அட்டாக் செய்ய வந்து அடங்கிப்போன மலைப்பாம்பு: மாஸ் காட்டிய சிறுத்தை

Wild Animal Video: சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றன. வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்கள் எப்போதும் சமூக ஊடகங்களை தெறிக்க வைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 15, 2022, 04:59 PM IST
  • இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம்.
  • பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • சிங்கம், சிறுத்தை, புலி போன்ற விலங்குகளை எப்போதும் ஆக்ரோஷமான பாணியிலேயே பார்த்துள்ளோம்.
அட்டாக் செய்ய வந்து அடங்கிப்போன மலைப்பாம்பு: மாஸ் காட்டிய சிறுத்தை title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. 

சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றன. வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்கள் எப்போதும் சமூக ஊடகங்களை தெறிக்க வைக்கும். சில நேரங்களில் இரண்டு விலங்குகள் காட்டின் நடுவில் ஒரு அபாயகரமான சண்டையில் ஈடுபட்டிருப்பதைக் காண்கிறோம். 

இவை சில சமயம் பாசத்தையும் சில சமயம் பகையையும் வெளிக்காட்டுகின்றன. பொதுவாக நாம், சிங்கம், சிறுத்தை, புலி போன்ற விலங்குகளை எப்போதும் ஆக்ரோஷமான பாணியிலேயே பார்த்துள்ளோம். 

தற்போது சிறுத்தை ஒன்று மலைப்பாம்பை தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. சிறுத்தையின் இந்த வீடியோவை பார்த்தவர்கள் ஆச்சரியமடைந்தனர். பொதுவாக இந்த வீடியோவில் பார்ப்பது போன்ற ஒரு காட்சியை காண முடியாது. 

மலைப்பாம்பு மீது சிறுத்தையின் தாக்குதல்

சமூகவலைத்தளங்களில் தலைப்புச் செய்தியாகி வரும் இந்த வீடியோவில், சிறுத்தை ஒன்று தாகத்துடன் தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றின் கரையை வந்தடைவதைக் காண முடிகின்றது. அது தண்ணீரைக் குடிக்கும்போது, ஆற்றில் மிதக்கும் மலைப்பாம்பு அதை தாக்குகிறது. சிறுத்தை மலைப்பாம்பு மீது கோபம் கொண்டு வேட்டையாடும் மனநிலையுடன் மலைப்பாம்பை தாக்குகிறது. 

மேலும் படிக்க | பாம்பிற்கே தண்ணி காட்டிய நபர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ! 

சிறுத்தை மலைப்பாம்பை வாயில் கவ்விக்கொண்டு அங்கிருந்து நடந்து சென்றது. சிறுத்தையின் இந்த பயங்கரமான பாணியை மற்ற விலங்குகளும் பார்த்துக்கொண்டே இருக்கின்றன. 

சிறுத்தை மற்றும் மலைப்பாம்பின் அதிரடி சண்டையின் வீடியோவை இங்கே காணலாம்: 

இந்த காட்சி மிகவும் ஆபத்தானது

சிறுத்தை மற்றும் மலைப்பாம்பின் இந்த வீடியோ Wild_animal_shorts_ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. வனவிலங்குகளின் இந்த வீடியோவை பார்த்த சமூகவலைத்தளவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகின்றனர். 

கமெண்ட் பாக்ஸில் ஒருவர், 'இது அனகோண்டா, மலைப்பாம்பு அல்ல' என்று எழுதியுள்ளார். மற்றொருவர், ' நினைத்தாலே குலை நடுங்கச்செய்யும் இந்த சிறுத்தை ஒரு அபாயகரமான விலங்காகும்’ என்று எழுதியுள்ளார். இந்த வீடியோ ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது. 

மேலும் படிக்க | ‘என் அம்மா யாரு?’ குறும்புக்கார அம்மாவை தேடும் கியூட் குழந்தையின் வைரல் வீடியோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News