பிரிந்த குழந்தையுடன் சேரும் ஸ்லாத் அம்மா: கண் கலங்க வைக்கும் க்யூட் பாசமலர்கள்

விலங்குகளை ஒன்றிணைக்கும் மனித அன்பின் வெளிப்பாடு இது... சமூக ஊடகங்களில் வெளியான ஸ்லாத்களின் பாச வீடியோ 

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 29, 2022, 09:34 AM IST
  • தாயுடன் இணையும் ஸ்லாத் குட்டி
  • பாசப்பிணைப்பின் அன்பு வீடியோ வைரல்
  • மில்லியன் கணக்கானவர்களை நெகிழச்செய்த வீடியோ
பிரிந்த குழந்தையுடன் சேரும் ஸ்லாத் அம்மா: கண் கலங்க வைக்கும் க்யூட் பாசமலர்கள் title=

வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் வெளியாகும் பல வீடியோக்கள் கண்களின் நீரை வரவழைத்துவிடுகின்ரன. இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம் என்று சொன்னாலும், உணர்வுகளை தூண்டுவதற்கும், சமனப்படுத்துவதற்குமான பங்களிப்பையும் கொண்டிருக்கிறது.

இணையத்தில் பதிவேற்றப்படும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன, சில சமயங்களில் கண்ணீரை வரவழைக்கின்றன. அதில் நெகிழ்ச்சிக் கண்ணீரும், ஆனந்த கண்ணீருமே அதிகமாக இருக்கின்றன.  

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் வைரல் ஆகின்றன. அதிலும் விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்படுகின்றன. பாசப்பிணைப்பையும் உதவியின் வலிமையையும் காட்டும் ஒரு சுவாரசியமான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

மேலும் படிக்க | தாக்க வந்த புறாவுக்கு கிஸ் கொடுத்த பூனை

நமது மனம், உடல் மற்றும் ஆன்மாவை நேர்மறை ஆற்றலுடன் ரீசார்ஜ் செய்ய இயற்கை ஒரு அற்புதமான வழியை வைத்திருக்கிறது. இயற்கையின் மிக அழகான விஷயங்களில் ஒன்று விலங்குகளே அந்த அற்புதமான உயிரினம்.

விலங்குகளைப் பார்ப்பதும், ரசிப்பதும் பெரும்பாலனவர்களுக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக அவற்றின் சொந்த இடத்தில் இருக்கும்போது, விலங்குகள் செய்யும் குறும்புகளும், செய்கைகளும் மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் கொடுக்கின்றன. அதை பார்க்க, இணையம் நமக்கு நல்ல வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

பூமியில் உள்ள மிக மெதுவான மற்றும் அழகான விலங்குகளில் ஒன்றான ஸ்லாத் (sloth) எனப்படும் விலங்கின் வீடியோ இது. இந்த விலங்கை பலர் இதுவரை பார்த்திருக்க மாட்டார்கள்.

தென் அமெரிக்காவிலே வாழும் இரவிலே இரைதேடும் விலங்கு இது. நெடுநேரம் அசையாமலே இருக்கும் என்பதாலும், மிகவும் மெதுவாகவே நகரும் என்பதாலும் இதை "அசையா" கரடி என்றும் அழைக்கிறார்கள்.

மேலும் படிக்க | பதுங்குக்குழியில் பதுங்கினாலும் பாய்ந்து வேட்டையாடும் சிறுத்தையின் பாதள வேட்டை 

ஸ்லாத், தனது குழந்தையுடன் மீண்டும் இணையும் மனதைக் கவரும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளி இன்று உங்கள் முகத்தில் சிரிப்பை வரவழைக்கும். இந்த வீடியோவை ஜாகுக்வார் மீட்பு மையம் வெளியிட்டுள்ளது.

ஜாகுவார் மீட்பு மையம், வன விலங்குகளை மீட்பது, விடுவிப்பது மற்றும் மறுவாழ்வு அமைத்துக் கொடுப்பது என பல பணிகளை செய்துவரும் அமைப்பு. இந்த அமைப்பு, தங்கள் அதிகாரப்பூர்வ Instagram பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டது.

இந்த வீடியோவை நெட்டிசன்கள் மற்ற தளங்களிலும் மறுபகிர்வு செய்து வருகின்றனர். அன்பை வெளிப்படுத்தும் இந்த வீடியோ பல சமூக ஊடகங்களிலும் வைரலாகிறது.

தாய் ஸ்லாத், மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஒருவர், அதன் குழந்தையைக் கொண்டு வந்து அருகில் காட்டும்போது, குட்டியை அடையாளம் கண்டு கொள்கிறது தாய்.

மேலும் படிக்க | மணமகளின் தங்கைக்கு மாலை போட்ட மாப்பிள்ளை: ஷாக் ஆன மணமகளின் வைரல் வீடியோ 

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 81 ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் உணர்ச்சிவசப்பட்டு கமெண்டுகளை பதிவிட்டிருக்கின்றன.  

ஜாகுவார் மீட்பு மையம் அவர்களின் பதிவில், "இந்த தாயையும் குழந்தையையும் மீண்டும் இணைக்க முடிந்தது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.மே 10 ஆம் தேதி, ஊழியர்களில் ஒருவர் குழந்தை கடற்கரைக்கு அருகில் தரையில் அழுவதைக் கண்டார். அம்மா மரத்தில் இருந்தது, ஆனால் அது மர உச்சிக்கு சென்று கொண்டிருந்தது. எனவே, குட்டி ஸ்லாத்தை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்து, அதன் ஆரோக்கியத்தை உறுதி செய்துக் கொண்டோம். அதன்பிறகு குழந்தையின் அழுகையைப் பதிவுசெய்து, அம்மாவின் கவனத்தை ஈர்க்க மரத்தின் அருகே சென்று விளையாடினோம், அம்மா குழந்தைக்காக வரும் வரை நாங்கள் பொறுமையாகக் காத்திருந்தோம். இறுதியில் அம்மாவிடம் சேர்த்துவிட்டோம்” என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. 

"சில ஆண்டுகளுக்கு முன்பு JRC இந்த முறையை உருவாக்கியது, அம்மா மற்றும் குட்டி ஸ்லாத்களை மீண்டும் இணைக்க ஒவ்வொரு முறையும் இதேபோன்ற வழிமுறையை பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு முறையும் ஒரு தாயும் அவளுடைய குழந்தையும் மீண்டும் இணைவதைக் காணும் போது அது எங்கள் இதயத்தை உருக்குகிறது, ”என்று விலங்குகள் நல அமைப்பின் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பாம்புகள் பற்றிய இந்த அதிசய உண்மைகள் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News