விஜய் டிவி சீரியல் நடிகர்களின் சம்பள விவரம்.. இவருக்கு தான் டாப் பேமண்ட்

Salary Details Of Vijay TV Actors: விஜய் டிவி சீரியல் நடிகர்கள் வாங்கும் சம்பளம் விவரம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 2, 2023, 12:06 PM IST
  • ஈரமான ரோஜாவே 2 சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
  • சின்னத்திரை நாயகனாக வலம் வருகிறார் விஜே விஷால்.
  • முன்னணி சீரியலாக விளங்கும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.
விஜய் டிவி சீரியல் நடிகர்களின் சம்பள விவரம்.. இவருக்கு தான் டாப் பேமண்ட் title=

விஜய் டிவி சீரியல் நடிகர்களின் சம்பள விவரம்: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும், அனைத்து சீரியல்களுக்கும் மக்களிடையே எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. இருப்பினும் டி.ஆர்.பி ரேட்டிங்கை பிடிப்பதற்காக சன், ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ் போன்ற தொலைக்காட்சிகளும் அவ்வப்போது புது புது சீரியல்களை வெளியிட்டு வருகின்றது. 

விஜய் டிவி
அந்தவகையில் விஜய் டிவியில் அடுத்தடுத்த வெற்றிகளை தொடர்கள் குவித்து வருகின்றன. இதில் குறிப்பாக பாக்கியலட்சுமி, ஈரமான ரோஜாவே சீசன் 2, பாண்டியன் ஸ்டோரேஸ் போன்ற தொடர்கள் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளன. வித்தியாசம் வித்தியாசமான நிகழ்ச்சிகளை காண்பதில் ரசிகர்களின் ஆர்வம் இந்த சேனல்களை மேலும் சிறப்பான நிகழ்ச்சிகளை கொடுக்க வைக்கின்றன. மேலும் வெள்ளித்திரையை விட சின்னத்திரையை ரசிக்கும் ரசிகர்களின் பட்டாளம் அதிகமாகி வருகிறது. இதனால் டிஆர்பியும் அதிகரிக்கிறது. அத்துடன் ரசிகர்களின் பேவரட் சேனலாக விஜய் டிவி விளங்கி வருகிறது.

விஜய் டிவி சீரியல் பிரபலங்களின் சம்பளம்
இந்நிலையில் விஜய் டிவி சீரியல் நடிகர்கள் வாங்கும் சம்பளம் விவரம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதன் முழுமையான விவரங்களை இந்த பதிவில் நாம் காண்போம்.

மேலும் படிக்க | திரைப்படமாக மாறுகிறது இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு..! ஹீரோ யார் தெரியுமா..?

சதீஷ்: விஜய் டிவியின் முன்னணி தொடராக பாக்கியலட்சுமி தொடர்ந்து நிலைக் கொண்டுள்ளது. குறைவான கேரக்டர்களுடன் நிறைவான எபிசோட்களை கொடுத்துவரும் இந்தத் தொடர் ரசிகர்களின் பேவரைட்டாக தொடர்ந்து உள்ளது. அந்த வகையில்  கோபி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சதீஷிற்கு ஒரு நாளைக்கு 12,000 ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்படுகிறதாம். 

ஸ்டாலின் முத்து: சின்னத்திரை ரசிகர்களிடையே முன்னணி சீரியலாக விளங்கும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் டாப் லிஸ்டில் இருந்து கொண்டிருக்கிறது. அதன்படி பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூத்த அண்ணனான மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஸ்டாலின் முத்து, ஒரு நாளைக்கு ரூ. 35,000 சம்பாதிக்கிறார்.

சித்தார்த்: பொதுவாக ஒரு சீரியல் அல்லது நிகழ்ச்சி ஹிட் ஆகிவிட்டால் அதை தொடர்ந்து இரண்டாவது பாகம் வருவது இயல்பானது தான். அதுபோல இப்பொழுது விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீரியலில் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. காதல் கதையை மையப்படுத்தி உருவாகிக் கொண்டிருக்கும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில், பிரியா கதாபாத்திரத்தில் அசத்திக் கொண்டிருக்கிறார் பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கும் சித்தார்த். எனவே இந்த சீரியலில் இவருக்கு ஒருநாள் சம்பளமாக  15,000 முதல் 20,000 வரை வழங்கப்படுகிறது என கூறப்படுகிறது.

திரவியம்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் திரவியம் நடித்து வருகிறார். ஈரமான ரோஜாவே பாகம் ஒன்றை விட இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்த சீரியலில் திரவியம் வாங்கும் ஒருநாள் சம்பளம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இவருக்கு ஒரு எபிசோடுக்கு 15,000 முதல் 22,000 வரை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

விஜே விஷால்: பெண்களின் ஃபேவரெட் சின்னத்திரை நாயகனாக வலம் வருகிறார் விஜே விஷால். பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் இளைய மகனாக எழில் என்ற ரோலில் நடிக்கிறார். இவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள் உள்ளனர். பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா, கோபிக்கு பிறகு ரசிகர்கள் பெரிதும் விரும்பும் ரோல் எழில். அம்மாவுக்கு துணையாக நிற்கும் மிகச் சிறந்த பையன் ரோல். விஜேவாக தனது பயணத்தை தொடங்கிய விஷால் இன்று சின்னத்திரை நாயகனாக வலம் வருகிறார். இந்நிலையில் பாகியலட்சுமி சீரியலில் இவருக்கு ஒரு நாளைகக்கு 10,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | சமந்தாவிற்கு ஜோடியாக நடிக்கும் சந்தானம்..? ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ நாயகன் சொன்ன சூப்பர் தகவல்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News