ரசித்து ருசித்துக் கொண்டே உடல் எடையை சுலபமாக குறைக்கலாம் தெரியுமா?

Weight Loss vs Dry Fruits: அதிகரித்து வரும் எடையால் சிரமப்படுபவர்களின் கவலையை போக்கும் கையளவு உணவு மந்திரம் இது. தினசரி ஒரு கைப்பிடி உலர் பழங்கள் உடல் எடையை சட்டென்று குறைக்கும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 7, 2022, 12:43 PM IST
  • உடல் எடையை குறைக்கும் உலர் பழங்கள்
  • இப்படி சாப்பிட்டா ஒல்லியான உடல்வாகுக்கு உத்தரவாதம்
  • ஆரோக்கியத்துடன் அழகையும் கொடுக்கும் எடை குறைப்பு டயட்
ரசித்து ருசித்துக் கொண்டே உடல் எடையை சுலபமாக குறைக்கலாம் தெரியுமா? title=

உடல் எடை குறைப்பு டிப்ஸ்: எடை அதிகரித்து குண்டாக இருப்பதால் சிரமப்படுபவர்களின் கவலையை போக்கும் கையளவு உணவு மந்திரம் இது. கையளவு உணவு என்றதும் பயப்பட வேண்டாம். இது தினசரி ஒரு கைப்பிடி உலர் பழங்கள் மூலம் உடல் எடையை சட்டென்று சிக்கென்று குறைக்கும் வழிமுறை இது. தினமும் ஒரு கைப்பிடி அளவு உலர் பழங்களை சாப்பிட்டு வர உடல் எடை குறைந்து இளமையாக காட்சியளிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தமட்டில், ஒரே பொருள், சில விஷயங்களில் நல்லதை செய்தால், மற்றொன்றில் தீமை செய்யும்.

ஆனால், உலர் பழங்கள் இந்த வரையறைக்குள் வராதவை. தவறான உணவு முறையும், சீரழிந்து வரும் வாழ்க்கை முறையை மாற்றுவதற்கும் உலர் பழங்கள் தீர்வாகிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் நோய்கள் தற்போது இளம் வயதிலேயே வந்துவிட்ட நிலையில், எப்போதும் உடல் எடை என்பது பலரின் கவலையாகவே மாறிவிட்டது.  

மேலும் படிக்க | ரசாயனம் சேர்க்கப்படாத ஆர்கானிக் கருப்பட்டி

ஒரு கைப்பிடி உலர் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
தினமும் ஒரு கையளவு உலர் பழங்களை சாப்பிட்டு வந்தால், அது எடையைக் கட்டுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், உலர்ந்த பழங்களில் உள்ள நார்ச்சத்து  வயிற்றை ஆரோக்கியமாகவும், வைத்திருக்க உதவுகிறது. ஒரு சில உலர் பழங்கள் உங்கள் நினைவாற்றலை அதிகரிக்க பயனுள்ளதாக இருக்கும்.

உலர் பழங்களில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளையை கூர்மைப்படுத்துவதற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.

உடலில் ஆற்றலை அதிகரிக்க ஒரு கைப்பிடி உலர் பழங்களை உட்கொள்ளலாம். அவற்றில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. ஊட்டச்சத்துக்கள் கொண்ட உலர் பழங்களை சாப்பிடுவதன் மூலம் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க முடியும்.

மேலும் படிக்க | வெறும் வயிற்றில் குடித்தால் தொப்பையை காணாமல் போக்கும் அற்புத பானங்கள்

தினசரி ஒரு கைப்பிடி உலர்பழங்கள் என்றால், எந்தெந்த உலர் பழங்களை எந்த அளவு எடுத்துக் கொள்வது? 2 பிஸ்தா, 3 முதல் 4 திராட்சை, 1 அத்திப்பழம், 2 முந்திரி, 2 முதல் 3 பாதாம், 1 பேரீச்சம்பழம், தேங்காய் துருவல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.

இந்த உலர்பழக் கலவை எந்த நேரத்திலும் சாப்பிடலாம். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்திருந்தால், காலையில் வெறும் வயிற்றில் பாதாம் சாப்பிடுவது நல்லது என்று சொல்வார்கள். பாதாம் பருப்பை உட்கொள்வதால், வலுவான உடலை பெறலாம். 

பாதாம் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து எடையை கட்டுப்படுத்துகிறது என்றால், பிஸ்தாவில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. பிஸ்தா சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும். இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ரால் குறையும். பேரிச்சம்பழமும், உலர் திராட்சையும் ஹீமோகுளோபினை அதிகரிக்கும்.

மேலும் படிக்க | நீரிழிவு நோயை கால் மூலம் தெரிந்துக் கொள்ள முடியும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News