சுக்கிரனின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு தொழில், வியாபாரத்தில் ஜாக்பாட்!!

Venus Transit in December: சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், 3 ராசிக்காரர்கள் இந்த மாற்றத்தால் அதிகப்படியான சுப பலன்களை அனுபவிப்பார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 8, 2022, 04:43 PM IST
  • ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன்.
  • இந்த ராசிக்காரர்களிடம் சுக்கிரன் எப்போதும் கருணையுடன் இருக்கிறார்.
  • டிசம்பர் 29 ஆம் தேதி நடக்கவிருக்கும் சுக்கிரனின் சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்.
சுக்கிரனின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு தொழில், வியாபாரத்தில் ஜாக்பாட்!! title=

மகரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: ஜோதிட சாஸ்திரத்தில், செல்வம், ஆடம்பரம், காதல் மற்றும் ஈர்ப்பு ஆகியவற்றின் காரணியாக சுக்கிரன் கிரகம் கருதப்படுகிறது. ஜாதகத்தில் சுக்கிரன் கிரகம் சுப ஸ்தானத்தில் இருந்தால், அந்த நபர் வாழ்க்கையில் பணப் பற்றாக்குறை இல்லாமல் நிம்மதியாக இருப்பார். சொகுசான வாழ்வை அனுபவிப்பார். இந்த நபர்களின் காதல், திருமண வாழ்க்கையும் நன்றாகவே இருக்கும். வாழ்க்கையில் பாசப்பிணைப்புகள் அதிகமாக இருக்கும். 

இதுமட்டுமின்றி இவர்களின் ஆளுமையில் அற்புதமான ஈர்ப்பு இருக்கும். 2022 டிசம்பர் 29 அன்று சுக்கிரன் கிரகம் தனது ராசியை மாற்றப்போகிறது. டிசம்பரில் சுக்கிரன் தனது ராசியை மாற்றி மகர ராசியில் பிரவேசிக்க உள்ளார். பொதுவாக அனைத்து கிரங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரனின் ராசி மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், 3 ராசிக்காரர்கள் இந்த மாற்றத்தால் அதிகப்படியான சுப பலன்களை அனுபவிப்பார்கள். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

ரிஷபம்: 

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். அதனால்தான் இந்த ராசிக்காரர்களிடம் சுக்கிரன் எப்போதும் கருணையுடன் இருக்கிறார். டிசம்பர் 29 ஆம் தேதி நடக்கவிருக்கும் சுக்கிரனின் சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். இந்த நபர்கள் தங்கள் தொழிலில் பெரிய வெற்றியைப் பெறலாம். 

வருமானத்தில் பெரிய அதிகரிப்பு ஏற்படக்கூடும். ஒன்றுக்கு மேற்பட்ட மூலங்களிலிருந்து பணம் சம்பாதிப்பீர்கள். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. இந்த பயணங்களால் பல அனுகூலமான நன்மைகள் கிடைக்கும். பல முக்கியமான பணிகளில் வெற்றி காண்பீர்கள். 

மேலும் படிக்க | ராகு கேது பெயர்ச்சி 2023: இந்த '4' ராசிகளின் வாழ்க்கையில் புயல் வீசலாம்!

கன்னி: 

சுக்கிரனின் சஞ்சாரம் கன்னி ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் இனிமையை சேர்க்கும். காதல் அவர்களின் வாழ்வில் துளிர்விடும். திருமண வாழ்க்கையும் சிறப்பாக அமையும். பிள்ளைகள் தொடர்பான நல்ல செய்திகளைப் பெறலாம். வீட்டில் சில ஆன்மீக நிகழ்ச்சிகள் நடக்கும். அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

துலாம்: 

துலாம் ராசிக்கு அதிபதியும் சுக்கிரன்தான். எனவே, இந்த சுக்கிரனின் சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரப் போகிறது. வாழ்வில் சுகபோகங்கள் அதிகரிக்கும். இந்த காலத்தில் விலையுயர்ந்த பொருட்களை நீங்கள் வாங்கக்கூடும். ளையும் வாங்கலாம். சொந்த வீடு, வாகனம் வாங்கும் கனவு நிறைவேறும். வேலை தெடுபவர்கள் புதிய வேலையில் சேரக்கூடும். வருமானம் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கிரகக் கோளாறால் டிசம்பர் மாதம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News