சதயத்தில் சனி! சிக்கலில் சிக்கும் ‘சில’ ராசிகளுக்கான பரிகாரங்கள்!

Saturn Transit: சனிபகவானின் நிலை மாற்றம் அனைத்து ராசிக்காரர்களிலும் தாக்கத்தை ஏற்படும் என்ராலும், இந்த சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் மிகவும் பாதிக்கப்படப் போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 19, 2023, 02:55 PM IST
  • எதிரிகள் உங்களை சிக்கலில் ஆழ்த்துவார்கள்.
  • செலவுகளும் அதிகமாக இருக்கலாம்.
  • மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.
சதயத்தில் சனி! சிக்கலில் சிக்கும் ‘சில’ ராசிகளுக்கான பரிகாரங்கள்! title=

சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 புதன்கிழமை அன்று சதய நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். அக்டோபர் 17 வரை சனி இந்த நக்ஷத்திரத்தில் இருப்பார். சனிபகவானின் நிலை மாற்றம் அனைத்து ராசிக்காரர்களிலும் தாக்கத்தை ஏற்படும் என்ராலும், இந்த சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் மிகவும் பாதிக்கப்படப் போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். சனியின் இந்த நட்சத்திர மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் என எச்சரிக்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள். 

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்கள் ராகுவின் ராசியில் சனி நுழைவதால் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த ராசிக்காரர்கள் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை என்றாலும் புதிய வேலைகள் ஏதையும் தொடங்கும் முன், நன்கு ஆராய்ந்து செய்ய வேண்டியிருக்கும். இல்லை என்றால் தோல்விகளையும், இழப்புக்களையும் சந்திக்க நேரிடும். வாழ்க்கை துணையுடனான உறவில் நம்பிக்கை இருக்க வேண்டும். வீண் சந்தேகம் கூடாது. அப்போதுதான், காதம் அன்பு வளரும். உடல் ஆரோக்கியம் மீதும் கவனம் தேவை.

கடக ராசி

ராகுவின் நட்சத்திரமான சதயத்தில் சனி நுழைவதால் கவனமாக இருக்குமாறு கடக ராசிக்காரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். வாகனம் ஓட்டும்போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். பெரியவர்களிடம் குரல் உயர்த்தி பேசுவதை தவிர்க்கவும். மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். எதிரிகள் மற்றும் இரகசிய எதிரிகளும் உங்களை சிக்கலில் ஆழ்த்துவார்கள்.

மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!

விருச்சிக ராசி

ராகுவின் நக்ஷத்திரத்தில் சனி நுழைவது விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிரச்சனையை உண்டாக்கும். சனிக்கிழமையன்று சனி பகவானை வழிபடுவதை கட்டாயமாக்கிக் கொள்ளவும். நீங்கள் நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக் கொண்டால், கவனமாக இருக்க வேண்டியது அவசியம், கவனமாக சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. செலவுகளும் அதிகமாக இருக்கலாம். தாயாரின் உடல்நிலையில் சிரமம் ஏற்படும்.

மகர ராசி

ராகுவின் நக்ஷத்திரத்தில் சனி நுழைவதால், மகர ராசிக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதுடன், துணையின் உடல் நலனில் அக்கறையும் இருக்கும். பணத்தை சேமிக்க கற்றுக்கொள்ளுங்கள். திருட்டு அல்லது நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ரிஸ்க் எடுப்பதை தவிர்க்கவும். செலவுகளும் அதிகமாக இருக்கலாம். சிகிச்சைக்கான செலவுகளும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, சகல செல்வங்களையும் கொடுக்கும் கோபூஜை!

சிக்கலில் இருந்து தப்பிக்க சில பரிகாரங்கள்:

சனியின் கோபத்தைத் தவிர்க்க கோளறு பதிகம், சனி ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்யவும்.

சனியின் அசுப பலன்களைத் தவிர்க்க, சனிக்கிழமையன்று சனி கோவிலில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும்.

உங்களால் முடிந்தவரை ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யவும்.

பசுவிற்கு உணவளித்து, பசுவை சேவிப்பதால் சனியின் தோஷங்கள் விலகும். சனி தேவரின் ஆசீர்வாதம் அந்த நபருக்கு இருக்கும்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தை வழிபட வேண்டும். அரச மரத்திற்கு நீர் அல்லது பால வழங்குவது உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | செவ்வாயின் அருளால் உலக இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்க போகும் ‘சில’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News