விக்ரம் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா... விருந்து வைத்திருப்பாரா லோகேஷ் கனகராஜ்?

விக்ரம் படம் எவ்வளவு நேரம் ஓடும் என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : May 23, 2022, 04:21 PM IST
  • விக்ரம் படத்தின் ரன்னிங் டைம் வெளியானது
  • 2 மணி நேரம் 53 நிமிடங்கள் படம் ஓடும்
  விக்ரம் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா... விருந்து வைத்திருப்பாரா லோகேஷ் கனகராஜ்? title=

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் படம் விக்ரம். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஜூன் 3ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது. 

இப்படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல என்ற சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. மேலும், மத்திய, மாநில அரசுகளை பாடல் வரிகள் மூலம் கமல் விமர்சித்திருக்கிறார் என்ற சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அவர் மீது புகாரும் அளிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே படத்தின் ஆடியோவும், ட்ரெய்லரும் கடந்த 15ஆம் தேதி வெளியானது.இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின், சிம்பு, அனிருத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த விழாவில் கமல் ஹாசன் மேடையேறி பாடல் பாடவும் செய்தார்.

Vikram

இச்சூழலில் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் நீண்ட நாள்கள் கழித்து கமல் ஹாசனை திரையில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும், லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர் என்பதை நிரூபித்துவிட்டார் என கருத்து தெரிவித்தனர்.

மேலும் படிக்க | அருள்நிதிதான் காரணம்! விக்ரம் பட இயக்குனரின் பேச்சு!

அதுமட்டுமின்றி ட்ரெய்லரையும் யூட்யூபில் பலமுறை பார்த்து ரசித்தனர். இந்நிலையில் விக்ரம் படம் ஓடும் நேரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விக்ரம் படம் 2 மணி நேரம் 53 நிமிடங்கள் ஓடவிருக்கிறது.

அதேசமயம் இவ்வளவு நீளம் தேவையா என சிலர் கேள்வி எழுப்ப, லோகேஷ் கனகராஜ் கமலின் ரசிகர் என்பதால் திகட்ட திகட்ட விருந்து வைத்திருப்பார். அதற்கு இவ்வளவு நீளம் தேவைதான் என கமல் ரசிகர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள புதிய திரைப்படங்கள்!

எது எப்படியோ மூன்று மணி நேரம் ஓடும் படத்தில் ஆண்டவரை கொண்டாட்டத்தோடு தரிசிக்கும் அளவு படம் இருந்தால் போதும் எனவும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News