மாத ராசிபலன்: டிசம்பரில் இந்த ராசிகளுக்கு நஷ்டம், ஆரோக்கியம் படுத்தும், ஜாக்கிரதை

Monthly Horoscope December 2022: குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் இந்த மாதம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குடும்பம், நிதிநிலை, வேலை, வியாபாரம் என அனைத்திலும் மிக கவனமாக இருப்பது நல்லது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 29, 2022, 11:58 AM IST
  • கடக ராசிக்காரர்கள் பணியிடத்தில் ஏற்ற இறக்கங்களை சந்திக்க வேண்டி இருக்கும்.
  • கவனக்குறைவாக இல்லாமால், மிகவும் கனவமாக செயல்பட்டால், இந்த நேரத்தை எளிதாக கடந்துவிடலாம்.
  • மாத இறுதியில் நிம்மதி உண்டாகும்.
மாத ராசிபலன்: டிசம்பரில் இந்த ராசிகளுக்கு நஷ்டம், ஆரோக்கியம் படுத்தும், ஜாக்கிரதை title=

மாதாந்திர ராசிபலன் டிசம்பர் 2022: 2022 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ளது. டிசம்பர் மாதம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது. டிசம்பரில் பல முக்கியமான கிரக மாற்றங்கள் நிகழவுள்ளன. கிரகங்களின் மாற்றத்தின் தாக்கம் அனைத்து 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும். இந்த மாற்றங்களால் சிலருக்கு சுப பலன்களும் சிலருக்கு அசுப பலன்களும் கிட்டும்.

குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் இந்த மாதம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குடும்பம், நிதிநிலை, வேலை, வியாபாரம் என அனைத்திலும் மிக கவனமாக இருப்பது நல்லது. இந்த மாதம் இவர்கள் சில சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும். டிசம்பரில் இக்கட்டான சூழலை எதிர்கொள்ளப்போகும் ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

டிசம்பரில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்:

மிதுனம்: 

மிதுன ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் சாதகமாக இருக்கும். இருப்பினும், பணியிடத்தில் நிலைமைகள் மிகவும் சாதகமற்றதாக இருக்கும். விஷயங்கள் கட்டுப்பாடில்லாமல் போவதாகத் தோன்றும். பொறுமையாகவும் தைரியமாகவும் இருந்து இந்த நேரத்தை கடப்பது நல்லது. குடும்பத்தில் ஒரு வயதானவர் காரணமாக கவலை ஏற்படலாம். சோர்வு தரும் பயணங்கள் இந்த மாதத்தில் இருக்கும்.

மேலும் படிக்க | சனி பெயர்ச்சி பலன் 2023: வேலையில் சிக்கல் யாருக்கு, சனியின் ஆட்டம்

கடகம்: 

பணியிடத்தில் ஏற்ற இறக்கங்களை சந்திக்க வேண்டி இருக்கும். நீங்கள் கவனக்குறைவாக இல்லாமால், மிகவும் கனவமாக செயல்பட்டால், இந்த நேரத்தை எளிதாக கடந்துவிடலாம். மாத இறுதியில் நிம்மதி உண்டாகும். காதல் வாழ்க்கையில் பிரச்சனைகள் வரலாம். இதயம் சோகமாகும் விஷயங்கள் நடக்கலாம். சில காரணங்களால் குடும்பத்தில் பதற்றமான சூழ்நிலையும் ஏற்படலாம். தூக்கமின்மை ஒரு பிரச்சனையாக இருக்கலாம். இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும். 

கன்னி: 

சில வதந்திகள் காரணமாக மனம் அலைகழிய நேரிடும். தேவையற்ற மன அழுத்தம் மற்றும் கவலைகள் உங்களை சூழ்ந்திருக்கும். அதே நேரத்தில் மாத இறுதியில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. பயணங்களால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மாதம் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

மகரம்: 

பணியிடத்தில், உங்கள் எதிரிகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடும். சிலர் உங்கள் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்து அதன் மூலம் உங்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சி செய்யலாம். எதிரிகளை புறக்கணித்து வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்திலும் சவால்களை சந்திக்க நேரிடும். சில விஷயங்களுக்காக நீதிமன்றத்தை அணுகக்கூடிய சூழல் ஏற்படலாம். இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. 

தனுசு: 

தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில் தொடர்பான சில கவலைகள் இந்த மாதம் ஆதிக்கம் செலுத்தும். செலவுகள் அதிகரிக்கும். இதைக் கட்டுப்படுத்த, உங்கள் நிதிநிலையை மனதில் வைத்து செயல்படுங்கள். இந்த மாதம் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள், இல்லையெனில் கோபத்தின் காரணமாக பல வேலைகள் கெட்டுவிடும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்கலை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதனின் அருளால் உருவாகும் பத்ர ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் நேரம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News