வீடியோ எடுக்க ஆசைப்பட்டு தண்ணீரில் போனை விட்ட சிறுவன்; வைரல் வீடியோ

வீடியோ எடுக்க ஆசைப்பட்டு மொபைலை தண்ணீருக்குள் விட்ட சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 5, 2022, 06:36 PM IST
  • வீடியோ எடுக்க ஆசைப்பட்ட சிறுவன்
  • தண்ணீருக்குள் விழுந்த மொபைல்
  • இணையத்தில் வைரலாகும் வீடியோ
வீடியோ எடுக்க ஆசைப்பட்டு தண்ணீரில் போனை விட்ட சிறுவன்; வைரல் வீடியோ title=

ஷார்ட் வீடியோஸ் அதிகமாக வளர்ந்து மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், பலரும் புதுப்புது ஐடியாக்களில் ஷார்ட்ஸ் எடுத்து இணையத்தில் பதிவிடுகின்றனர். ஆயிரக்கணக்கானோர் பதிவிடும் ஷார்ட்கள் எல்லாம்,தினம்தோறும் இணையத்தில் வைரலாகி வருவதை பார்க்க முடியும். வித்தியாசமான கன்டென்டுகளுக்கு எப்போதுமே மக்களிடம் வரவேற்பு இருக்கிறது. பலர் ஷார்ட்ஸ் மற்றும் யூ டியூபில் கிடைத்த பிரபலம் மூலமாக லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்காக அவர்கள் கடுமையாக உழைக்கவும் செய்கிறார்கள். அப்படி அவர்களின் கடின உழைப்பு சில நேரங்களில் காமெடியாகவும் செல்லவும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும் படிக்க | மணமகனுக்கு I LOVE YOU என்று கூறி முத்தமிட்ட மணமகள்: வீடியோ வைரல்

அப்படியான வீடியோ ஒன்று தான் இணையத்தில் வைரலாகியிருக்கிறது. வித்தியாசமான வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட வேண்டும் என்பதற்காக முயற்சி செய்த இளைஞரின், திட்டம் சரியானது என்றாலும், அது கடைசியில் தோல்வியில் முடிந்து பேரதிர்ச்சியைக் கொடுத்தது. ஏனென்றால், அந்த முயற்சிக்கு அவர் பயன்படுத்தியது விலை உயர்ந்த மொபைல் போன். அப்படி என்ன செய்தார் என்று நீங்கள் கேட்கலாம். ஓடும் நீரை படம்பிடிக்க வேண்டும் என்பது அவருடைய எண்ணம். அதற்காக, செருப்பு ஒன்றின் மீது மொபைலை வைத்து நீரில் ஓட விடுகிறார்.

தண்ணீரில் மிதந்து கொண்டே செருப்பு வந்திருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், மாறாக செருப்பு மீது வைத்த செல்போன் தண்ணீருக்குள் விழுந்து, செருப்பு மட்டும் மிதந்து கொண்டு வருகிறது. இது அந்த சிறுவனுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கிறது. உடனடியாக தண்ணீருக்குள் குதிக்கும் சிறுவன் செல்பொனை தேடுகிறான். ஆனால், செல்போன் கிடைக்கவில்லை. இதனை மற்றொருவர் வீடியோவாக எடுத்து பதிவிட, இந்த வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. வீடியோவை பார்க்கும் நெட்டிசன்களும் வயிறு குலுங்க சிரிக்கின்றனர். 

மேலும் படிக்க | ஓவரா சீன் போட்ட மாப்பிள்ளை, மாமனார் செய்த அதிரடி வேலை: சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News