கும்ப ராசியில் இணையும் எதிரி கிரகங்கள் சூரியன்-சனி இணைப்பால் மகிழும் ராசிகள்

Shani Surya Yogam 2023: கும்ப ராசியில் இணையும் எதிரி கிரகங்கள் சூரியன்-சனி! அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள்! சனியுடன் சூரியன் இணைந்தால் யோகம் என்பதற்கு உதாரணமான முத்தான 3 ராசிகள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 13, 2023, 09:46 AM IST
  • எதிரிகளின் இணைவால் மகிழும் முத்தான மூன்று ராசிகள்
  • தனுசு ராசிக்கு புகழ் அதிகரிக்கும்
  • மேஷ ராசிக்காரர்களுக்கு பலதுறைகளிலும் வெற்றி
கும்ப ராசியில் இணையும் எதிரி கிரகங்கள் சூரியன்-சனி இணைப்பால் மகிழும் ராசிகள் title=

சனியுடன் சூரியன் இணைந்தால் யோகம்: இந்த ஆண்டு கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கம் மற்றும் ராசி மாற்றங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். ஜோதிடக் கணக்கீடுகளின்படி, இரண்டு எதிரி கிரகங்கள் கும்ப ராசியில் இணைவது நல்ல பலன்களைத் தரும். இரண்டு எதிரி கிரகங்களான சூரியனும் சனியும் கும்ப ராசியில் இணைவதால் ஏற்படும் யோகம் சிலருக்கு நன்மைகளைத் தரும்.   

மகரத்தில் சூரியன் பெயர்ச்சி

2023 ஆம் ஆண்டு தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜனவரி 15ம் தேதியன்று சூரியன் சுஞ்சாரத்தை மாற்றுகிறார். அன்று பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. மகர சங்கராந்தி என்று அழைக்கப்படும் சூரியனின் மகர ராசி பரிவர்த்தனையைத் தொடர்ந்து சனி பகவானும் தனது சஞ்சாரத்தை மாற்றுகிறார். சனீஸ்வரர், 30 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கோண ராசியான கும்பத்தில் நுழைகிறார்.

சனிப் பெயர்ச்சி

சூரியப் பெயர்ச்சிக்கு பிறகு சனீஸ்வரர் கும்பத்திற்கு பெயர்சியான பிறகு, பிப்ரவரி 13, 2023 அன்று கிரகங்களின் அரசன் சூரியனும் கும்பத்திற்கு செல்கிறார். எதிரி கிரகங்களான சூரியன் மற்றும் சனி இரண்டும் ஒரே ராசியில் இணைவதால் உருவாகும் யோகத்தால் வாழ்க்கையில் வளமும் செழிப்பும் பெறும் ராசிகள் இவை...

மேலும் படிக்க | Budh Uday 2023: புதனின் உதயத்தால் வாழ்க்கையில் சுகத்தையும் மகிழ்ச்சியையும் பெறும் ‘4’ ராசிகள்

கும்பத்தில் சூரியன் பெயர்ச்சி

தனுசு: சூரியன் மற்றும் சனியின் சேர்க்கையால், தனுசு ராசிக்காரர்களுக்கு தைரியம் மற்றும் வீரம் அதிகரிக்கும். மேற்கொள்ளும் பயணங்களால் நன்மை உண்டாகும். பிறரை ஈர்க்கும் வகையில் பேசி, காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமையும் ஏற்படும். ஒட்டுமொத்தத்தில் சூரியன் சனி இணைவதால் தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் வசந்தம் வீசும்.  

மேஷம்: மேஷ ராசிக்கு சூரியன் ஐந்தாமிடத்தின் அதிபதியாக இருந்தால், சனி பத்தாம் வீட்டிற்கு அதிபதியாக இருக்கிறார். சூரியன் - சனி சேர்க்கையினால், மேஷ ராசியினரின் வருமானம் கூடும். வேறு புதிய வருவாய் ஆதாரங்களும் ஏற்படும். பொது வாழ்க்கையில் மரியாதை கூடும். இந்த நேரத்தில் நீங்கள் தொடங்கும் புதிய வேலை அல்லது ஏற்படும் உறவு நீண்ட காலம் நல்ல பலன்களைத் தரும்.  

ரிஷபம்: சூரியன்-சனி இணைவதால் ரிஷப ராசியினருக்கு ராஜயோகம் போன்ற அருமையான பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். தடைபட்ட வேலைகள் முடிவடையும். குடும்பத்திலும், நட்பு வட்டாரத்திலும் மிகுந்த இணக்கத்துடன் நடந்துக் கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும். மகிழ்ச்சியைத் தரும் சூரியன் சனி இணைவினால். வீடு, சொத்து வாங்கும் வாய்ப்பு பெற்று நிம்மதியாக வாழலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

 மேலும் படிக்க | சுக்கிரனின் சஞ்சாரத்தால் ‘சம்சார சுகம்’ பெறும் 3 ராசிகள்! திருமணத் தடை நீங்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News