செயற்கைக்காலுடன் நடக்கும் யானை! மனதை வென்ற வீடியோ!

யானைப்பாகன் ஒருவர் அவர் வளர்க்கும் ஊனமுற்ற யானைக்கு செயற்கை கால் பொருத்தும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Apr 10, 2022, 07:08 PM IST
  • செயற்கை கால்களுடன் நடக்கும் யானை.
  • பாகனின் உதவியில் நடக்க முயற்சிக்கிறது.
  • இணையத்தில் வைரலாகும் வீடியோ.
செயற்கைக்காலுடன் நடக்கும் யானை! மனதை வென்ற வீடியோ! title=

மனிதர்கள் ஊனமுற்றவர்களாக இருந்தால் அவர்களுக்கு உதவ யாரேனும் முன்வருவார்கள் அல்லது அவர்களே முயற்சி செய்தி அவர்களுடைய சில தேவைகளை நிறைவேற்றி கொள்வார்கள்.  அதுவே விலங்குகளின் உடலில் ஏதேனும் குறைப்பது ஏற்பட்டால், அவற்றை கவனித்துக்கொள்ள அந்தளவிற்கு ஆள் இருக்காது.  ஆனால் இங்கு இணையத்தில் வைரலாகியுள்ள ஒரு வீடியோவில் யானையின் குறைப்பாட்டை சரிசெய்ய ஒருவர் உதவுகிறார்.  கால் இல்லாத யானை ஒன்றுக்கு செயற்கை கால் பொருத்தி நடக்க வைக்கும் யானைப்பாகனுக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க | Cobra Video: பின்னி பிணையும் நாக பாம்புகள்; இது காதலா இல்லை ஊடலா

இந்த அரிய காட்சி சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது.  தி ப்ரொஃபைல் வில் மேக்ஸ் யூ ஹேப்பி என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கும் இந்த வீடியோவில் பெரிய யானை ஒன்று மூன்று கால்களுடன் நின்று கொண்டு இருக்கிறது.  அந்த யானையின் அருகிலுள்ள பாகன் யானையின் பாதிக்கப்பட்ட காலில் ஷாக்ஸ் போன்ற ஒன்றை மாறிவிடுகிறார்.  அதனை தொடர்ந்து நடக்க உதவும் இரும்பு ஸ்டான்ட் போன்ற ஒன்றை யானையின் காலில் மாட்டிவிடுகிறார்.  யானையின் காலில் அவர் அதனை மாறியதும், யானை பாகனுக்கு பின்னே அந்த யானையும் மெதுவாக இரும்பு காலை தூக்கி வைத்து நடக்கிறது.

 

வெறும் 29 நொடிகள் கொண்ட இந்த வீடியோவை இணையத்தில் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர், அதோடு இந்த வீடியோ நாற்பத்தி ரெண்டாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது.  இந்த காட்சி பலரின் இதயங்களையும் கவர்ந்து வருகிறது.

மேலும் படிக்க |  Viral Video: 'காதலை' வெல்ல இரு ராஜநாகங்களுக்கு இடையில் நடக்கும் கடுமையான போர்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News