சனி நட்சத்திர பெயர்ச்சி: அடுத்த 7 மாதங்கள் இந்த ராசிகளுக்கு பண விரயம், உடல் நலம் கெடும், ஜாக்கிரதை!!

Shani Nakshatra Peyarchi 2023: சுமார் ஏழரை மாதங்கள் சனி பகவான் சதய நட்சத்திரத்தில் இருப்பது சில ராசிக்காரர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். இவர்கள் அதிக எச்சரிக்கையுட்ன் இருக்க வேண்டும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 21, 2023, 01:50 PM IST
  • கடக ராசிக்காரர்களுக்கு சனியின் ராசி மாற்றம் அத்தனை நல்லதாக இல்லை.
  • சனி அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துவார்.
  • அதாவது சில நோய்கள் மற்றும் மன அழுத்தங்கள் உங்களைச் சூழ்ந்துகொள்ளலாம்.
சனி நட்சத்திர பெயர்ச்சி: அடுத்த 7 மாதங்கள் இந்த ராசிகளுக்கு பண விரயம், உடல் நலம் கெடும், ஜாக்கிரதை!! title=

சனி நட்சத்திர பெயர்ச்சி 2023, ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. இது தவிர இவற்றின் இயக்கங்கள், அஸ்தமன மற்றும் உதயமாகும் நிலைகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த கிரகப் பெயர்ச்சிகள் பல சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகமாவார். மக்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் இவர் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். 

2023-ம் ஆண்டு தொடக்கத்தில் சனிபகவான் ராசியை மாற்றி கும்ப ராசியில் பெயர்ச்சியானார். தற்போது சனிபகவான் தனது நட்சத்திரத்தை மாற்றி சதய நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். அக்டோபர் 17, 2023 வரை சனிபகவான் சதய நட்சத்திரத்தில் இருப்பார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சுமார் ஏழரை மாதங்கள் சனி பகவான் சதய நட்சத்திரத்தில் இருப்பது சில ராசிக்காரர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். இவர்கள் அதிக எச்சரிக்கையுட்ன் இருக்க வேண்டும். 

இவர்கள் அடுத்த 7 மாதங்களுக்கு கவனமாக இருக்க வேண்டும்

குறிப்பிடத்தக்க வகையில், சனி பகவான் 3 ராசிக்காரர்களுக்கு அடுத்த 7 மாதங்களுக்கு தொல்லை தரலாம். ஆகையால், இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி பகவானின் கோவிலுக்குச் சென்று சனிபகவானை வணங்கி, பூஜைகள் செய்தால் நன்மை கிடைக்கும். ஏழை எளியவர்களுக்கு தானம் செய்வதாலும் சனி பகவானை மகிழ்ச்சியடையச் செய்யும். அடுத்த 7 மாத காலம் மிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

கடகம்: 

கடக ராசிக்காரர்களுக்கு சனியின் ராசி மாற்றம் அத்தனை நல்லதாக இல்லை. சனி அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துவார். அதாவது சில நோய்கள் மற்றும் மன அழுத்தங்கள் உங்களைச் சூழ்ந்துகொள்ளலாம். பணியிடத்தில் எதிரிகளிடமிருந்து விலகி இருங்கள், இல்லையெனில் அவர்கள் சில பிரச்சனைகளை உருவாக்கலாம். எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுவதற்கு முன்னரும் பல முறை அதை படித்து பாருங்கள். பெரிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் கவனமாக அதன் விளைவுகளை பற்றி யோசித்து பின் முடிவெடுக்கவும். 

மேலும் படிக்க | தெலுங்கு வருடப்பிறப்பு: இந்த ராசி மிகவும் கவனமா இருக்கணும்..! தொல்லைகள் அதிகரிக்க போகுது..

விருச்சிகம்: 

சனியின் ராசி மாற்றம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். பணம், சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். ஆரோக்கியத்தில் மோசமான விளைவு ஏற்படலாம். அனைத்து பணிகளை செய்யும்போதும் கண்டிப்பாக விதிகளைப் பின்பற்றவும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள்.

மீனம்: 

சதய நட்சத்திரத்தில் சனியின் சஞ்சாரம் மீன ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களைத் தரும். இந்த ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் இருக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் வரக்கூடும். செலவுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும். இந்த காலத்தில் முக்கிய பணிகளை செய்வதை தவிர்க்கவும். எப்படியிருந்தாலும், வேலையில் தடைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பண பரிவர்த்தனைகளில் அதிகபட்ச கவனம் தேவை. 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ’ஜோதிட அதிசயம்’ 100 ஆண்டுகளுக்குப் மீனத்தில் சங்கமிக்கும் 4 கிரகங்கங்கள்! ராஜயோகம் பிறக்கப்போகிறது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News