சதயத்தில் நுழைந்த சனியால் இந்த ராசிகளுக்கு சிக்கல், சிரமம்: சூதானமா இருங்க!!

Shani Nakshatra Gochar 2023: சனியின் நட்சத்திர மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். இந்த காலகட்டத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 18, 2023, 05:05 PM IST
  • மீன ராசிக்காரர்களுக்கு சனியின் இந்த சஞ்சாரம் அலைச்சலை உருவாக்கும்.
  • அக்டோபர் மாதம் வரை பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.
  • இந்த நேரத்தில் உங்கள் செலவுகள் அதிகமாக இருக்கும்.
சதயத்தில் நுழைந்த சனியால் இந்த ராசிகளுக்கு சிக்கல், சிரமம்: சூதானமா இருங்க!! title=

சனி நட்சத்திர பெயர்ச்சி 2023: சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். அவரது ஒவ்வொரு அசைவும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் சில நாட்களுக்கு முன்னர் ராகுவின் நட்சத்திரமான சதயத்தில் நுழைந்தார். இந்த நட்சத்திரம் கும்ப ராசியின் கீழ் வருகிறது. சனி கும்ப ராசியின் அதிபதியாவார். ஜோதிடத்தின்படி, சதய நட்சத்திரத்தின் முதல் மற்றும் கடைசி பாதத்தின் அதிபதி வியாழன் மற்றும் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாதத்தின் அதிபதி சனி பகவான். 

சதய நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் திறமையான சொற்பொழிவாளர்கள் மற்றும் அறிவாற்றல் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் பணக்காரர்களாகவும் கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள். மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் மதிப்புமிக்கவர்களாகவும், வளமானவர்களாகவும் கருதப்படுகிறார்கள். நான்காவது பாதத்தில் பிறந்தவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறார்கள், குழந்தைகளால் நன்மை பெறுகிறார்கள். 

சனி பகவான் சதய நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் அக்டோபர் 17 வரை இருப்பார். இதன் அதிபதி குரு. சனியின் இந்த நட்சத்திர மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். இந்த காலகட்டத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

கடக ராசி

சனியின் இந்த சஞ்சாரத்தால் கடக ராசிக்காரர்களின் வரவு செலவு பாதிக்கப்படும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். இதனால் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். எதிரிகள் மற்றும் இரகசிய எதிரிகளும் உங்களை சிக்கலில் ஆழ்த்துவார்கள். உங்களுக்கு சம்பந்தமே இல்லாத விஷயங்களுக்காக உங்களிடம் கேள்வி கேட்கப்படலாம். உணவு மற்றும் பானங்களில் கவனம் செலுத்துங்கள். போதைப்பொருளிலிருந்து விலகி இருங்கள்.

விருச்சிகம்

இந்த சனிப் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். இரத்த அழுத்தம் அல்லது வேறு ஏதேனும் இரத்த சம்பந்தமான நோய் இருந்தால், தொடர்ந்து பரிசோதனைகளை செய்துகொள்ளுங்கள். தவறான வழியில் பணம் சம்பாதிப்பவர்கள் அம்பலப்படுத்தப்படலாம். செலவுகளும் அதிகமாக இருக்கலாம். தாயாரின் உடல்நிலையில் சிரமம் ஏற்படும்.

மேலும் படிக்க | Guru Gochar: குரு பெயர்ச்சியால் நம்ப முடியாத நன்மைகளை பெறப்போகும் 5 ராசிகள்!

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் வரை பரபரப்பாக இருக்கும். சில தேவையற்ற இன்னல்களில் நீங்கள் சிக்க நேரிடலாம். உங்களுக்கு நெருக்கமானவர்களும் விசித்திரமாக நடந்து கொள்வார்கள். செலவுகளும் அதிகமாக இருக்கலாம். சிகிச்சைக்கான செலவுகளும் அதிகரிக்கும். பங்குதாரருடன் தகராறு அல்லது வாக்குவாதம் ஏற்படலாம். செய்யும் வேலையும் நின்று போகலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு சனியின் இந்த சஞ்சாரம் அலைச்சலை உருவாக்கும். அக்டோபர் மாதம் வரை பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். இந்த நேரத்தில் உங்கள் செலவுகள் அதிகமாக இருக்கும். பங்குதாரருடன் தகராறு ஏற்படலாம். உங்கள் சொந்த விஷயங்களில் கவனமாக இருங்கள். திருட்டு அல்லது நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ரிஸ்க் எடுப்பதை தவிர்க்கவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | செவ்வாயின் அருளால் உலக இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்க போகும் ‘சில’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News