Excitment of Groom: என் ஆளு வந்துட்டா! எமோஷனாகும் மாப்பிள்ளையின் வீடியோ வைரல்...

மணமகளைப் பார்த்த மகிழ்ச்சியான மணமகனின் உற்சாகமான கொண்டாட்டம் சிரிக்க வைக்கிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 15, 2022, 10:23 AM IST
  • என் ஆளு வந்துட்டா! குதூகலமாகும் மணமகன்
  • காதலில் மயங்கும் மாப்பிள்ளையின் வீடியோ வைரல்...
  • மணமகனின் உற்சாகமான கொண்டாட்டம்
Excitment of Groom: என் ஆளு வந்துட்டா! எமோஷனாகும் மாப்பிள்ளையின் வீடியோ வைரல்... title=

வைரல் வீடியோ: பலருக்கு, திருமணம் என்பது அவர்களின் வாழ்க்கையின் மிகவும் சிறப்பு வாய்ந்த தருணங்களில் ஒன்றாகும், மேலும் அவர்கள் விரும்பும் ஒருவருடன் அதை செலவிடுவது முற்றிலும் அழகான உணர்வு. 

உணர்வை அற்புதமாக வெளியிடுவதும் ஒரு கலை. ஆனால், இந்தக் கலை அனைவருக்கும் கை வராத காதல் கலை. 

மணம் முடிக்கும் பெண்ணை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் மாப்பிள்ளையின் மகிழ்ச்சியான தருணத்தை படம்பிடித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.  

மேலும் படிக்க | மணமகளின் வேற லெவல் குத்தாட்டம்: வாயடைத்து போன மணமகன்

பல வித வினோத வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

திருமணம் என்பது மணமகனுக்கும் மணமகளுக்கும் மிக முக்கியமான ஒரு நாளாகும். இதற்காக அவர்கள் பல ஏற்பாடுகளை செய்வதுண்டு. தங்கள் உடை, மண்டபத்துக்குள் வரும் விதம், நடனங்கள் என அனைத்திலும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எனினும், சில சமயம், எதிர்பாராத சில விஷயங்களும் தனித்துவமான அனுபவங்களை அளிக்கின்றன. 

மணமகனும் அவரது நண்பர்களும் திருமண மேடையில் மணமகளுக்காக காத்திருக்கும் வீடியோ இது:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by WedAbout.com (@wedabout)

 

மணமகள் திருமண மண்டபத்திற்கு வந்தவுடன், உற்சாகமான மாப்பிள்ளை மயக்கமடைந்து விழுவது போல் நடிக்கிறார். பின்னர் காதலுடன் மணமகளை கைகளை நீட்டி மணமகளை மேடைக்க்கு வரவேற்கிறார் மாப்பிள்ளையாகும் காதலர்.

இந்த வீடியோ எப்போது, ​​​​எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை, ஆனால் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி, பார்வையாளர்களின் மனதை கொள்ளைக் கொள்கிறது. 

மேலும் படிக்க | ஆடிய மணப்பெண், அசந்துபோய் அழத்தொடங்கிய மணமகன் 

இன்ஸ்டாகிராமில் wedabout என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது இந்த வீடியோ, அதில் “உங்கள் இணை, உங்களுக்கு பிடித்தவராக இருந்தால்...!” என்ற தலைப்புடன். வீடியோவில் உள்ள வாசகம் கலக்கலாக இருக்கிறது.

இந்த வீடியோ 69,000 க்கும் மேற்பட்ட லைக்குகளுடன் வைரலாகியுள்ளது, இந்த ஜோடியின் அபிமாத்தைப் பற்றி மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். ஒரு பயனர், ”Awww Soo cute” என்று எழுதினார், மற்றவர்கள் இந்த ஜோடிக்கு காதல் எமோஜிகளை பரிசாக்கியுள்ளனர்.

மேலும் படிக்க | தன் குட்டிகளுக்கு சாப்பாடு வைத்ததற்காக தாய்க்கு நன்றி சொன்ன நாய்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News