விஜய் டிவி சீரியல் நடிகைளின் சம்பள விவரம்.. யாருக்கு அதிக பேமண்ட்? இதோ விவரம்

Salary details of Vijay TV serial celebrities: விஜய் டிவி சீரியல் பிரபலங்களின் சம்பள விவரங்களை இந்த பதிவில் நாம் காண்போம். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 2, 2023, 11:47 AM IST
  • விஜய் டிவி சீரியல் பிரபலங்களின் சம்பளம்.
  • சுஜிதா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
  • சன் டிவியில் தொகுப்பாளினியாக தன் திரைப்பயணத்தை தொடங்கிய நக்‌ஷத்ரா நாகேஷ்.
விஜய் டிவி சீரியல் நடிகைளின் சம்பள விவரம்.. யாருக்கு அதிக பேமண்ட்? இதோ விவரம் title=

விஜய் டிவி சீரியல் பிரபலங்களின் சம்பள விவரம்: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும், அனைத்து சீரியல்களுக்கும் மக்களிடையே எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. இருப்பினும் டி.ஆர்.பி ரேட்டிங்கை பிடிப்பதற்காக சன், ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ் போன்ற தொலைக்காட்சிகளும் அவ்வப்போது புது புது சீரியல்களை வெளியிட்டு வருகின்றது. 

விஜய் டிவி
அந்தவகையில் விஜய் டிவியில் அடுத்தடுத்த வெற்றிகளை தொடர்கள் குவித்து வருகின்றன. இதில் குறிப்பாக பாக்கியலட்சுமி, ஈரமான ரோஜாவே சீசன் 2, பாண்டியன் ஸ்டோரேஸ் போன்ற தொடர்கள் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளன. வித்தியாசம் வித்தியாசமான நிகழ்ச்சிகளை காண்பதில் ரசிகர்களின் ஆர்வம் இந்த சேனல்களை மேலும் சிறப்பான நிகழ்ச்சிகளை கொடுக்க வைக்கின்றன. மேலும் வெள்ளித்திரையை விட சின்னத்திரையை ரசிக்கும் ரசிகர்களின் பட்டாளம் அதிகமாகி வருகிறது. இதனால் டிஆர்பியும் அதிகரிக்கிறது. அத்துடன் ரசிகர்களின் பேவரட் சேனலாக விஜய் டிவி விளங்கி வருகிறது.

விஜய் டிவி சீரியல் பிரபலங்களின் சம்பளம்
இந்நிலையில் விஜய் டிவி சீரியல் பிரபலங்களின் சம்பள விவரங்களை இந்த பதிவில் நாம் காண்போம்.

மேலும் படிக்க | நடிகர் பிரபாஸின் பேஸ்புக் பக்கம் ஹேக்..! ஷாக்கில் ரசிகர்கள்..!

சுஜிதா தனுஷ்: சுஜிதா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் இவர் வெள்ளித்திரை நடிகையாக நடித்து வந்தார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒலிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார். இதில் தனம் என்ற ரோலில் நடித்து வருகிறார். சுஜிதா தனுஷ் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு கை ஓசை என்ற தொடரில் நடித்தார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் இவருக்கு ஒருநாள் சம்பளம் ரூ. 15,000 என கூறப்படுகிறது.

சுசித்ரா: விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு அறிமுகமே தேவையில்லை. டி.ஆர்.பி போட்டியில் மற்ற சேனல்களில் ஒளிப்பரப்பப்படும் சீரியல்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதில் பாக்யா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்தான் சுசித்ரா. இவரது சாதுவான மொழிநடை அவரை அந்தக்கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறது. இவருக்கு சமூகவலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் கன்னட நடிகையான இவருக்கு ஒருநாள் சம்பளம் ரூ. 12,000 என கூறப்படுகிறது.

வினுஷா தேவி: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் தற்போது நடிகை வினுஷா தேவி நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே ஒளிபரப்பான முதல் பாகத்திலும் கண்ணம்மாவாக நடித்து வந்தார். இப்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வரும் இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.8,000 என கூறப்படுகிறது.

நக்‌ஷத்ரா நாகேஷ்: சன் டிவியில் தொகுப்பாளினியாக தன் திரைப்பயணத்தை தொடங்கிய நக்‌ஷத்ரா நாகேஷ், தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அடிக்கடி வெள்ளித்திரையிலும் முகம் காட்டுகிறார். இவர் நடித்த குறும்படங்களும் பிரபலமானவை. இவருக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் வேற . இவரின் பேச்சு ஏற்கெனவே எல்லோருக்கும் பிடித்து போக இவரின் நடிப்பும் எல்லோருக்கு ஃபேவரெட் ஆனது. படபடவென பேசுவது தான் நக்‌ஷத்ராவின் தனித்துவம். தொகுப்பாளினியாக அவர் வெற்றிபெற காரணமும் அதுதான். தற்போது விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான ’தமிழும் சரஸ்வதி’’ தொடரில் சரஸ்வதி என்னும் கேரக்டர் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். எனவே இந்த சீரியலில் இவருக்கு ஒருநாள் சம்பளமாக ரூ. 10,000 வழங்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.

ரேஷ்மா பசுபுலேட்டி: எழில் இயக்கத்தில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் சூரியின் மனைவியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவருக்கு, அதன்பின் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். அந்த சீரியல் டிஆர்பியிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. அந்த சீரியலில் ரேஷ்மா நடித்து வரும் ராதிகா என்கிற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்படி இந்த சீரியலில் இவருக்கு ஒருநாள் சம்பளமாக ரூ. 7000 வழங்கப்படுகிறது என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | மாரி செல்வராஜின் உண்மையான முகம் குறித்து கூறிய பிரபல நடிகர்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News