கல்யாண போட்டோஷூட்! இப்பவே லிப்-டு-லிப்பா? மணமக்களின் காதல் லீலை வீடியோ வைரல்

Pre-Wedding photoshoot: இதுவரை பல வகையான திருமண வீடியோக்களை பார்த்திருக்கலாம் ஆனால் மணமக்களின் லிப்-டு-லிப் முத்தக் காட்சியை இதற்கு முன் பார்த்திருக்கவே முடியாது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 17, 2023, 04:45 PM IST
  • மணமக்களின் லிப்-டு-லிப் முத்தக் காட்சி வைரல்
  • திருமணத்திற்கு முன்பே இப்படியா? கலாய்க்கும் நெட்டிசன்கள்
  • ப்ரீபோட்டோஷூட்டில் மணமக்களின் காதல் லீலை
கல்யாண போட்டோஷூட்! இப்பவே லிப்-டு-லிப்பா? மணமக்களின் காதல் லீலை வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. அவை மன அழுத்தங்களை மறந்து ரசித்து உதவுகின்றன. அதே சமயம் இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

அந்த வகையில் சமூக வலைதளங்களில் மணமகள் - மணமகன் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. ஒரு சுவாரசியமான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதில் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டில் மணமகனும், மணமகளும் முத்தமிடும் காட்சியை பார்க்கலாம்.

இதுவரை பல வகையான திருமண வீடியோக்களை பார்த்திருக்கலாம் ஆனால் இதுபோன்ற லிப்-டு-லிப் முத்தக் காட்சியை இதற்கு முன் பார்த்திருக்கவே முடியாது.

வீடியோவை பார்த்த பிறகு கமெண்ட் சொல்லுங்க...

உதட்டோடு உதடு பொருத்திய மணமக்கள் 

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டிற்காக மணமகனும், மணமகளும் முத்தமிட்டுக் கொண்டிருக்கின்றனர். இது போட்டோஷீட் என்பதையே மறந்து போன மணமக்கள், தங்கள் முத்தத்தில் மூழ்கிவிட்டதைக் காணலாம்.   

மேலும் படிக்க | சினிமா ரசிகர்களுக்கு ஜாக்பார்ட்! 99 ரூபாயில் டிக்கெட் புக் செய்யலாம்!

ஒரு காலத்தில் திருமணத்திற்கு முன்னர் மணப்பெண்ணும் மணமகனும் பார்த்துக் கொள்ளவே மாட்டார்கள், இப்போது, மணமகன் நிற்க, மணமகள் முத்தமிடும், அதிலும் உதட்டோடு உதடு ஒற்றி அதிலேயே மூழ்கிப் போகும் அளவிற்கு வந்து விட்டது ஆச்சரியமான முன்னேற்றம் தான். 

திருமணத்திற்கு முன்பு மணமகனும், மணமகளும் எப்படி முத்தமிடுகிறார்கள் என்பது செய்தியல்ல. இவர்களின் முத்தக்காட்சியை வீடியோ எடுக்க அங்கு கூடியிருக்கும் வீடியோகிராஃபர் மற்றும் புகைப்படக் கலைஞர்களின் நிலைமை தான் பாவம்...

இந்த சங்கடத்தை வீடியோவில் பார்க்கலாம். மணமக்களாக மாறப்போகும் மணமகனும் மணமகளும் திருமணத்திற்கு முன்பே முத்த ஒத்திகை பார்க்கத் தொடங்கிவிட்டார்கள் என பலரும் கமெண்ட் செய்திருக்கின்றனர். இந்த வீடியோ,  எக்ஸ் சமூக வலைதளத்தில் @HasnaZaruriHai என்ற பயனரின் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தீபாவளி அட்ராசிட்டீஸ்! ’உண்மையிலேயே’ பூசை வாங்கறது இதுதானா? மிதி வாங்கும் பக்தர்கள்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் நிலையில், கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன. திருமண ஷூட்டிங்கா இல்லை, சினிமா ஷூட்டிங்கா என்று ஒருவர் கேட்டால், மற்றொருவரோ என்ன கொடுமை சார் இது என்று அங்கலாய்த்தால், அவருக்கு என்ன பதில் சொல்கிறார்கள் தெரியுமா?

இந்த மாதிரி அனுபவம் உனக்கு இல்லைன்னா, புலம்பல் தான் வரும்... பார்த்து எஞ்சாய் பண்ணுங்க பாஸ் என்று ஒருவர் நக்கலாக கமெண்ட் போடுகிறார். 

மேலும் படிக்க | MS Dhoni: ரசிகையின் காலை தொட்ட தோனி! ஷாக்கான நெட்டிசன்கள்.... வைரல் வீடியோ

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோ சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. உள்ளடகத்தை ஜீ மீடியா தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News