இன்றைய வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போது ஒரு வித்தியாசமான வீடியோ வைரலாகி வருகின்றது.
மிகவும் வேடிக்கையாக இருக்கும் இந்த வீடியோ பல்வேறு சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோ ஒரு அரசு பஸ் டிரைவரை தொடர்புடையது. இதில் நடப்பதைப் பார்த்து நீங்கள் கட்டாயம் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள். இந்த வீடியோ நெட்டிசன்களை வெகுவாக அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுவரை மில்லியன் கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.
மேலும் படிக்க | அய்யய்யோ பயமா இருக்கே.. நபரை பதம் பார்க்கும் நாகப்பாம்பு: வீடியோ வைரல்
பொதுவாக மக்கள் தினசரி பயணங்களால் சந்திக்கும் மிகப்பெரிய சவால் என்றால் டிராபிக் கடந்து செல்வது. வாகன பயன்பாடு அதிகரித்துள்ள தற்போதைய காலகட்டத்தில் எவ்வளவு முன்னேற்பாட்டுடன் மக்கள் சென்றாலும் சாலை நெரிசலில் சிக்கி துவண்டுபோய்விடுகிறார்கள். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களுரு உலகில் இரண்டாவது மோசமான டிராபிக் கொண்ட நகரமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இதை சரி என்று உணர்த்தும் ஒரு வீடியோ பற்றி தான் இன்று நாம் காண உள்ளோம்.
இந்த நிலையில் இந்த வீடியோவில், பெங்களூருவில் அரசு பஸ் டிரைவர் டிராபிக் சிக்னலில் பஸ்சில் இருந்தவாறு உணவு சாப்பிடுவதை நாம் காணலாம். இணைவாசிகளை வியக்க வைக்கும் இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை ஷேர் செய்த பயனர் "பெங்களூருவில் பீக் டிராஃபிக் தருணம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிர்ச்சி வீடியோவை இங்கே காணுங்கள்:
இந்த வைரல் வீடியோவை saichandshabarish என்கிற பயனர் தனது இனஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோ இதுவரை ஏகப்பட்ட லைக்குகளையும் வியூஸ்களையும் பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் பலவித கருத்துக்களை செய்து வருகின்றனர். குறிப்பாக பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் குறித்து மக்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோ குறித்து மக்களின் கருத்து இவையே:
இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் கூறுகையில், "இந்த வீடியோ வருத்தத்தை தருகிறது..ட்ராபிக் காரணமாக ஓட்டுநர் நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிடக் கூட நேரம் இல்லை" என்று கூறியுள்ளார். மற்றொருவர்- “நானும் அலுவலகத்திற்குச் செல்லும்போது எனது காலை உணவை இப்பதான் செய்வேன். பல டிராஃபிக் ஹாட்ஸ்பாட்கள் உள்ளன, அங்கு நான் 15-20 நிமிடங்களுக்கு மேலாக ஒரே சாலையில் சிக்கிக்கொண்டிருக்கிறேன்" என்றார்.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | Viral Video: கிச்சு கிச்சு மூட்டியதால் குலுங்கி சிரிக்கும் பாம்பு: வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ