’ஜோதிட அதிசயம்’ 100 ஆண்டுகளுக்குப் மீனத்தில் சங்கமிக்கும் 4 கிரகங்கங்கள்! ராஜயோகம் பிறக்கப்போகிறது

வேத ஜோதிடத்தின்படி, 100 ஆண்டுகளுக்குப் பிறகு மீனத்தில் 4 கிரகங்கள் சங்கமிக்கும் மாபெரும் சேர்க்கை நடைபெற இருக்கிறது. மீனத்தில் புதன், குரு, சூரியன், சந்திரன் சேர்க்கை நடைபெறுவதால் சில ராசிகளுக்கு ராஜயோகம் பிறக்கப்போகிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 21, 2023, 08:47 AM IST
’ஜோதிட அதிசயம்’ 100 ஆண்டுகளுக்குப் மீனத்தில் சங்கமிக்கும் 4 கிரகங்கங்கள்! ராஜயோகம் பிறக்கப்போகிறது

ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறது. தற்போது குரு மீனத்தில் இருக்கிறார். அதே நேரத்தில், புதன் மற்றும் சூரியன் மீனத்தில் உள்ளனர். மார்ச் 22 அன்று, சந்திரனும் மீன ராசியில் நுழைகிறார். இதனால் மீனத்தில் வியாழன், புதன், சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய நான்கு கிரகங்களும் ஒரே நேரத்தில் சங்கமித்திருப்பார்கள். இது மங்களகரமான ராஜயோகம்.  அதாவது ஒரே நேரத்தில் கஜகேசரி யோகம், நீச்சபங் யோகம், புதாதித்ய யோகம் மற்றும் ஹன்ஸ் யோகம் ஏற்படப்போகிறது. 100 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இப்படியான யோக நகிழ்வை ஜோதிட அதியம் என குறிப்பிடப்படுகிறது. 

ராஜயோகத்தால் செழிக்கப்போகும் 4 ராசிகள்

ரிஷபம்: 

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த 4 மகா யோகங்களின் சேர்க்கை மிகவும் சுப பலன்களைத் தரும். நீங்கள் பெரிய முன்னேற்றம் அடையலாம். திடீர் பண ஆதாயம் உண்டாகும். உங்கள் நிதி நிலையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படலாம். உங்கள் ஈர்ப்பு அதிகரிக்கும். புதிய வழிகளில் வருமானம் கிடைக்கும். பழைய முதலீடு நன்மை தரும். நீங்கள் ஒரு பெரிய பதவியைப் பெறலாம்.

மேலும் படிக்க | Astro Prediction: குருவும் சந்திரனும் இணைந்தால நவ பஞ்சம ராஜயோகம்! பாதிக்கும் ராசிகள்

மிதுனம்: 

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் வெற்றியைத் தரும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். புதிய வேலை கிடைக்கலாம். பதவி உயர்வு, இடமாற்றம், சம்பள உயர்வு போன்ற வாய்ப்புகள் உண்டு. அதிகாரம் மற்றும் ஆட்சி தொடர்பான பணிகள் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

கன்னி: 

இந்த ராஜயோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு வாழ்வில் பொன்னான நாட்களைக் கொண்டு வரும். பெரும் பண ஆதாயம் உண்டாகும். ஆல்ரவுண்ட் வெற்றி இருக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும். ஒரு பெரிய வணிக ஒப்பந்தம் இருக்கலாம். கூட்டுத் தொழிலில் வெற்றி பெறலாம். திருமண வாழ்க்கை, காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

கும்பம்: 

கும்ப ராசிக்காரர்களுக்கு 4 ராஜயோகங்களின் சேர்க்கை மிகுந்த நிம்மதியைத் தரும். சனியின் சதே சதியால் வாழ்வில் தொல்லைகள் குறையும். அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கத் தொடங்கும். செயல்களில் வெற்றி உண்டாகும். நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News