Viral Video: மிக குறுகிய மலை முகட்டில் வீரர் புரியும் சாகசம்; அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!

மிக மெல்லிய மலை முகட்டில் ஒரு மனிதன் நடந்து செல்லும் வீடியோ உங்களை திகிலடையச் செய்யும் என்பது உறுதி.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 15, 2022, 06:25 PM IST
  • வைரலாகி வரும் ஒரு வீடியோவில், மலை ஏறும் வீரர் ஒருவர் செய்யும் சாகசத்தை காணலாம்.
  • வீடியோ உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி விடும் என்பது உறுதி.
  • வீடியோ 24,300 பார்வைகளையும் 24,330 லைக்குகளையும் பெற்றுள்ளது.
Viral Video: மிக குறுகிய மலை முகட்டில் வீரர் புரியும் சாகசம்; அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்! title=

சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. அந்த வகையில், வைரலாகி வரும் ஒரு வீடியோவில், மலை ஏறும் வீரர் ஒருவர் செய்யும் சாகசம் உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி விடும் என்பது உறுதி.

லேலண்ட் நிஸ்கி என்ற மலையேற்ற வீரர், மிக மெல்லிய மலை முகடுகளைக் கடப்பதைக் காட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. வாஷிங்டன் மாநிலத்தின் நார்த் கேஸ்கேட்ஸ் தேசிய பூங்காவில் அமைந்துள்ள ஃபார்பிடன் சிகரத்தில் வீடியோ படமாக்கப்பட்டுள்ளது. மலையேற்ற வீரரான நிஸ்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டார். அதில் “நான் மலைகளை மிகவும் நேசிக்கிறேன். எனக்கு மெல்லிய, குறுகிய மலை முகடு மீது ஏறுதல் மிகவும் பிடிக்கும்! இரண்டு நாட்களுக்கு முன்பு பாஸ்டன் பேசின் சென்றேன், மேலும் அருவிகளைச் சுற்றியுள்ள கண்ணை கவரும் இஅயற்கை அழகை, மேலிருந்து பார்த்து வியப்படைகிறேன். பல சிறிய மலைத்தொடர்கள் மற்றும் புதிய இடங்கள். இது ஒரு மாபெரும் விளையாட்டு மைதானம் போன்றது” என்று திரு நிஸ்கி  சமூக வலைதளத்தில்  பதிவிட்டிருந்தார்.

கடந்த செப்டம்பர் 2 அன்று நிஸ்கி மிக குறுகிய மலை முகட்டில் நடப்பதைக் காட்டும் வீடியோ வெளியிடப்பட்டது. அவரது தலை மீது கேமிரா பொருத்தப்பட்டிருப்பதைக் காணலாம். அந்த நபர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நிச்சயமாக உங்களை பயமுறுத்தும். மலை மீது ஏறுபவர்கள் எவ்வளவு உயரத்தில் இருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது ஒரு பயங்கரமான உணர்வைத் தருகிறது. வீடியோ 24,300 பார்வைகளையும் 24,330 லைக்குகளையும் பெற்றுள்ளது.

 பயத்தில் நடுங்க வைக்கும் வீடியோவை கீழே காணலாம்:.

வைரலான வீடியோவை கண்ட இணையவாசிகள் பல வித கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.. “ மலை முகட்டினை இதை நீங்கள் பத்திரமாக கடந்து வந்ததில் மகிழ்ச்சி. திகைப்பாக இருக்கிறது," என ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், "நான்  வீடியோவைப் பார்த்து, இப்போது பீதியில் இருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார். நிஸ்கி அவர்களை இன்ஸ்டாகிராமில் 70,400 பாலோ செய்கின்றனர். அவர் அடிக்கடி தனது சாகச வீடியோக்கள் மற்றும் படங்களை வெளியிடுகிறார்.

மேலும் படிக்க | சாலையில் ஆண்டிகள் ஆடிய அட்டகாசமான டான்ஸ்: பார்த்து வாய் பிளந்த நெட்டிசன்கள்

மேலும் படிக்க | மாஸா பீடி பிடித்து பிலிம் காட்டும் தாத்தா: வாய் பிளக்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News