கடக ராசியில் நுழையும் சுக்கிரன்; இந்த 5 ராசிகளுக்கு ‘ராஜயோகம்’ தான்

கிரகங்கள் மற்றும் விண்மீன்கள் நிலைகளில் மாற்றம் வரும் போது, அவை நம் வாழ்வில் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகின்றன என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 3, 2022, 11:16 AM IST
  • சம்பள உயர்வுடன் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.
  • அரசு வேலையில் இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.
  • திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
கடக ராசியில் நுழையும் சுக்கிரன்; இந்த 5 ராசிகளுக்கு ‘ராஜயோகம்’ தான் title=

சுக்ரன் பெயர்ச்சி 2022: ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருக்கும்போது, ​​செல்வம், புகழ், மதிப்பு, மரியாதை என அனைத்தும் வந்து சேரும் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஜோதிடத்தில், சுக்கிரனின் ராசியில் ஏற்படும் மாற்றம் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. சுக்கிரன் இன்பங்கள், செல்வம், மகிமை, செல்வம் போன்றவற்றின் காரகமாகக் கருதப்படுகிறது. சுக்கிரனின் ராசி மாற்றத்தால் சிலருக்கு பொருளாதார முன்னேற்றத்துடன் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும். சுக்கிரன் 07 ஆகஸ்ட் 2022 அன்று கடக ராசிக்குள் நுழைகிறார். ஆகஸ்ட் 31 வரை இந்த ராசியில் சுக்கிரன் நீடிப்பார். ஆகஸ்ட் 31 வரை எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட  மழையில் நனைவார்கள் என அறிந்து கொள்ளலாம்

மேஷம்:

சுக்கிரன் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் வெற்றியைத் தரும். இதன் போது மரியாதை அதிகரிக்கும். தொழிலில் நல்ல செய்தி கிடைக்கும். பதவி உயர்வால் வருமான உயர்வு சாத்தியமாகும். வேலை தேடுபவர்களுக்கு சாதகமான காலம் அமையும்.

ரிஷபம்:

ரிஷபம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இந்த காலகட்டத்தில் சாதகமான மாற்றங்களைக் காணலாம். முதலீடு செய்வதற்கு ஏற்ற காலம். திடீர் பண ஆதாயம் கூடும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்

மிதுனம்:

சுக்கிரன் சஞ்சாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் சம்பள உயர்வுடன் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

கன்னி: 

சுக்கிரன் ராசி மாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளைத் தரும். இதன் போது அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல நேரம்.

மேலும் படிக்க |  Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

துலாம்:

சுக்கிரன் சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறலாம். எதிர்காலத்தில் முதலீட்டின் பலனைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். உயர் அதிகாரிகள் உங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)

 மேலும் படிக்க | வரும் 6 நாட்கள் இந்த 4 ராசிகளுக்கு பண மழை கொட்டோ கொட்டுனு கொட்டும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News