுத்துள்ளார்.  மேலும் எந்த காட்சிகளும் மீண்டும் எடுக்கப்படவில்லை, ஏற்கனவே படமாக்கப்பட்ட காட்சிகள் அப்படியே தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.  மகேஷ் பாபு மீண்டும் சில காட்சிகளை எடுக்க சொன்னதாக  வதந்திகள் பரவியதையடுத்து, மேலும் சில வதந்திகள் பரவியுள்ளது.  அதாவது இந்த கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மகேஷ் பாபு படப்பிடிப்புக்கு வர மறுத்துவிட்டதாகவும் செய்திகள் பரவியது.  அதனைத்தொடர்ந்து இந்த செய்தியும் வதந்தியே என படக்குழு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.  இதுபோன்று தொடர்ந்து 'எஸ்எஸ்எம்பி 28' படம் பற்றிய வதந்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும் சூழலில், படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி தனது ட்விட்டர் பக்கத்தில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.  

அவரது ட்வீட்டில், ''இந்த வதந்தி பரப்புபவர்கள் ஒரு பெரிய முடிவை எடுத்து வதந்திகளைப் பரப்புவது போன்ற திரைப்படங்களைத் தயாரித்தால், தொழில்துறையினர் நன்கு பயனடையலாம்.  #SSMB28 நிச்சயம் பிளாக்பஸ்டர் படமாக அம்மையும் என்று நாங்கள் நம்புகிறோம் மற்றும் விரும்புகிறோம்.  இந்த படம் 2024ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ரிலீஸ் ஆகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  நாங்கள் என்ன செய்ய போகிறோம் என்பதை மே 31 வரை காத்திருந்து பாருங்கள், இந்த அறிக்கையில் எவ்வித கற்பனை கவிதையும் இல்லை என்று கூறியுள்ளார்.  'எஸ்எஸ்எம்பி 28' படம் வெளியாவதற்குள் என்னென்ன சவால்களை சந்திக்கப்போகிறது என்று தெரியவில்லை.  ஸ்கிரிப்ட் மாற்றம், இசை அமைப்பாளர் மாற்றம் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் மாற்றம் என தொடர்ந்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றது.  

இப்படத்தின் பணிகள் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது.  இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் ஸ்ரீலீலா மற்றும் பூஜா ஹெக்டே உள்ளிட்ட நடிகைகள் இஇடம்பெற்றனர்.  மகேஷ் பாபு திருப்தியடையாததால் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஸ்டண்ட் மாஸ்டர்கள் மாற்றப்பட்டதாகவும், முன்பு படமாக்கப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகள் நீக்கப்பட்டதாகவும், இதனால் படக்குழுவிற்கு ரூ.5 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.  அடுத்ததாக வணிக வளாகம் ஒன்றில் எடுக்கப்பட்ட காட்சிகள் படத்தின் இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுக்கு திருப்தியளிக்காததால், அந்த காட்சியை நீக்க அவர் விரும்புவதாகவும், இதனால் படத்திற்கு சிக்கல் வரும் எனவும் செய்திகள் வெளியானது.  ஆனால் இந்த காட்சி மகேஷ் பாபுவுக்கு திருப்தியாக இருக்கிறதாம், எனவே காட்சிகள் நீக்கப்பட வேண்டுமா அல்லது அப்படியே இருக்க வேண்டுமா என இயக்குனரிடமும், நடிகரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.  மகேஷ் பாபு மற்றும் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரின் எதிர்பார்ப்புகளால் 'எஸ்எஸ்எம்பி 28' படம் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியானது.  இருப்பினும் படத்தின் தயாரிப்பாளர் சூர்யதேவரா நாக வம்சி இந்த வதந்திகள் அனைத்தையும் மறுத்துள்ளார்.

மேலும் படிக்க | அஜித் ’V’ என்ற எழுத்தில் படங்களின் பெயர்களை வைக்க என்ன காரணம்? மறைந்திருக்கும் ரகசியம் என்ன?

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News