சுக்கிரனின் சஞ்சாரத்தால் ‘சம்சார சுகம்’ பெறும் 3 ராசிகள்! திருமணத் தடை நீங்கும்

Venus Transit January 22: களத்திரகாரகன் என அழைக்கப்படும் சுக்கிரன் வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர். பொங்கல்  முடிந்த ஒரு வாரத்தில் வரும் சுக்கிரன் பெயர்ச்சி 3 ராசிகளுக்கு சுபமாய் அமையும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 12, 2023, 07:05 PM IST
  • பொங்கல் முடிந்த ஒரு வாரத்தில் வரும் சுக்கிரன் பெயர்ச்சி
  • 3 ராசிகளுக்கு சுபமாய் அமையும் சுக்கிரன் சஞ்சாரம்
  • காதல் வாழ்க்கை கைகூடும் ராசிக்காரர் நீங்களா?
சுக்கிரனின் சஞ்சாரத்தால் ‘சம்சார சுகம்’ பெறும் 3 ராசிகள்! திருமணத் தடை நீங்கும் title=

Venus Transit: களத்திரகாரகன் என அழைக்கப்படும் சுக்கிர பகவான் வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர். சுக்கிரன் ஜாதகத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருந்தால் திருமணத் தடைகள் இருக்காது. ஆனால், சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் அசுபமான இடத்தில் அமர்ந்துவிட்டால், வாழ்க்கையில் துணை அமைவது மட்டுமல்ல, காதலும் கசந்துவிடும். சுப கிரகமான சுக்கிரன், அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களையும் அளிப்பவர், சரியான இடத்தில் அமையாவிட்டால், காதலையும், திருமணத்தையும் அழித்துவிடுவார். 

ஆனந்தத்தை அடைவதற்குரிய மனநிலையை உருவாக்கும் சுக்கிரன் பகவானே, காதல், காமம், திருமணம் என இரு பாலினங்களுக்கும் இடையிலான உறவையும், சுகத்தையும் அளிப்பவர். பெண்களின் வசீகரத்தன்மை, அழகான தோற்றம், கவர்ச்சி, வீரியசக்தி, அறிவாற்றல், மனத்துக்கிசைந்த வாழ்க்கைத்துணையை அடைவது, சுக போகங்களைக் கொடுப்பது என வாழ்க்கையில் சுகத்தை அளிப்பவரும் சுக்கிரனே.  

மேலும் படிக்க | மகரத்தில் இணையும் சனி - சுக்கிரன்!  ‘இந்த’ ராசிகளுக்கு குபேர யோகம்!

இப்படிப்பட்ட சுக்கிர பகவான், சனியின் ராசியில் சஞ்சரிப்பதால் சில ராசிகளுக்கு நன்மை நடக்கும். ஜனவரி 22 ஆம் தேதி, சுக்கிரன் சனியின் ராசியான கும்பத்தில் சஞ்சரிக்க உள்ளார். பொங்கல்  முடிந்த ஒரு வாரத்தில் வரும் சுக்கிரன் பெயர்ச்சி 3 ராசிகளுக்கு சுபமாய் அமையும்... இதனால் பயனடையும் ராசிகள் இவை...  

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் லக்னம் மற்றும் ஆறாம் வீட்டிற்கு அதிபதி. சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். சக பெண்களின் உதவியால் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பெண்கள் புதிய வேலையைத் தொடங்கலாம். ஒரு தோழியினால் உங்களுக்கு நன்மைகள் ஏற்படும். வாகனம் வாங்கும் வாய்ப்பும் உண்டு. சுக்கிரனின் ஆசியால் வீட்டில் சுப காரியங்கள் முடியும்.
 
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு எட்டாம் வீட்டிற்கும் லக்னத்திற்கும் அதிபதி சுக்கிரன். சுக்கிரனின் சஞ்சாரத்தால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அன்பான உறவு நீடிக்கும். சினிமா மற்றும் கலைத்துறையில் தொடர்புடையவர்களுக்கு இந்த பெயர்ச்சி பல நன்மைகளைத் தரும். தொடர்பு மற்றும் எழுத்து சம்பந்தமானவர்களுக்கு பெரிய வேலை வாய்ப்பு வரலாம்.

கும்பம்

லக்னத்தில் இருக்கும்  சுக்கிரன் இந்த ராசியில் சஞ்சரிப்பார். இதனால், எல்லா பக்கங்களிலிருந்தும் மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். திருமணத்தில் தடைகள் ஏற்பட்டிருந்தால் அவை விலகும். கூட்டாண்மையில் ஒரு வேலையையும் தொடங்க நினைத்தால், அது ஒரு நல்ல நேரம். சமூகத்தில் மரியாதை கூடும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  

மேலும் படிக்க | ஜனவரியில் அஸ்தமனமாகும் சனியினால் ‘இந்த’ ராசிகளின் பொற்காலம் ஆரம்பம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News