ரஜினி - லோகேஷ் படம் குறித்து முக்கிய அப்டேட் சொன்ன மனோஜ் பரமஹம்சா!

Thalaivar 171 Update: ரஜினி - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் 'தலைவர் 171' படம் ஐமேக்ஸ் கேமராவில் படமாக்கப்படும் என ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தெரிவித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Oct 29, 2023, 02:05 PM IST
  • தலைவர் 171 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.
  • ஐமாக்ஸ் கேமராவில் படம் எடுக்கப்பட உள்ளது.
  • அடுத்த ஆண்டு ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
ரஜினி - லோகேஷ் படம் குறித்து முக்கிய அப்டேட் சொன்ன மனோஜ் பரமஹம்சா! title=

விஜய்யின் 'லியோ' படத்திற்குப் பிறகு, ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்க உள்ள, ரஜினியின் 'தலைவர் 171' படத்தில் ஒப்பந்தம் ஆகி உள்ளார். 'தலைவர் 171' படத்தின் ஒளிப்பதிவாளராக பணி புரிய விஜய் தான் தன்னை அறிவுறுத்தினார் என்று ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா சமீபத்தில் தெரிவித்தார். விஜய்யுடன் 'லியோ' படப்பிடிப்பின் போது, ​​​​அவர் தன்னிடம் இந்த நல்ல வாய்ப்பைத் தவறவிடாதீர்கள் என்றும், கோலிவுட்டில் 'லியோ' படத்தை விட லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்தின் படம் மிகப்பெரிய படமாக இருக்கும் என்றும் விஜய் சொன்னதாக தெரிவித்தார். 'தலைவர் 171' படத்தின் கதைக்களம் குறித்து லோகேஷ் கனகராஜ் தனக்கு ஏற்கனவே விளக்கமளித்திருப்பதாகவும், இந்த படத்தில் VFX தேவைகள் அதிகம் இருக்கும் என்றும், படத்தை எடுப்பது சவாலான ஒன்றாக இருக்கும் என்றும் மனோஜ் பரமஹம்சா கூறினார். 

மேலும் படிக்க | ‘லியோ’ படத்தில் நடிக்க பிரியா ஆனந்த வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் சவாலாகவும், உற்சாகமாகவும் இருக்கும் என்றும், 'தலைவர் 171' முழுவதுமாக ஐமேக்ஸ் கேமராவில் படமாக்கப்படும் என்றும் மனோ பரம்ஹம்சா கூறினார். தற்போது இங்கு இந்த தொழில்நுட்பம் இல்லை என்றும், ஐமேக்ஸ் படங்களைச் செயலாக்கும் ஆய்வகங்களைத் திட்டமிட்டு கண்டுபிடிப்பதில் படக்குழுவினருக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
'தலைவர் 171' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் கதை 'மாநகரம்' படத்திற்கு முன்பே எழுதப்பட்டது என்றும், மேலும் ரஜினிகாந்த்க்கு இந்த படத்தின் ஸ்கிரிப்ட் மிகவும் பிடித்துவிட்டது என்றும் கூறப்படுகிறது.  இப்படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், ரஜினிகாந்த் 'தலைவர் 170' படத்திற்கான தனது பணிகளை முடித்த பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 170 திரைப்படம், முக்கிய பிரச்சனைகளை பற்றி பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா டக்குபதி, ஃபஹத் பாசில், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இந்த படங்களை தவிர ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.  விஷ்ணு விஷால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ளது.  நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படத்தை இயக்கி உள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் வெளியான லியோ படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.  2வது வாரத்திலும் ஹவுஸ் புல் காட்சிகளாக திரையரங்கம் நிறைந்துள்ளது.  உலகம் முழுவதும் 500 கோடி வசூலை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது.  இதனால் லோகேஷ் கனகராஜ் - ரஜினி படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிக அளவில் உள்ளது.  மேலும் இந்த படம் LCUல் வராது என்றும் லோகேஷ் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | பிக்பாஸ் 7 வைல்ட் கார்ட்: போட்டிக்குள் பாதியில் நுழையும் 5 பேர் இவர்கள்தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News