ராமாயண பக்தி சுற்றுலா ரயில் துவக்கம்: 65000 கட்டணம்: 18 நாட்கள் பயணம்

இந்தியா - நேபாளம் வழியே 18 நாட்களுக்கு எட்டு மாநிலங்களில் 8,000 கி.மீ. துாரம் பயணிக்கும் ஸ்ரீ ராமாயண யாத்ரா ரயில்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 12, 2022, 01:06 PM IST
  • ஜனக்பூரில் அமைந்துள்ள அன்னை சீதாபிராட்டி கோவிலுக்கு செல்லும் ஸ்ரீ ராமாயண யாத்ரா
  • 18 நாட்கள் பயணம் செய்யும் ஸ்ரீ ராமாயண யாத்ரா ரயில்
  • ரயில் கட்டணம் 65000 ரூபாய்
ராமாயண பக்தி சுற்றுலா ரயில் துவக்கம்: 65000 கட்டணம்: 18 நாட்கள் பயணம் title=

புதுடெல்லி: இந்திய இரயில்வே சுற்றுலா மற்றும் கேட்டரிங் கார்ப்பரேஷன் (IRCTC) வழங்கும் ஸ்ரீ ராமாயண யாத்ரா ரயில், சர்வதேச யோகா தினமான 21ம் தேதியன்று இந்தியா - நேபாளம் இடையே முதன்முறையாக ராமாயண பக்தி சுற்றுலா பயணம் தொடங்குகிறது.

ஐஆர்சிடிசியின் ஸ்ரீ ராமாயண் யாத்ரா ரயிலுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ராமரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கிய இடங்களுக்கு செல்வதற்காக, ஸ்ரீ ராமாயண யாத்ரா ரயிலை IRCTC தொடங்கியுள்ளது. 

இந்த ரயில், இந்தியா - நேபாளம் வழியே 18 நாட்களுக்கு எட்டு மாநிலங்களில் 8,000 கி.மீ., துாரத்திற்கு செல்லும். இந்த பக்தி சுற்றுலாவில் முதல் முறையாக நேபாளத்தில், ஜனக்பூரில் அமைந்துள்ள அன்னை சீதாபிராட்டி கோவிலுக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

மேலும் படிக்க | IRCTCயின் ஸ்ரீ ராமாயண் யாத்ரா ரயிலுக்கு அமோக வரவேற்பு

டெல்லியில் இருந்து புறப்படும் இந்த ரயில் முதலில் ராமர் பிறந்த அயோத்திக்குச் செல்லும் அங்கு ராம ஜன்மபூமி கோவில், ஹனுமன் கோவிலுக்கு பக்தர்களை அழைத்துச் செல்லும். நந்திகிராமில் உள்ள பரதன் கோவிலுக்கும் பயணிகள் தரிசனத்திற்காக அழைத்துச் செல்லப்படுவார்கள்.

அதன்பிறகு நேபாளத்தின் ஜனக்பூர், பீஹாரின் சீதாமார்ஹி, காசி, பிரயாகை, ம.பி.,யின் சித்ரகூடம் ஆகிய இடங்களுக்கு இந்த ரயில் செல்லும். மேலும் மஹாராஷ்டிராவின் நாசிக், கர்நாடகாவின் ஹம்பி, தமிழகத்தின் ராமேஸ்வரம், காஞ்சிபுரம், தெலுங்கானாவின் பத்ராச்சலம் ஆகிய தலங்களுக்கும் பக்தர்களை இந்த ரயில் அழைத்துச் செல்லும்.

ரயில் பயணத்தில் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ராமாயண பக்தி சுற்றுலாவுக்கு நபர் ஒருவருக்கு கட்டணம் 65 ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், உணவு, தங்குமிடம், சுற்றுலா வழிகாட்டி, காப்பீடு உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அடங்கும்.

600 நபர்கள் பயணிக்க கூடிய இந்த ரயிலில் இதுவரை 450 பேர் ராமாயண பக்தி சுற்றுலாவுக்கு பதிவு செய்துள்ளனர். இந்த ரயிலில் 18 நாட்களில் எட்டு மாநிலங்களுக்கு பயணம். இராமாயணத்தில் தொடர்புடைய இடங்களை தரிசிக்கலாம்.

இந்த ரயில் இந்தியா - நேபாளம் வழியே 18 நாட்களுக்கு எட்டு மாநிலங்களில் 8,000 கி.மீ. துாரத்திற்கு செல்லும். இந்த பக்தி சுற்றுலாவில் முதல்முறையாக நேபாளத்தில் ஜனக்பூரில் அமைந்துள்ள சீதாபிராட்டி கோவிலுக்கு பயணியர் அழைத்துச் செல்லப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Sperm Donation: விந்தணு தானம் குறித்து ‘அறியாத’ தகவல்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News