சனிப்பெயர்ச்சி 2023: இந்த ராசிகள் மீது சனியின் நேரடி தாக்கம், இப்படி நிவாரணம் பெறலாம்

Ezharai Nattu Sani: சனி பகவானை மகிழ்விப்பது எப்படி? எப்படிப்பட்ட வேலைகளை செய்யக்கூடாது? எந்த வகையான வழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்?

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 7, 2022, 08:27 PM IST
  • சனி மிக மெதுவாக நகரும் கிரகமாவார்.
  • அவர் ஒரு ராசியை கடக்க இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறார்.
  • தற்போது மிதுனம், துலாம் ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் உள்ளார்கள்.
சனிப்பெயர்ச்சி 2023: இந்த ராசிகள் மீது சனியின் நேரடி தாக்கம், இப்படி நிவாரணம் பெறலாம் title=

2023 சனி பெயர்ச்சி: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதிக்கடவுள் என அழைக்கப்படுகிறார். தற்போது மகர ராசியில் இருக்கும் அவர் ஜனவரி 17 ஆம் தேதி தனது இரண்டாவது ராசியான கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். அங்கு அவர் ஜனவரி 29, 2025 வரை, அதாவது சுமார் இரண்டரை ஆண்டுகள் தங்குவார். சனி மிக மெதுவாக நகரும் கிரகமாவார். அவர் ஒரு ராசியை கடக்க இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறார். 

தற்போது மிதுனம், துலாம் ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் உள்ளார்கள். இது ஜனவரி மாதம் சனி பெயர்ச்சியானவுடன் முடிந்துவிடும். கும்ப ராசிக்குள் நுழைந்தவுடன், சனி பகவான், கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களின் செயல்கள் மீது கவனத்தை செலுத்துவார். இந்த வேளையில், இந்த ராசிக்காரர்களை அவர் அவ்வப்போது சோதிப்பார். இப்படிப்பட்ட நிலையில், சனி பகவானை மகிழ்விப்பது எப்படி? எப்படிப்பட்ட வேலைகளை செய்யக்கூடாது? எந்த வகையான வழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்? இந்த கேள்விகளுக்கான விளக்கங்களை இந்த பதிவில் காணலாம்.

ஏழரை நாட்டு சனி என்றால் என்ன? 

ஏழரை நாட்டு சனி என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் குறைந்தது மூன்று முறை வரக்கூடிய ஒரு நிகழ்வாகும். முதல் முறை மங்கு சனி என்றும், இரண்டாம் முறை பொங்கு சனி என்றும், மூன்றாம் முறை மரண சனி என்றும் இது அழைக்கப்படுகிறது. சனி பகவான் ஒவ்வொரு இராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வாசம் செய்வார். நமது இராசிக்கு முந்தைய இராசியில் சனி வரும்போது, நமக்கும் ஏழரை ஆண்டு கால நிகழ்வு துவங்கும். முந்தைய இராசியில் இரண்டரை வருடம், நமது ஜென்ம இராசியில் இரண்டரை வருடம், நமது இராசிக்கு அடுத்த இராசியில் இரண்டரை வருடம் என மொத்தமாக ஏழரை ஆண்டுகாலம் அதன் தாக்கம் நமக்கு இருக்கும். இந்த ஏழரை ஆண்டு காலம் விரைய சனி (முதல் கட்டம்), ஜென்ம சனி (இரண்டாம் கட்டம்) மற்றும் பாத சனி (மூன்றாம் கட்டம்) என மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Astro: இந்த ‘ராசி’ ஜோடிகள் 'MADE FOR EACH OTHER' தம்பதிகளாக இருப்பார்கள்! 

கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் இந்த விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்

- இந்த காலத்தில் தான் என்ற அகங்காரத்தை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும். இது பரஸ்பர உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய கடின உழைப்பை கைவிடாதீர்கள். கடினமாக உழைத்த பின்னரே நீங்கள் விரும்பிய பலனைப் பெறுவீர்கள். 

- நெறிமுறைக்கு புறம்பான வேலைகளைச் செய்வதையும், உங்கள் நன்மைக்காக பிறருக்கு சதி செய்வதையும் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் சட்ட நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளக்கூடும். அதே நேரத்தில், உங்கள் ஆரோக்கியத்திலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

- உங்கள் தினசரி பழக்க வழக்கங்களை நேர்த்தியாக வைத்திருங்கள். யோகா மற்றும் தியானம் செய்து உங்களை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ளலாம். 

- உங்கள் பேச்சையும் கோபத்தையும் கட்டுப்படுத்த வேண்டும், ஏனென்றால் ஆத்திரத்தில் நீங்கள் வீசும் வார்த்தையால் பல உறவுகளுக்கு இடையில் விரிசல்களை ஏற்படக்கூடும்,. 

- உணவிலும் அதிகபட்ச கவனம் தேவை. ஆரோக்கியமான, செரிமானம் ஆகக்கூடிய உணவை மட்டுமே உண்ணுங்கள். இதனுடன் உடலுக்கு தேவையான அளவு மட்டும் சாப்பிடுங்கள். இல்லையெனில் வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரலாம். 

- ஏழைகளுக்கு உதவுவதில் எப்போதும் நாட்டம் கொண்டிருப்பது நல்லது. இது சனி பகவானின் கோப பார்வையிலிருந்து உங்களை காப்பாற்றும். 

இந்த நிவாரணங்கள் கை கொடுக்கும்

- சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்.

- ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலையில் அரச மரத்தடியில் தீபம் ஏற்றவும்.

- முடிந்தால், ஊனமுற்றோருக்கு உங்கள் திறனுக்கு ஏற்ப உதவுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 2023 புத்தாண்டு ராசிபலன்: இந்த ராசிகளுக்கு பண விரயம், உடல்நலன் பாதிப்பு, எச்சரிக்கை தேவை!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News