அக்டோபரில் கிரகங்களின் மிகப்பெரிய ராசி மாற்றம்: யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்

Planet Transits in October: வாழ்க்கையில் இதுவரை பலவிதமான இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருந்தவர்கள், அக்டோபர் மாதத்தில் நிவாரணம் பெறத் தொடங்குவார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 28, 2022, 03:06 PM IST
  • 16 அக்டோபர் 2022: மிதுனத்தில் செவ்வாயின் மாற்றம்.
  • 18 அக்டோபர் 2022: துலாம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி.
  • 23 அக்டோபர் 2022: மகர ராசியில் சனி வக்ர நிலை மாறி நேர் இயக்கம் தொடங்கும்.
அக்டோபரில் கிரகங்களின் மிகப்பெரிய ராசி மாற்றம்: யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம் title=

அக்டோபர் 2022 ஜோதிட நாட்காட்டி: அக்டோபர் மாதம் ஜோதிட கணக்கீடுகளின் படி முக்கியமான மாததாக இருக்கும். வாழ்க்கையில் இதுவரை பலவிதமான இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருந்தவர்கள், இந்த மாதத்திலிருந்து நிவாரணம் பெறத் தொடங்குவார்கள். ஏனெனில் அக்டோபரில் கிரகங்களின் பெரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இது உலகம் முழுதும் உள்ள மக்களின் வாழ்க்கையில் பல வித தாக்கத்தை ஏற்படும்.  

16 அக்டோபர் 2022: மிதுனத்தில் செவ்வாயின் மாற்றம் 

அக்டோபர் மாதத்தின் முதல் மாற்றம் மிதுன ராசியில் காணப்படும். அக்டோபர் 16 ஆம் தேதி செவ்வாய் கிரகம் மிதுன ராசிக்குள் நுழைகிறது. செவ்வாயின் இந்த மாற்றம் நிலம், கட்டிடம், வாகனம் தொடர்பான ஆசைகளை பூர்த்தி செய்யும். எனினும் இந்த காலத்தில் கோபம் மற்றும் பிடிவாதத்திலிருந்து விலகி இருப்பது நல்லது. 

17 அக்டோபர் 2022: துலாம் ராசியில் சூரியன் பெயர்ச்சி 

செவ்வாய் கிரகம் தனது ராசியை மாற்றிய அடுத்த நாளே சூரியனின் ராசி மாற்றம் நிகழவுள்ளது. சூரியன் தற்போது கன்னி ராசியில் உள்ளார். சூரியனின் இந்த மாற்றம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும். இந்த நேரத்தில், வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். பதவி உயர்வுக்கான சூழ்நிலை வரக்கூடும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

மே;உம் படிக்க | தீபாவளி முதல் இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி அலை வீசும் 

18 அக்டோபர் 2022: துலாம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி

துலாம் ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி அக்டோபர் மாதத்தின் மிகப்பெரிய வானியல் நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும். துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரன் துலாம் ராசியில் நுழையும் போது ராஜயோகம் உண்டாகும். உங்கள் ராசியில் கிரகங்களின் சிறப்பு சஞ்சாரம் இருக்கும். இங்கு கேது, செவ்வாய் இணைவு ஏற்கனவே உருவாகியிருக்க வேண்டும். மேலும் சுக்கிரனின் சஞ்சாரத்தால் வாழ்க்கையில் திடீரென்று ஒரு பெரிய நிகழ்வு நடப்பதற்கான அறிகுறி இருக்கும். இந்த நேரத்தில், உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

23 அக்டோபர் 2022: மகர ராசியில் சனி வக்ர நிலை மாறி நேர் இயக்கம் தொடங்கும்
 
இந்த மாதத்தின் மிகப்பெரிய வானியல் நிகழ்வு சனியின் பெயர்ச்சி ஆகும். சனி இப்போது பிற்போக்கு நிலையில் அதாவது வக்ர நிலையில் உள்ளது. அக்டோபரில் சனியின் வக்ர நிலை மாறி நேர் இயக்கம் தொடங்கும். மகர ராசிக்கு அதிபதி சனி பகவான் என்பது மற்றொரு சிறப்பம்சமாகும். சனியின் பாதை மாற்றம் சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் அளிக்கும். ஆகையால், சனி பகவானுக்கான பரிகாரங்களை செய்வது நல்லதாகும். 

26 அக்டோபர் 2022: துலாம் ராசியில் புதன் பெயர்ச்சி 

துலாம் ராசியில் அக்டோபரில் அலைச்சல் அதிகமாக இருக்கும். சூரியன் மற்றும் சுக்கிரனுக்குப் பிறகு, புதன் இந்த நாளில் மாற்றம் கொள்ளும். இங்கு கேது ஏற்கனவே அமர்ந்துள்ளார். அதே நேரத்தில், சந்திரனும் இந்த நாளில் இங்கு இருக்கும். இந்த தேதியில் துலாம் ராசியில் 5 கிரகங்கள் இணைந்து இருக்கும். இது மிக முக்கியமான நிகழ்வாக இருக்கும். அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.

30 அக்டோபர் 2022: மிதுனத்தில் செவ்வாயின் வக்ர பெயர்ச்சி 

ஜோதிடத்தில் செவ்வாய் கிரகத்தின் வக்ர நிலை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில் செவ்வாய் மிதுனத்தில் வக்ர நிலையில் இருப்பார். வீரம், ராணுவம் மற்றும் நிலம் போன்றவற்றின் காரணியாக செவ்வாய் கருதப்படுகிறது. ஜோதிடத்தின் படி, ஒரு கிரகம் பிற்போக்கு நிலையில் இருக்கும்போது, ​​​​அதன் சக்தி குறைகிறது. ஆகையால் இந்த காலத்தில் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | Jupiter Transit: நிலை மாறும் குரு பகவான்; இந்த ‘4’ ராசிகளுக்கு அடிக்க போகும் ஜாக்பாட்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News