'ஸ்ரீவள்ளி' பாடலால் மீண்டும் ட்ரெண்டாகிய விமான பணிப்பெண்!

ஆளில்லாத விமானத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானப் பணிப்பெண் 'புஷ்பா' படத்தில் 'ஸ்ரீவள்ளி' பாடலுக்கு நடனம் ஆட முயன்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 1, 2022, 12:24 PM IST
'ஸ்ரீவள்ளி' பாடலால் மீண்டும் ட்ரெண்டாகிய விமான பணிப்பெண்! title=

அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான 'புஷ்பா' (Pushpa) படத்தின் பாடல்கள் யாவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது, இப்படத்தின் பாடல்களுக்கு பலரும் ரீல்ஸ் செய்து வருகின்றனர்.  இப்படத்தின் பாடல்களை மட்டுமல்லாது வசனங்களையும் பலர் ரீல்ஸ் செய்து வருகின்றனர். இப்படத்தில் உள்ள 'ஸ்ரீவல்லி' பாடலில் அல்லு அர்ஜுனின் ஹூக் ஸ்டெப் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இதுபோல் பலரும் நடனமாடி இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.

ALSO READ | பானிபூரியில் சட்னி, ஐஸ்கிரீம் ஊற்றி சாப்பிடும் வைரல் வீடியோ!

இந்த ஸ்டெப் தற்போது ட்ரெண்டாகி வரும் நிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துடன் தொடர்புடைய விமானத்தில் பணி புரியும் குமார் மீனாட்சி என்ற விமான பணிப்பெண் அல்லு அர்ஜுனின் 'ஸ்ரீவல்லி' ஹூக் ஸ்டெப்பை மீண்டும் உருவாக்கும் விதமாக இவர் அந்த ஸ்டெப்பை முயற்சி செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

flight

பல ட்ரெண்டிங் பாடலை ரீல்ஸ் செய்து இணையத்தில் ட்ரெண்டாகி வரும் உமா மீனாட்சி என்ற பணிப்பெண் தான் மீண்டும் டிரெண்ட் ஆகியுள்ளார்.  அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், ஆளில்லாத விமானத்தில் ஸ்ரீவல்லி பாடலுக்கு இவர் உற்சாகமுடன் நடனமாடுகிறார். அப்பொழுது இவரது மற்றொரு காலில் அணிந்திருந்த ஷூ கழன்று விழுகிறது.  இந்தக் காட்சி சிரிப்பலைகளை ஏற்படுத்துவதாக அமைகிறது.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Uma meenakshi (@yamtha.uma)

அந்த வீடியோ உடன் அவர் "செருப்புகளை தேய்த்து இப்பாடலுக்கு நடனமாட முயற்சித்தேன், ஆனால் இதனைப் பார்க்கும் பொழுது என் கை உடைந்தது போல் தெரிகிறது" என்ற கேப்ஷனுடன் இதனை பகிர்ந்துள்ளார்.  இந்த வீடியோ இதுவரை 61,000 பார்வையாளர்களை கடந்து டிரெண்ட் ஆகி வருகிறது.  இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒருபுறம் கேலி செய்தாலும், மறுபுறம் இதனை ரசித்து வருகின்றனர்.

ALSO READ | தாய் யானையிடம் பால் குடித்த 3 வயது சிறுமி- வீடியோ வைரல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News