புதுமணத் தம்பதிகள் செய்த வேலை.. பார்க்கவே வெக்கமா இருக்கு: வேறலெவல் வைரல் வீடியோ

Honeymoon Video: சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக வேண்டும் என்பதற்காக தினமும் ஏதாவது ஒரு வினோதத்தை மக்கள் செய்து கொண்டே இருக்கிறார்கள். இந்த வீடியோவும் பார்ப்பதற்கு அப்படி தான் இருக்கிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 14, 2023, 02:56 PM IST
  • இன்றைய வைரல் வீடியோ
  • மணமக்கள் ஜாலியாக இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
புதுமணத் தம்பதிகள் செய்த வேலை.. பார்க்கவே வெக்கமா இருக்கு: வேறலெவல் வைரல் வீடியோ title=

மணமக்களின் இன்றைய வைரல் வீடியோ: இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்கள் மக்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டன. சமூக வலைதளங்களில் மக்கள் தங்கள் வாழ்க்கையில் நடக்கும் சிறிய விஷயங்களை கூட பகிர்ந்து கொள்கின்றனர். அந்த வகையில் சமூக ஊடக உலகில் "வைரல்" என்கிற வார்த்தை மிகவும் பிரபலமானது. இந்த வைரல் நிகழ்வுகள் பலரை ஒரே இரவில் நட்சத்திரமாக்கியுள்ளது. ஆனால் பல நேரங்களில் இது எதிர்மறையாக பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது மணமகனும், மணமகளும் தேனிலவுக்கு சென்றதாக கூறப்படும் வீடியோ ஒன்று தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை மணமகனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஹனிமூனில் / தேனிலவில் மணமக்கள் ஜாலியாக இருக்கும் வீடியோவை இங்கே காணுங்கள்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shiwali Bhola (@shiwalibhola)

மேலும் படிக்க | அடேங்கப்பா..இது உலக மகா நடிப்பு டா சாமி! பாம்பின் வீடியோ வைரல்

பொதுவாக சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக வேண்டும் என்பதற்காக தினமும் ஏதாவது ஒரு வினோதத்தை மக்கள் செய்து கொண்டே இருக்கிறார்கள். அதன்படி இந்த வீடியோவைப் பார்த்தால் அப்படி தான் தெரிகிறது. இந்த வீடியோவுக்கு தற்போது இணையவாசிகள் அதிகம் லைக் செய்து வருகிறது. மேலும் இந்த வீடியோவில், மணமகளை இம்ப்ரஸ் செய்ய மணமகன் அனைத்து வரம்புகளையும் தாண்டியுள்ளது போல் தெரிகிறது. ஏனெனில் இப்படி ஒரு சரப்ரைஸை யார் தான் விரும்பமாட்டார்கள். இந்த சரப்ரைஸை கனடா மணமகள் வெட்கப்படுவதை வீடியோவில் காண முடிகிறது.

திருமண சீசன் நடந்துக்கொண்டிருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. இவர்கள் அனைவருக்கும் பிரபலமாக வேண்டும் என்று இது போன்ற வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். அதன்படி மணக்கோலத்தில் நடனமாடும் வீடியோவை பகிர்கின்றனர், சிலர் அங்கு நடக்கும் காமெடி சம்பவங்களை ஷேர் செய்கின்றனர். ஆனால் இந்த வீடியோ சற்று வித்தியாசமாகவே இருக்கிறது. ஏனெனில் இது ஒரு தேனிலவு வீடியோவாகும். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலான இந்த வீடியோவில், ஒரு ஹோட்டலின் நீச்சல் குளம் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதில் மணமக்களுக்காக அழகான செய்தியும் எழுதப்பட்டுள்ளது. இவர்கள் தண்ணீர் நிரம்பிய நீச்சல் குளத்திற்கு சென்று தங்களின் ரொமான்ஸை வெளிபடுத்துகின்றனர். புது மணப்பெண் வெள்ளை நிற ஆடையில் மிகவும் அழகாக இருக்கிறார். இதற்குப் பிறகு மணமகன் மணமகளுக்கு முத்தமிடுகிறார்.

இந்த நிலையில் சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ witty_wedding என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. அதுமட்டுமின்றி இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் பல வித பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்டுகளை அளித்து வீசி வருகிறார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | உயிர் தப்பிக்க ஓடும் நபர்... துரத்தும் சினம் கொண்ட யானை: பகீர் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News