சூரியனின் ராசி மாற்றத்தால் இந்த ராசிகளின் வாழ்க்கை ஜொலிக்கும், அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

Sun Transit: ஒருவரது ஜாதகத்தில் சூரியன் வலுவான நிலையில் இருந்தால், அவரது வாழ்க்கையில் அதிக முன்னேற்றமும் மரியாதையையும் கிடைக்கும் என்பது உறுதி.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 14, 2022, 06:16 PM IST
  • சூரியன் ராசி பரிவர்த்தனை 2022.
  • சூரியனின் சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தை அதிகரிக்கும்.
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் நல்ல பலன்களைத் தரும்.
சூரியனின் ராசி மாற்றத்தால் இந்த ராசிகளின் வாழ்க்கை ஜொலிக்கும், அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் title=

சூரியன் ராசி பரிவர்த்தனை 2022: ஜோதிடத்தின்படி, சூரியன் 1 மாதத்திற்கு ஒரு முறை ராசியை மாற்றுகிறார். இப்படி ஒரு வருடம் முழுவதும் அவர் 12 ராசிகளிலும் சஞ்சரிக்கிறார். 

நாளை அதாவது ஜூன் 15, 2022 அன்று சூரியன் மிதுன ராசியில் நுழைகிறார். இப்போது கிரகங்களின் ராஜாவான சூரியன், சுக்கிரனுக்குச் சொந்தமான ரிஷப ராசியில் இருக்கிறார். சூரியன் தைரியம், வெற்றி, தன்னம்பிக்கை, கௌரவம், ஆரோக்கியம் ஆகியவற்றைக் குறிப்பவர். 

ஒருவரது ஜாதகத்தில் சூரியன் வலுவான நிலையில் இருந்தால், அவரது வாழ்க்கையில் அதிக முன்னேற்றமும் மரியாதையையும் கிடைக்கும் என்பது உறுதி. சூரியன் மிதுன ராசியில் நுழைவது எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

இந்த ராசிகளின் அதிர்ஷ்டத்தை 'சூரியன்' பிரகாசிக்கச் செய்வார்

ரிஷபம்:

சூரியனின் சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தை அதிகரிக்கும். சிக்கி இருந்த பணம் இப்போது கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். 

சூரியனின் மாற்றத்தால் ரிஷப ராசிக்காரர்களின் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். அரசுத் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் மிகவும் நல்லது. அவருடைய பணி வெற்றியடையும். இந்த காலத்தில் பாராட்டும் மதிப்பும் அதிகமாகும்.

மேலும் படிக்க | ராசி மாறுகிறார் சூரியன்: எந்த ராசிகளுக்கு ஆதாயம், யாருக்கு ஆபத்து 

சிம்மம்:
சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன். சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் நல்ல பலன்களைத் தரும். அவர்கள் நிதி நன்மைகளைப் பெறுவார்கள். வருமானம் அதிகரிக்கும். நிதி நிலை வலுவடையும். 

சிம்ம ராசிக்காரர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. ஊதிய உயர்வும் கிடைக்கக்கூடும். சூரியனின் மாற்றம் சிம்ம ராசிக்க்காரர்களுக்கு பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு, மிதுன ராசியில் சூரியனின் பிரவேசம் பணியிடத்தில் பலமான பலன்களைத் தரும். தைரியமும் நம்பிக்கையும் நிறைந்தவராக இருப்பீர்கள். இதன் மூலம் ஒவ்வொரு பணியையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். 

இந்த காலத்தில் மகர ராசிக்கார்ரகளுக்கு பொருளாதார பலன்கள் உண்டாகும். பழைய கடன் சுமை தீரும். சர்ச்சைக்குரிய வழக்கில் வெற்றி கிடைக்கும்.

கும்பம்

சூரியப் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். புதிய வேலைக்கான தேடல் முடியும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த சூழல் இருக்கும். திருமண வாழ்க்கையும் சிறப்பாக அமையும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் நல்ல பொழுதை செலவழிப்பீர்கள். மொத்தத்தில் இந்த நேரம் மிக நன்றாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கேது பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பு அருளுடன், பண வரவு உண்டாகும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News