எண் ‘8’ மற்றும் ‘ஏழரை’ சனீஸ்வரருக்கும் உள்ள தொடர்பு! எட்டுக்கு அருள்புரிவார் சனி

8ம் தேதியன்று பிறந்தவர்களிடம் தனி அன்பு வைத்திருக்கிறார் சனி பகவான். 8, 17, 26ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு ’ஏழரை’ என்றாலே நினைவில் வரும் சனீஸ்வரர் அனுக்கிரகம் செய்கிறார் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 29, 2023, 04:22 PM IST
  • எதிரிகள் சிக்கலில் ஆழ்த்தினாலும் உறுதியாய் நிற்கும் 8
  • செலவை குறைக்கும் சிக்கனக்காரர்கள்
  • ரகசியத்தை காப்பாற்றும் சனியின் செல்லப்பிள்ளைகள்
எண் ‘8’ மற்றும் ‘ஏழரை’ சனீஸ்வரருக்கும் உள்ள தொடர்பு! எட்டுக்கு அருள்புரிவார் சனி  title=

சனீஸ்வரர் தனது செயல்களுக்கு ஏற்ப பலன்களைக் கொடுக்கும் கடவுள், எனவே அவர் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். எண் கணிதத்தில், சனி எண் 8 இன் அதிபதி என்று விவரிக்கப்படுகிறது. எண் கணிதத்தில், 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. ரேடிக்ஸ் என்பது ஒரு நபரின் பிறந்த தேதியின் கூட்டுத்தொகை. உதாரணமாக, எந்த மாதத்திலும் 8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிறந்தவருக்கு ரேடிக்ஸ் 8 இருக்கும். 

எண் கணிதத்தில், 1 முதல் 9 வரை உள்ள ஒவ்வொரு எண்ணும் ஒன்று அல்லது மற்றொரு கிரகத்துடன் தொடர்புடையது. இதில், ரேடிக்ஸ் 8 க்கு அதிபதி சனி தேவன்.  எனவே, 8ம் தேதியன்று பிறந்தவர்களிடம் தனி அன்பு வைத்திருக்கிறார் சனி பகவான். 8, 17, 26ம் தேதிகளில் பிறந்தவர்களிடம் ’ஏழரை’ என்றாலே நினைவில் வரும் சனீஸ்வரர் அளவில் அனுக்கிரகம் செய்கிறார்.

8ம் எண்ணில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகள்

எட்டாம் தேதியன்று பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகள், நேர்மையானவர்கள் மற்றும் பொறுமைசாலிகள். அவர்கள் தவறை சகித்துக்கொள்ள மாட்டார்கள், தவறு ஏதேனும் நடந்தால், அவர்கள் உறுதியாக எதிர்த்து நிற்பார்கள். மேலும், எளிதில் உணர்ச்சிவசப்படும் எட்டாம் எண்ணை சேர்ந்தவர்கள், தாங்கள் நினைத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்று உறுதியாக இருப்பார்கள்.

எளிமையான வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை

17ம் தேதியன்று பிறந்தவர்கள், எளிமையான வாழ்க்கை வாழ விரும்புவார்கள். உயர்ந்த சிந்தனை கொண்ட இவர்கள், வெளித்தோற்றத்தை நம்புவதில்லை. நிறைய பணம் சம்பாதித்தாலும், பணத்தை உரிய முறையில் சரியாக பயன்படுத்துவார்கள். பணத்தையோ பொருளையோ வீணாக்குவதில்லை. உதாரணமாக, பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தேதி செப்டம்பர் 17, அவருக்கு சனி பகவானின் அனுக்கிரகமும் உண்டு, கடின உழைப்பினால் உன்னத இடத்தை அடைந்துள்ளார்.

மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, சகல செல்வங்களையும் கொடுக்கும் கோபூஜை!

வாழ்க்கையில் உயர் பதவி கிடைக்கும்

26ம் தேதியன்று பிறந்தவர்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மனப்பான்மைக் கொண்டவர்கள். தங்களின் உழைப்பாலும் அர்பணிப்புள்ள பணிகளாலும், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைகிறார்கள். இவர்களுக்கு பெரிய பதவியும் மரியாதையும் கிடைக்கும்.   

8, 17, 26ம் தேதியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே இரகசியத்தன்மை பேணுபவர்கள்  

8, 17, 26ம் தேதியில் பிறந்தவர்கள் இரகசியத்தன்மை பேணுவதை தங்கள் இயல்பாகக் கொண்டவர்கள். இயற்கையில் கொஞ்சம் மர்மமானவர்கள். அவர்கள் தங்கள் விஷயங்களை யாரிடமும் எளிதில் சொல்ல மாட்டார்கள். யாரையும் எளிதில் நண்பர்களாக்கிக் கொள்ளவும் மாட்டார்கள். ஆனால் ஒருவரை நண்பராக்கினால், அவரை கடைசிவரை விட்டுவிடுவதில்லை.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | செவ்வாயின் அருளால் உலக இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்க போகும் ‘சில’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News