ஆவணி மாதத்தில் அதிர்ஷ்ட காற்றை சுவாசிக்கப் போகும் ‘5’ ராசிகள்

Lucky Zodiacs: ஆவணி மாதம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கும் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 10, 2022, 01:01 PM IST
  • பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.
  • உங்கள் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
  • ஆகஸ்ட் 17 முதல் வருமானம் அதிகரிக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன.
ஆவணி மாதத்தில் அதிர்ஷ்ட காற்றை சுவாசிக்கப் போகும் ‘5’ ராசிகள் title=

ஆவணி மாதத்தின் அதிர்ஷ்ட ராசிகள்: ஆக்ஸ்ட் மாதத்தில், பல கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் பெயர்ச்சி மற்றும் மாற்றத்தின் பலன்கள் அனைத்து ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகஸ்ட் 7 ஆம் தேதி சுக்கிரன் தனது ராசியை மாற்றிக் கொண்டார். செவ்வாய் தனது ராசியை ஆகஸ்ட் 10 ஆம் தேதி மாற்றுகிறார். இதன் மூலம் வரும் ஆவணி மாதத்தில் ராசிக்காரர்களின் வாழ்வில் மாற்றங்களைக் காணலாம். ஆவணி மாத தொடக்கத்தில் இருந்து சில ராசிக்காரர்களுக்கு பணவரவும், வேலையில் முன்னேற்றமும் உண்டாகும். ஆவணி மாதத்தில் ரிஷபம், துலாம், தனுசு, மகரம் மற்றும் மீனம் ஆகிய 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டசாமான மாதமாக இருக்கும் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். 

ரிஷபம்:

ஆகஸ்ட் 11 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு நிம்மதி கிடைக்கும். ஆகஸ்ட் 17 முதல் அன்னை மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆகஸ்ட் 21க்குப் பிறகு உங்கள் பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். பணியில், ஊதியம் அதிகரிப்பு இருக்கலாம். அறிவுசார் வேலைகளால் செல்வம் வரும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள்

துலாம்: 

மாத தொடக்கத்தில் இருந்தே தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பேசும் போது பொறுமையை கடைபிடியுங்கள். வியாபாரத்தில் நல்ல வருமானம் இருக்கும். ஆகஸ்ட் 17 முதல் வருமானம் அதிகரிக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால் அமைதியாக சிந்தித்து செயல்படவும். பொறுமையை கடைபிடிக்க வேண்டியது அவசியம். ஆகஸ்ட் 21 முதல் வணிகத்தை விரிவாக்கம் செய்ய முதலீடு செய்யலாம்.

மேலும் படிக்க | நீதி தேவன் சனி பகவானின் அருளை முழுமையாக பெறும் ‘3’ ராசிகள்

தனுசு:

நம்பிக்கை மிகுதியாக இருக்கும். ஆகஸ்ட் 11 முதல் செலவுகள் அதிகரிக்கும். ஆகஸ்ட் 17க்கு பிறகு வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. பணியித்தில் வேலை பளு அதிகரிக்கும். என்றாலும், உங்கள் உழைப்பிற்கு ஏற்ற பலன் இருக்கும். ஆகஸ்ட் 21க்கு பிறகு வியாபாரம் அதிகரிக்கும். உயர் அதிகாரியின் ஆதரவும் கிடைக்கும். பயணங்கள் அதிகமாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். வாகனப் பராமரிப்புச் செலவுகள் கூடும். எனினும் பயணத்தினால் ஆதாயம் கிடைக்கும்

மகரம்:

தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும், ஆனால் தன்னடக்கமும் இருக்கும். எதிர்பாராத பண வரவு கிடைக்கும். ஆகஸ்ட் 11 முதல் பொறுமை குறையும். எனவே பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் மேம்படும். ஆகஸ்ட் 17க்கு பிறகு வேலை செய்யும் இடத்தில் வேலை பளு குறையும். ஆகஸ்ட் 21 முதல் வியாபாரம் அதிகரிக்கும். லாப வாய்ப்புகள் அமையும். நண்பரின் ஆதரவையும் பெறலாம்.

மீனம்:

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த மாதம் உத்தியோகத்தில் ஆதரவு கிடைக்கும். ஆகஸ்ட் 11க்குப் பிறகு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். என்றாலும், உங்கள் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். ஆகஸ்ட் 17 முதல் செலவுகள் அதிகரிக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள் ஆகஸ்ட் 21 முதல் குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தில் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரம் பெருகும். பயணங்களால் நன்மை உண்டாகும். இசையில் ஆர்வம் கூடும்.

மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News