மேஷ ராசியில் நுழையும் செவ்வாய்; இந்த 3 ராசிகளுக்கு குபேர யோகம் தான்

செவ்வாய் பெயர்ச்சி 2022: செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி வாழ்க்கையின் பல அம்சங்களை பாதிக்கும் நிலையில், ஜூன் 27 ஆம் தேதி செவ்வாய் மேஷ ராசியில் நுழைவது 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 13, 2022, 08:28 AM IST
  • பதவி உயர்வு - சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
  • வியாபாரிகளின் வர்த்தக தொடர்புகள் அதிகரிக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் உதவியால் புதிய வாய்ப்புகள் வரும்.
மேஷ ராசியில் நுழையும் செவ்வாய்; இந்த 3 ராசிகளுக்கு குபேர யோகம் தான் title=

ஜோதிடத்தில், செவ்வாய் கிரகம் ஆற்றல், தைரியம், நிலம், திருமணம் ஆகியவற்றின் காரணியாக விவரிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. வரும் ஜூன் 27ம் தேதி செவ்வாய் கிரகம் ராசி மாறுகிறது. செவ்வாய் மேஷ ராசியில் நுழைவது அனைத்து ராசிகளையும் பாதிக்கும். அதில், செவ்வாய் சஞ்சாரம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரும். பணப் பலன்கள், தொழிலில் முன்னேற்றத்துடன் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் உண்டாகும்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரக சஞ்சாரம் மிகவும் சாதகமாகும். இந்த நேரத்தில் அவர்களின் வருமானம் அதிகரிக்கும். தொழிலில் ஆதாயம் கிடைக்கும். உங்கள் வேலையில் முன்னேற்றம் உங்கள் புகழை மேம்படுத்தும். அதே சமயம் தொழிலும் நல்ல நிலை இருக்கும். பண லாபம் அதிகரிக்கும். புதிய ஆர்டர்கள் அல்லது ஒப்பந்தங்கள் ஏற்படலாம். கூட்டாண்மையில் வேலை செய்பவர்களுக்கு பெரிய லாபம் கிடைக்கும். திருமணமானவர்கள் தங்கள் துணையின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.

மேலும் படிக்க | Astro Remedies: சகல தோஷங்களையும் நீக்கும் சோமவார விரதம்

கடகம்: கடக ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கைக்கு செவ்வாய்ப் பெயர்ச்சி மிகவும் சாதகமான காலத்தை கொண்டு வருகிறது. வேலைகளை மாற்றலாம். புதிய வேலை வாய்ப்பு உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். பதவி உயர்வு - சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் அதிகம். வியாபாரிகளின் வர்த்தக தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரம் விரிவடையும். புதிய சொத்து வாங்கலாம். பெரிய ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்படலாம். நீங்கள் வணிகத்தில் பெரிய முதலீடு செய்ய விரும்பினால், அதைச் செய்யலாம்.

சிம்மம்: செவ்வாயின் ராசி மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷடமான காலமாக இருக்கும். பண வரவு அதிகம் இருக்கும். இதுவரை முடங்கிக் கிடந்த பணிகள் மும்முரமாக நடக்கத் தொடங்கும். அதிர்ஷ்டத்தின் உதவியால் புதிய வாய்ப்புகள் வரும். அரசுத் துறையினர் ஆதாயமடைவார்கள். நீங்கள் ஒரு பயணத்தை மேற்கொள்ளலாம், இது எதிர்காலத்தில் உங்களுக்கு பெரிய நன்மைகளைத் தரும். தேர்வு-நேர்காணலுக்கு தயாராகும் நபர்கள் வெற்றி பெறலாம்.
 
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro: ஜாதகத்தில் சனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News