மூளையில் பிரச்சினை: அர்ச்சனாவுக்கு அறுவை சிகிச்சை; ரசிகர்கள் சோகம்

பிரபல தொகுப்பாளினி அர்ச்சனாவுக்கு மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 11, 2021, 11:59 AM IST
மூளையில் பிரச்சினை: அர்ச்சனாவுக்கு அறுவை சிகிச்சை; ரசிகர்கள் சோகம் title=

தமிழில் முன்னணித் தொகுப்பாளினி VJ அர்ச்சனா. இவர் இளமை புதுமை, காமெடி டைம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி மிகவும் பிரபலமானார். சமீபத்தில் இவர் பிக்பாஸ் நான்காவது சீசனில் அர்ச்சனா கலந்துகொண்டார். தற்போது தனியார் தொலைகாட்சியில் சில முக்கிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார். 

இந்நிலையில் தற்போது தொகுப்பாளினி அர்ச்சனா (Archana) தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பதிவு  ஒன்றை வெளியிட்டுள்ளார்., அதுஇல அவர் கூறியதாவது.,

ALSO READ | செம கிளாமர் உடையில் பிக்பாஸ் ரைசா, வீடியோ வைரல்

வணக்கம் என் அன்பான இன்ஸ்டா மற்றும் FB குடும்பம், நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன் !!

''நான் எப்போதும் இதயத்திலிருந்து இயங்கும் ஒரு பெண். அதனால் என் மூளை கோபமடைந்து என் இதயத்தை விட அது வலிமையானது என்று எனக்குக் காட்ட விரும்பியுள்ளது. தற்போது அது ஒரு சிறிய பிரச்சினையைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. அது என் மண்டை ஓட்டை லேசாகக் குத்திவிட்டது. அதில் இருக்கும் ஒரு சிறு துளையை நான் அடைக்க வேண்டியுள்ளது.

 

 

எனக்கு செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவுக்கான அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. எனது மண்டை ஓட்டில் மூளைக்கு அருகில் சில விநோத வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் 11 மணி வரை அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது. அதன் பிறகு ஒரு வாரம் கழித்து வீடு திரும்புவேன். இந்தக் கட்டத்தையும் எதிர்த்துப் போராடி மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாவும் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன் இவ்வாறு அர்ச்சனா பதிவிட்டுள்ளார்.

ALSO READ | ஷிவானியின் வைரலாகும் புகைப்படம்; பிரபல நடிகரை நேரில் சந்திப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News