மேடையில் மாப்பிள்ளை செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வைரல் வீடியோ

Funny Wedding Video: ஒரு திருமண வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது. இதில், மாப்பிள்ளை மணமகள் கையை பிடிப்பதற்கு பதிலாக மற்றொரு பெண்ணின் கையை பிடித்து விடுகிறார்!!

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 6, 2022, 04:09 PM IST
  • சமூக ஊடகங்களில் திருமணம் தொடர்பான லட்சக்கணக்கான வீடியோக்கள் உள்ளன.
  • இதில் பல வித வேடிக்கையான நிகழ்வுகளையும் நாம் காண்கிறோம்.
  • இது போன்ற ஒரு விடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
மேடையில் மாப்பிள்ளை செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் திருமணம் தொடர்பான லட்சக்கணக்கான வீடியோக்கள் உள்ளன. இதில் பல வித வேடிக்கையான நிகழ்வுகளையும் நாம் காண்கிறோம். சில சமயங்களில் திருமண மேடையிலேயே மணமகனும், மணமகளும் செய்யும் சில வேலைகளால் சிரிப்பை அடக்க கூட முடியாமல் போகிறது. பல நேரங்களில் யாரும் எதிர்பார்க்காத பல விஷயங்களும் மணமேடையிலேயே நடந்துவிடுகின்றன. திருமணத்துக்கு வந்துள்ள விருந்தினர்களை அதிச்சிக்குள்ளாக்கும் பல சம்பவங்கள் நடக்கின்றன. இவை இணையத்தில் பகிரப்பட்ட பின்னர் இணையவாசிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.

இது போன்ற ஒரு விடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ மாப்பிள்ளை தொடர்பானது. இதில் நடப்பதை பார்த்து சிரிப்பை நிறுத்துவது கடினமாக இருக்கும். இந்த வேடிக்கையான வீடியோ இதுவரை நூற்றுக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. மேலும் நெட்டிசன்கள் இதை மிகவும் விரும்பி தங்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். 

மணமகனின் விசித்திரமான செயல் 

வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்க்கும் போது திருமணத்தில் அனைத்து சடங்குகளும் முடிந்து மணமகள் மாமியார் வீட்டிற்கு செல்ல தயாராகி விட்டதாக தெரிகிறது. அவர் அருகில் மணப்பெண்ணும் மற்றொரு பெண்ணும் நிற்கிறார்கள். அப்போது மணமகனின் தாய் மணமகளின் கையைப் பிடித்து முன்னால் நடக்கச் சொல்கிறார். ஆனால் வீடியோவில் அதன் பின் நடப்பது அனைவரையும் ஷாக் ஆக வைக்கிறது. 

மேலும் படிக்க | மாஸா பீடி பிடித்து பிலிம் காட்டும் தாத்தா: வாய் பிளக்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ

மணமகன் செய்த வினோத செயலை இந்த வீடியோவில் காணலாம்: 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bhutni_ke (@bhutni_ke_memes)

கையை மாற்றி பிடித்த மாப்பிள்ளை 

மணமகன் திரும்பிப் பார்க்காமல் மணமகளின் கையைப் பிடிக்கத் தொடங்குவதை வீடியோவில் காண முடிகின்றது. ஆனால் அவர் மணமகளின் கையை பிடிப்பதற்கு முன்னர் வெறொரு பெண்ணின் கையை பிடித்து விடுகிறார். இதனால் அந்த பெண் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டார். மாப்பிள்ளை தனது கையை பிடித்தவுடன், அவர் உடனடியாக மணமகனின் கையை உதறிவிட்டார். அதன் பிறகு தனது தவறை புரிந்துகொண்ட மாப்பிள்ளை மணமகளின் கையை பிடிக்கிறார். எனினும், அந்த சில நிமிடங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றது. இதைத் தொடர்ந்து, அந்த இடத்தில் இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். 

வேடிக்கையான இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் bhutni_ke_memes என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏராளமான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

மேலும் படிக்க | சாலையில் ஆண்டிகள் ஆடிய அட்டகாசமான டான்ஸ்: பார்த்து வாய் பிளந்த நெட்டிசன்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News