தளபதி 68 ஒரு டைம் ட்ராவல் படமா? வெளியான சுவாரஸ்ய தகவல்!

Thalapathy 68 Update: விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Oct 31, 2023, 07:04 AM IST
  • வசூலை குவித்து வரும் லியோ.
  • உலகம் முழுவதும் சாதனை படைத்துள்ளது.
  • 500 கோடி வசூலை நெருங்கி வருகிறது.
தளபதி 68 ஒரு டைம் ட்ராவல் படமா? வெளியான சுவாரஸ்ய தகவல்! title=

விஜய் மற்றும் வெங்கட் பிரபு முதன்முறையாக இணைந்துள்ள தளபதி 68 படத்திற்கு மிகப்பிரிய எதிர்பார்ப்பு உள்ளது.  ஒரு மாதத்திற்கு முன்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட இந்த படத்தின் பூஜை வீடியோ சமீபத்தில் வெளியானது.  வெங்கட் பிரபு இயக்கும் இந்த 'தளபதி 68' படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும், அவரது ஒரு தோற்றம் இளமையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.  இதற்காக படக்குழு அமெரிக்காவில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் அந்த பாத்திரத்திற்காக 3D VFX ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர்.  சமீபத்திய வெளியான தகவலின் படி, 'தளபதி 68' ஒரு டைம் ட்ராவல் படமாக இருக்கும் என்றும், மேலும் படத்தில் விஜய் பல காலகட்டங்களில் பயணிப்பதை பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே, இது விஜய்யின் கரியரில் ஒரு புது படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  

மேலும் படிக்க | பிக்பாஸ் 7: எவிக்ட் ஆன யுகேந்திரன்-வினுஷாவிற்கு கிடைத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஏற்கனவே சிம்புவை வைத்து வெங்கட் பிறகு இதே போன்று ஒரு படத்தை எடுத்து உள்ளார்.  அதன் மூலம் இம்ப்ரெஸ் ஆகி தான் விஜய் இந்த படத்திற்கு ஓகே சொல்லி இருப்பார் என்று கூறப்படுகிறது. 'தளபதி 68' படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தின் நடிகர்கள் மற்றும் டெக்கினிக்கல் குழுவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். படத்தின் பூஜை வீடியோவில் இந்த அறிவிப்பு வெளியாகி இருந்தது.  படத்தில் பல நட்சத்திரங்கள் விஜய்யுடன் நடிக்க உள்ளனர்.  'தளபதி 68' படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார், மேலும் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, யோகி பாபு, விடிவி கணேஷ், அஜ்மல், மோகன், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை முறையே சித்தார்த்த நுனி மற்றும் வெங்கட் ராஜன் ஆகியோர் கையாள உள்ளனர்.

மறுபுறம் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்து வருகிறது. படம் வெளியான இரண்டு வாரங்களுக்குள் இந்தியாவில் ரூ. 300 கோடியைத் தாண்டி உள்ளது. விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த லியோ அக்டோபர் 19 அன்று திரையரங்குகளில் வெளியானது. விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இணைந்து இருந்தனர். மறுபுறம் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்து வருகிறது. படம் வெளியான இரண்டு வாரங்களுக்குள் இந்தியாவில் ரூ. 300 கோடியைத் தாண்டி உள்ளது. விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த லியோ அக்டோபர் 19 அன்று திரையரங்குகளில் வெளியானது. விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இணைந்து இருந்தனர். வெளியான தகவலின் படி, லியோ படம் ஒரு வாரத்தில் ரூ. 264.25 கோடி வசூல் செய்துள்ளது. (தமிழ்: ரூ. 212.2 கோடி, தெலுங்கு: ரூ. 34.2 கோடி; இந்தி: ரூ.16.65 கோடி; கன்னடம்: ரூ.1.2 கோடி].  ஒன்பதாம் நாளில், படம் ரூ. 7.65 கோடி (தமிழ்: ₹5.9 கோடி,  தெலுங்கு: ரூ.70 லட்சம்; இந்தி: ரூ.1 கோடி; கன்னடம்: ரூ.5 லட்சம் வசூல் செய்துள்ளது. 

மேலும் படிக்க | ரஜினி - லோகேஷ் படம் குறித்து முக்கிய அப்டேட் சொன்ன மனோஜ் பரமஹம்சா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News