Animal-Human Love Video: முதலையை அன்புடன் தடவிக் கொடுத்து கொஞ்சும் க்யூட் லவ் வீடியோ

Animal-Human Love Video: அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்? மனிதர்களுக்கு இடையில் மட்டும்தான் அன்பு தழைக்குமா? நீரில் வாழும் விலங்குகளுடன் மனிதர்கள் காட்டும் அன்பை காட்டும் பாச வீடியோ

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 21, 2022, 07:48 PM IST
  • முதலையின் நெகிழ்ச்சியை உணர்த்தும் வீடியோ
  • அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்
  • அன்பிற்கு பேதமில்லை: உணர்த்தும் முதலை நேசன்
Animal-Human Love Video: முதலையை அன்புடன் தடவிக் கொடுத்து கொஞ்சும் க்யூட் லவ் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை தினமும் பார்க்க முடிகிறது. இந்த வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சிரிக்க வைக்கின்றன, சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக வலைத்தளங்களில் பல வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் அன்பு வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

வைரல் வீடியோவில் மனிதனுக்கும் விலங்குக்கும் இடையிலான அன்பைக் காட்டும் தருணம் அருமையாக இருக்கிறது. சில நொடிகள் என்றாலும் அன்பை உணர்த்த ஒற்றைப் பார்வை போதுமே?

மேலும் படிக்க | சர்ப்ரைஸ் கொடுத்து சுற்றுலாப்பயணிகளை மகிழ்வூட்டிய திமிங்கல வீடியோ

ஒற்றைத் தடவலில் தனது அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்துவது மனிதனுக்கு கைவந்த கலை என்றால், விலங்குகளும் தங்கள் அன்பை உணர்த்துவதில் வல்லவை. ஆனால் அதை அனைவராலும் புரிந்துக் கொள்ள முடியுமா?

சில விநாடிகளே இருக்கும் இந்த வீடியோவில் நீர்நிலைக்குள் இருக்கும் முதலை, கரையை நோக்கி வருகிறது. கரையை நோக்கி வந்த முதலையை அன்புடன் தடவிக் கொடுக்கும் கை மட்டுமே தெரிகிறது. அன்பு செய்யும் அன்பரின் கையைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

தன்னைத் தடவிக் கொடுத்தவரின் அன்பை ஏற்று சில நொடிகள் தயங்கி நிற்கும் முதலை, சட்டென்று திரும்பி நீந்தி செல்கிறது. தன்னை கவனித்துக் கொள்ள ஒருவர் இருக்கிறார் என்ற நினைப்பு எப்போதும் ஆறுதல் கொடுக்கிறது. அது மனிதனாக இருந்தாலும் சரி, விலங்காக இருந்தாலும் சரி.

மேலும் படிக்க | பாம்புத் தோல் உரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது

இந்த உண்மையை உணர்த்தும் வைரல் வீடியோவை பார்த்து நெகிழலாம்...

அன்புக்கு உதாரணமாகும் இந்த வீடியோ பலமுறை பலரால் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு, சமூக ஊடகங்களில் வைரலாகிறது. வைரலாகும் வீடியோ உணர்வுகளை புரிந்துக் கொள்ள செய்யும் மாயத்தை நிகழ்த்துகிறது.

மனிதனின் அன்பை பார்த்து மகிழ்வது போல, விலங்குகளின் அன்பைக் காட்டும் வீடியோக்கள் இவை. இவற்றை இங்கே பார்த்து மகிழவும்.

சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்களில் வித்தியாசமானவற்றை அவ்வப்போது உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறோம். 

மேலும் படிக்க | ஆமைகளுக்குள் நடந்த வித்தியாசமான போட்டி! வைரலாகும் வீடியோ! 

மேலும் படிக்க | முட்டையைப் பார்த்தா கோபம் வரலாமா: சீறும் சர்ப்பங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News