பாம்பு மேல பாசமிருந்தாலும் இது டூ மச்! பாம்புகளுடன் படுக்கையில் உறங்கும் பெண் வீடியோ வைரல்

Tension Creating Video: பாம்புகளுடன் படுத்துக் கொண்டு நிம்மதியாக உறங்குவது மற்றும் அவற்றை தடவிக் கொடுப்பது என செல்லப்பிராணியைப் போல பாசத்துடன் பார்த்துக் கொள்ளும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 25, 2023, 12:44 PM IST
  • ராட்சத பாம்புகளுடன் நிம்மதியாக தூங்கும் சிறுமி
  • பயங்கர வீடியோ வைரல்
  • பாம்புக்கு படுக்கை கொடுத்த பெண்
பாம்பு மேல பாசமிருந்தாலும் இது டூ மச்! பாம்புகளுடன் படுக்கையில் உறங்கும் பெண் வீடியோ வைரல் title=

லேட்டஸ்ட் பாம்பு வீடியோ: சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்கள் வித்தியாசமனவைகளாக இருந்தால், அவை நிச்சர்யம் வைரலாகின்றன. வீடியோக்களை பார்த்து ரசிக்க பலரும் விரும்புவதால், இணையதளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வீடியோக்கள் பரவலாக பார்க்கப்படுகின்றன. அதிலும் பயமுறுத்தும் அல்லது விநோதமான வீடியோக்களை அதிக மக்கள் பார்க்கின்றனர். அதற்கு பாராட்டும் கிடைக்கிறது, விமர்சனங்களும் கடுமையாக இருக்கலாம் என்பது தெரிந்தே பல வீடியோக்கள் பகிரப்படுகின்றன.

பலர் செய்யும் குற்றச் செயல்கள் கூட, அவர்கள் அதை சமூக ஊடகங்களில் பகிரும்போது அம்பலமாகி, சிறை தண்டனை பெற்ற சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. பாம்பு, சிங்கம், புலி, யானை என நாம் பார்த்து பயப்படும் காட்டு விலங்குகள், ஊர்வன பறப்பன என பிற உயிரினங்கள் தொடர்பான வீடியோக்களும் பலராலும் பார்க்கப்படுகின்றன.

அதிலும், மர்மமான மற்றும் புதிரான இயல்புக்கு பெயர் பெற்ற பாம்புகள், இணையத்தில் பார்வையாளர்களை அதிக அளவில் கவர்கின்றன. பாம்புகளின் பல வீடியோக்கல் பாச வீடியோக்கள் என்றால், சில நேசமானவை, சில அதி பயங்கரமான சண்டையாக இருக்கும்.

மேலும் படிக்க | பாம்புடன் விளையாடும் பாப்பா: இணையத்தை பதற வைத்த பகீர் வைரல் வீடியோ

தற்போது இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோ, திகிலடையச் செய்வதாக இருக்கிறது. சிறுமி ஒருவர், பாம்புகளுடன் படுத்துக் கொண்டு நிம்மதியாக உறங்குவது மற்றும் அவற்றை தடவிக் கொடுப்பது என செல்லப்பிராணியைப் போல பாசத்துடன் பார்த்துக் கொள்ளும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

வீடியோவை பார்த்தால், உங்களுக்கு பயம் வருகிறதா இல்லை பாசம் வருகிறதா என்று சொல்லுங்கள்...

வைரல் வீடியோ...

அரியானா என்ற சிறுமி ஒரு படுக்கையில் நிம்மதியாக தூங்கும் வீடியோவில், அவரது படுக்கையில் இரண்டு பெரிய கரு நாகங்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் snakemasterexotics என்ற கணக்கின் மூலம் பகிரப்பட்ட வீடியோ, பாம்பு ஆர்வலரான அரியானா என்ற சிறுமியின் வீடியோ.

தீவிர பாம்பு பிரியரான் அரியானா, பல்வேறு வகையான பாம்புகளுடன் பழகுவது மற்றும் அன்பாக விளையாடுபவர். இந்த வீடியோவில், அந்தப் பெண் தன்னைச் சுற்றி பாம்புகளை செல்லமாக நடத்தினால், இது கடுமையான விமர்சனங்களை கொண்டுவருகிறது.  

மேலும் படிக்க | கல்யாண போட்டோஷூட்! இப்பவே லிப்-டு-லிப்பா? மணமக்களின் காதல் லீலை வீடியோ வைரல்

இந்த பதிவு 8,000 க்கும் மேற்பட்ட விருப்பங்களைப் பெற்றுள்ளது, நெட்டிசன்கள் பலவிதமான எதிர்வினைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சில பார்வையாளர்கள் இந்த செயலின் உள்ளார்ந்த ஆபத்தை சுட்டிக்காட்டி, ​​பாம்புகள் விளையாடுவதற்கு பொம்மைகள் அல்ல என்றும், இதுபோன்ற பழக்கத்தை ஊக்குவிக்கும் அரியானாவின் பெற்றோரை பலரும் எச்சரிக்கின்றனர்.

தங்கள் கவலைகளைப் பகிர்ந்து கொண்ட ஒரு பயனர், "அடடா, என் கனவில் அதைச் செய்வதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது" என்று கூறினார். மற்றொருவர், "மிகவும் பயமாக இருக்கிறது" என்று வெளிப்படுத்தினார், வீடியோவை புதிரானதாகவும் மனதை வருத்துவதாகவும் உள்ளது என்று பலரும் கூறுகின்றனர்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.) 

மேலும் படிக்க | ரூ.20 லட்சம் மாலை.. இணையத்தை தெறிக்கவிட்ட ‘காஸ்ட்லி’ மாப்பிள்ளை, வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News