முதலையை கத்தியால் குத்தபோய் கையை இழந்த நபர்: பெரிய அப்பாடக்கரா இருந்தா மட்டும் இந்த வைரல் வீடியோவ பாருங்க

Scary Crocodile Attack Video: முதலையை கத்தியால் குத்த சென்ற நபருக்கு நேர்ந்த கதியை காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 30, 2023, 05:06 PM IST
  • முதலையை கத்தியால் தாக்கிய நபர்.
  • கையை கடித்துத்தின்ற நீர் அரக்கன்.
  • சினம் கொண்ட முதலையின் வீடியோவை இங்கே காணலாம்.
முதலையை கத்தியால் குத்தபோய் கையை இழந்த நபர்: பெரிய அப்பாடக்கரா இருந்தா மட்டும் இந்த வைரல் வீடியோவ பாருங்க title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

சமூக ஊடகங்களில் தினமும் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. ஆனால் இந்த வீடியோக்களில் சிலவற்றை மட்டுமே மக்கள் விரும்புகின்றனர். சில வீடியோக்கள் முற்றிலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கின்றன. இவற்றை இணையவாசிகள் மீண்டும் மீண்டும் லூப்பில் காண்கிறார்கள். இவற்றில் சில வீடியோக்கள் நம்மை அதிக அளவில் அச்சுறுத்தும் வகையிலும், அதே சமயம் பாடம் புகட்டும் வகையிலும் இருப்பதுண்டு. 

சமீபத்தில் அப்படி ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோ ஒரு முதலை தொடர்பானது. முதலையை கத்தியுடன் பின் தொடரும் ஒருவருக்கு நடக்கும் விளைவை இந்த வீடியோவில் காண முடிகின்றது. 

அந்த நபர் முதலையை நோக்கி செல்வதை பார்த்தால், அவர் அதை கொல்ல முயற்சிப்பது போல தெரிகிறது. முதலையை நோக்கி கத்தியை குறி வைத்துக்கொண்டு அந்த நபர் வருவதை வீடியோவில் காண முடிகின்றது. வீடியோவை பார்ப்பவர்களுக்கு முதலையை பார்க்க பாவமாக உள்ளது. ‘அந்த முதலை அவரை ஒன்றும் செய்யவில்லை, ஆனால் அந்த நபர் ஏன் அதை கொல்ல முயற்சிக்கிறார்?’ என நமக்குத் தோன்றுகிறது. 

ஆனால், அதன் பின்னர் நடக்கும் விஷயம் நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. சில நொடிகளில் முழு ஆட்டமும் தலைகீழாக மாறி விடுகிறது. தன்னை தாக்க வரும் நபரை முதலை தாக்கி விடுகிறது.. இது அந்த நபருக்கு மட்டுமல்ல நமக்கும் பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது. 

முதலையை கத்தியால் தாக்கிய நபர்

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், காட்டில் கத்தியுடன் ஒரு மனிதன் முதலையிடம் செல்வதை காண முடிகின்றது. ஆற்றில் இருந்து வெளியே வந்து அந்த முதலை ஓய்வெடுப்பதாகத் தெரிகிறது. அந்த நபர் அந்த முதலையை ரகசியமாக அடைந்து பின்னர் கத்தியால் தாக்க முயற்சிக்கிறார். முதலை அந்த நபருக்கு எந்தத் தீங்கும் செய்யாத போதே அந்த நபர் அதை தாக்க முயற்சிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அந்த நபர் தன்னை தாக்க வருவது முதலைக்கு தெரிந்துவிட்டது. அதுவும் அவரை எதிர்கொள்ள தயாராகிறது. அந்த நபர் முதலையை தாக்க வரும்போது அது, அவர் சிறிதும் எதிர்பாராத வண்ணம் அவர் கையை கவ்வி பிடித்துக்கொள்கிறது. முதலையின் எதிர் தாக்குதலை அந்த நபர் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. திடீரென அவருக்கு இது பெரிய அதிர்ச்சியாக வந்தது. வீடியோவை பார்த்தால் முதலை அந்த நபரின் கையை நன்றாக கடித்திருக்கும் என தோன்றுகிறது. 

கையை கடித்துத்தின்ற நீர் அரக்கன்

முதலையையும் குற்றம் சொல்ல முடியாது. தன்னை காத்துக்கொள்ள கண்டிப்பாக எதிர் தாக்குதல் செய்ய வேண்டிய நிலையில் அது இருந்தது. அதுமட்டுமின்றி தான் எதுவும் செய்யாமல் ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கும்போது அந்த நபர் தன்னை தாக்க வந்தது அதன் கோவத்தை அதிகரித்தது.

மேலும் படிக்க | மதிய லஞ்சே சாப்பிட்டச்சி டா.. இன்னுமா டிராபிக் நகரல? ஷாக்கிங் வீடியோ

சினம் கொண்ட முதலையின் வீடியோவை இங்கே காணலாம்

முதலை தொடர்பான இந்த வீடியோ @crazyclipsonly என்ற ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 'மனிதன் தாக்கினான்...முதலை பதிலடி கொடுத்தது' என்று இதன் தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ 80 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இது வரை இந்த வீடியோவுக்கு சுமார் ஐம்பதாயிரம் லைக்குகள் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். இதற்கு ஒரு பயனர், ‘தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என கமெண்ட் செய்துள்ளார். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | பாட்டியின் பக்கா டான்ஸ், மாஸ் ரியாக்‌ஷன்.... ‘பலே பாட்டி’ என புகழும் நெட்டிசன்ஸ்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News