தூக்கத்தெல்லாம் விட்டுக்கொடுக்க முடியாது: மாஸ் மணமகள்.. வைரல் வீடியோ

Funny Marriage Video: தனது திருமணத்தில் மணமகள் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படி என்னதான் செய்தார்? இங்கே பாருங்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 14, 2023, 05:35 PM IST
  • சமூக ஊடகங்களில் தினமும் பல வேடிக்கையான திருமண வீடியோக்கள் பகிரப்படுகின்றன.
  • இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசில் இருக்கின்றன.
  • தற்போது மணமகளின் ஒரு விசித்திரமான வீடியோ வெளியாகியுள்ளது.
தூக்கத்தெல்லாம் விட்டுக்கொடுக்க முடியாது: மாஸ் மணமகள்.. வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

சமூக ஊடகங்களில் தினமும் பல வேடிக்கையான திருமண வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசில் இருக்கின்றன. சில சமயம் திருமண ஜோடிகள் அழகாக நடனமாடுவதையும், சில சமயம் காதல் வசனங்கள் பேசுவதையும், சில சமயம் முத்தங்களை பரிமாறிக்கொள்வதையும் நாம் பார்த்துள்ளோம். ஆனால், தற்போது மணமகளின் ஒரு விசித்திரமான வீடியோ வெளியாகியுள்ளது. இதைப் பார்த்தால் கண்டிப்பாக நமக்கு ஆச்சரியம்தான் மேலோங்கும். 

சமீபத்தில் ஒரு கண்கவர் வீடியோ இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது. இது ஒரு மணமகள் தனது திருமணத்தின் நடுவில் படுத்து தூங்குவதை காண முடிகின்றது. இந்த வினோதமான காட்சி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது மற்றொரு முக்கியமான விஷயத்தையும் தெளிவுபடுத்துகின்றது. கொண்டாட்டங்கள் எவ்வளவு முக்கியமானவையாக, வெறித்தனமாக இருந்தாலும், சுய பாதுகாப்பும், அக்கறையும் தேவை என்பதை இந்த வீடியோ தெளிவுபடுத்துகின்றது. 

அழகாக உடையில் தூங்கிய மணப்பெண்

சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்ட இந்த  வீடியோ -வில், ஒரு மிக அழகான லெஹங்கா அணிந்து, முழு ஒப்பனைகளையும் செய்து கொண்டு, ஒரு மணப்பெண் நன்றாக தூங்கிக்கொண்டு இருப்பதை காண முடிகின்றது. தனது வாழ்வின் மிக முக்கியமான நாள் அன்று மணமகளின் இந்த செயல் ஆச்சரியத்தை அளித்தாலும், இது கியூட்டாகவும் உள்ளது. திருமண சடங்குகளுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவர் அமைதியாக தூங்குகிறார். கொண்டாட்டங்களின் சலசலப்புகளுக்கு இடையில் அவர் ஒரு அமைதியான தருணத்தில் தஞ்சம் அடைகிறார்.

ஒருபுறம் நடக்கும் சடங்குகள்

மணமகள் ஒரு புறம் உறங்கிக்கொண்டு இருக்க, மறுபுறம் திருமண சடங்குகள் மிக ஜரூராக நடந்து வருகின்றன. இது பார்ப்பதற்கு மிக வேடிக்கையாக உள்ளது. ஆனால், இதில் நல்ல விஷயம் என்னவென்றால், சடங்கு, சம்பிரதாயம் என்று கூறி யாரும் அந்த மணப்பெண்ணை எழுப்பவில்லை. அலுப்பில் உறங்கும் மணப்பெண்ணை யாரும் தொந்தரவு செய்யவில்லை. இது பாராட்டத்தக்க விஷயமாகும். 

மேலும் படிக்க | வாடா நீயா நானா பாத்திரலாம்.. பாம்புடன் மல்லுக்கட்டும் முயல்: வீடியோ வைரல்

தன் திருமணத்தின் உறங்கும் மணப்பெண்ணின் வீடியோவை இங்கே காணலாம்:

வீடியோ வைரல் ஆனது:

இந்த வீடியோ சமூக ஊடகத் தளமான இன்ஸ்டாகிராமில், candid_impressions என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ 7.5 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களையும் 193K லைக்குகளையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ஒரு மணமகள் தனது திருமணத்தின் போது சிறிது நேரம் தூங்கும் வைரலான வீடியோ உலகம் முழுவதும் உள்ள இணைய பயனர்களைக் கவர்ந்துள்ளது. ‘இப்படித்தான் யாரைப் பற்றியும் கவலைக்ப்படாமல் தனக்கு தோன்றும் நியாயமான விஷயங்களை செய்ய வேண்டும்’ என ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | புதுமணத் தம்பதிகள் செய்த வேலை.. பார்க்கவே வெக்கமா இருக்கு: வேறலெவல் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News