‘அந்த’ விஷயத்தை கேட்டு வெறித்தனமாக சிரித்த மணமகள்: மேட்டர் இதுதான்!! வைரல் வீடியோ

Funny Marriage Video: மணமேடையில் திடீரென மணப்பெண் வெறித்தனமாக சிரிக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 12, 2023, 06:13 PM IST
  • சமூக ஊடகங்களில் பல வகையான திருமண வீடியோக்கள் தொடர்ந்து வெளிவருகின்றன.
  • திருமண வீடியோக்களில் சில சமயம், மணமக்களும், சில சமயம் அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களும் செய்யும் வேலைகள் நமக்கு வியப்பையும் சிரிப்பையும் வரவழைக்கின்றன.
  • சமீபத்திலும் அப்படி ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது.
‘அந்த’ விஷயத்தை கேட்டு வெறித்தனமாக சிரித்த மணமகள்: மேட்டர் இதுதான்!! வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

இணையத்தில் பல வகையான திருமண வீடியோக்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. திருமண வீடியோக்களில் சில சமயம், மணமக்களும், சில சமயம் அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களும் செய்யும் வேலைகள் நமக்கு வியப்பையும் சிரிப்பையும் வரவழைக்கின்றன. சமீபத்திலும் அப்படி ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது. 

இந்த வேடிக்கையான வீடியோவில் மணமகள் திருமண விழாவின் போது திருமணம் செய்துவைக்க வந்த புரோகிதரின் வார்த்தைகளைக் கேட்டு வெறித்தனமாக சிரிப்பதைக் காண முடிகின்றது. அவர் சிரிப்பதை நிறுத்துவதாகவே தெரியவில்லை. 

பொதுவாக, திருமணத்தின் போது பல வகையான சடங்குகள் செய்யப்படுகின்றன. திருமணத்தின் முக்கிய சடங்குகளில் தாலி கட்டும் சடங்கும், ஹோம அக்னியை சுற்றி வலம் வருவது, மாலை மாற்றுவது ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இதனுடன், பல திருமணங்களில், புரோகிதர் இந்த சடங்குகளுக்கான விளக்கங்களை அளிப்பதையும் காண முடிகின்றது. அப்படி திருமணத்தில் புரோகிதர் சொல்லும் விளக்கத்தை கேட்டு பல முறை மணமக்கள் சிரிப்பதுண்டு. அப்படி ஒரு காட்சிதான் இந்த வீடியோவிலும் காணப்படுகின்றது. 

மேலும் படிக்க | 20 அடி நீள மலைப்பாம்பை விழுங்கிய 25 அடி நீள விஷப் பாம்பு: வைரல் வீடியோ

மணமகளின் வெறித்தனமான சிரிப்பை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by subh vivah (@shubhavivahh)

பயங்கரமாக சிரித்த மணமகள் 

இந்த வீடியோவில், மணமக்கள் திருமண மண்டபத்தில் அமர்ந்திருப்பதை காண முடிகின்றது. அப்போது திருமணத்தின் ஏழு உறுதிமொழிகளை எடுத்துரைக்கும் போது, புரோகிதர், மாப்பிள்ளையிடம், நீங்கள் சம்பாதித்து, சம்பளத்தை மனைவி கையில் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார். இதைக் கேட்ட மணமகள் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் வெறித்தனமாகச் சிரிக்கத் தொடங்குகிறார். புரோகிதர் இப்படி சொன்னதும் மணமகளால் தனது மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது தெரிகிறது.

பயனர்கள் வேடிக்கையான கமெண்டுகளை வழங்குகிறார்கள்

இந்த வீடியோ shubhavivahh என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு செய்தி எழுதும் வரை 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ‘பாவம் அந்த மாப்பிள்ளை’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். ‘இந்த பெண் ஒரு பணத்தாசை பிடித்தவளோ...பாவம் மாப்பிள்ளை’ என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். 

மேலும் படிக்க | ‘வாடா செல்லம்’: நபர் சொல்வதை அப்படியே கேட்டு கையில் வந்த பாம்பு, வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News