2023-ன் அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்: ஆண்டு முழுதும் அமோக யோகம், வெற்றிகள் குவியும்

New Year Horoscope: 2023-ம் ஆண்டின் அதிஷ்ட ராசிகள் எவை? இவர்களுக்கு கிடைக்கப்போகும் நல்ல பலன்கள் என்ன? அனைத்தையும் இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 28, 2022, 03:34 PM IST
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு 2023ஆம் ஆண்டு அற்புதமாக அமையப் போகிறது.
  • ஜனவரி மாத தொடக்கத்திலேயே இவர்களுக்கு பல நல்ல செய்திகள் வரும்.
  • வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.
2023-ன் அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்: ஆண்டு முழுதும் அமோக யோகம், வெற்றிகள் குவியும் title=

2023 புத்தாண்டின் மிகவும் அதிர்ஷ்டமான ராசிகள்: 2023 ஆம் ஆண்டு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த ஆண்டு எப்படி இருக்கும்? யாருக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என தெரிந்துகொள்ள அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். 2023 ஆம் ஆண்டு ஜோதிடத்தின் அடிப்படையிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக பார்க்கப்படுகின்றது. ஆண்டின் துவக்கத்திலேயே சனி பகவானின் பெயர்ச்சி நடக்கவுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், 5 ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு பல வித பரிசுகளைக் கொடுக்கவுள்ளது. 

இந்த ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு, பல வகையான முன்னேற்றங்களும் பண வரவும் இருக்கும். இந்த வருடம் அதிக முன்னேற்றமும் பணமும் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பொருளாதார நிலையில் மிகப்பெரிய விருத்தி ஏற்படும். இதனுடன் காதல், திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். 2023-ம் ஆண்டின் அதிஷ்ட ராசிகள் எவை? இவர்களுக்கு கிடைக்கப்போகும் நல்ல பலன்கள் என்ன? அனைத்தையும் இந்த பதிவில் காணலாம். 

ரிஷபம்: 

ரிஷப ராசிக்காரர்களுக்கு 2023ஆம் ஆண்டு அற்புதமாக அமையப் போகிறது. ஜனவரி மாத தொடக்கத்திலேயே இவர்களுக்கு பல நல்ல செய்திகள் வரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். நீண்ட நாட்களாக காத்திருந்த முன்னேற்றம் 2023 ஜனவரியில் கிடைக்கும். 

எதிர்காலத்தில் தொழிலில் முன்னேற்றம் காண ஏதுவாக, புதிய வாய்ப்புகள் இப்போது அமையும். வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்படும். வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். அழகான துணையின் சகவாசம் உங்கள் வாழ்க்கைக்கு மணம் சேர்க்கும். இருப்பினும், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். புதிய சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

சிம்மம்: 

2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மைகள் கிடைக்கத் தொடங்கும். சனி பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையை நேர்மறையான அம்சங்களைக் கொண்டு நிரப்பும். இந்த ஆண்டு சில பெரிய வெற்றிகளுடன் தொடங்கலாம். நீங்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். 

பணியிடத்தில் சம்பளம் உயர வாய்ப்புள்ளது. பொருளாதார பலன்கள் ஒன்றன் பின் ஒன்றாக கிடைக்கும். வியாபாரம் வேகமாக வளரும். அரசாங்கத் துறையுடன் தொடர்புடைய சிம்ம ராசிக்கார்ரகளுக்கு, ஏப்ரல் முதல் ஒரு அற்புதமான நேரம் தொடங்கும்.

மேலும் படிக்க | 2023ல் சனி தரும் மகாபுருஷ ராஜயோகம், இந்த ராசிகளின் தலைவிதி மாறும் 

துலாம்: 

2023 ஆம் ஆண்டில், துலாம் ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். ஆண்டின் தொடக்கத்தில் சில நல்ல செய்திகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்த ஒரு பிரச்சனைக்கு முடிவு வரக்கூடும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். முதலீடு செய்வதற்கு இது ஏற்ற காலமாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

எனினும், ஆபத்தான முதலீடுகளை ஆண்டின் இரண்டாம் பாதியில் செய்தால் போதும், முதல் பாதியில் தவிர்ப்பது நல்லது. குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் இடையே புரிதல் அதிகரிக்கும்.

விருச்சிகம்: 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2023ஆம் ஆண்டு முழுவதும் அற்புதமாக இருக்கப் போகிறது. இந்த ஆண்டு அவர்களுக்கு பெரும் முன்னேற்றம், பணம், மகிழ்ச்சி மற்றும் அனைத்தையும் கொடுக்கக்கூடும். குறிப்பாக வருடத்தின் துவக்க மாதங்கள் மங்களகரமானதாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். செலவுகளும் அதிகரிக்கும். எனினும், அதனால் சுமை இருக்காது. இந்த காலத்தில் தைரியமாக முதலீடு செய்யலாம். 2023 ஆம் ஆண்டு வேலை-வியாபாரத்திற்கு சிறப்பாக இருக்கும்.

கும்பம்: 

கும்ப ராசிக்காரர்களுக்கு 2023-ம் ஆண்டு பண விஷயத்தில் ஏற்ற, இறக்கம் இருக்கும். எனினும், இறுதியாக லாபமே நிலைக்கும்.  வருமானம் அதிகரிக்கும். உங்கள் நிதி விஷயங்களை நீங்கள் நன்றாகக் கட்டுப்படுத்தினால், இந்த ஆண்டு வலுவான வங்கி இருப்பை உருவாக்க முடியும். 

இந்த ஆண்டு பங்குச்சந்தையிலும் பணம் சம்பாதிக்கலாம். தொழிலுக்கும் இந்த நேரம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீங்கள் இந்த ஆண்டு மறக்க முடியாத பயணத்தை மேற்கொள்ளக்கூடும். இந்த பயணத்தால் பல அனுகூலமான பலன்கள் ஏற்படும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ராகு வக்கிர பெயர்ச்சி, புத்தாண்டு முதல் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News