ராகு வக்கிர பெயர்ச்சி, புத்தாண்டு முதல் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்

ராசியில் ராகு சஞ்சரிக்கும் போதெல்லாம் அனைத்து ராசிகளும் பாதிக்கப்படும் என்பது நம்பிக்கை. ராகுவின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிக பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 27, 2022, 04:38 PM IST
  • புத்தாண்டில் மீன ராசியில் நுழையும் ராகு.
  • இந்த ராசிக்காரர்களுக்கு பல மடங்கு பலன்.
  • ராகு பெயர்ச்சி 2023.
ராகு வக்கிர பெயர்ச்சி, புத்தாண்டு முதல் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்

ஜோதிடத்தில் கிரகப் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து விலகி மற்றொரு ராசிக்குள் நுழையும் போது அனைத்து ராசிகளுக்கும் சாதகமான மற்றும் எதிர்மறையான பலன்கள் ஏற்படும். இவற்றில் நிழல் கிரகங்களான ராகு மற்று கேது கிரகங்கள் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சரித்து அதற்கான பலன்களைத் தரக்கூடியவர்கள். இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றி, பெரும்பாலான நேரம் வக்கிர நிலையில் இருக்கும்.

ராகு கேது பெயர்ச்சி 2023 எப்போது?
2023 ஆம் ஆண்டு, ராகு அக்டோபர் 30 ஆம் தேதி மீன ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். இந்த பெயர்ச்சியின் காரணமாக ராகு, குரு பகவானின் ராசியான மீன ராசியிலும், புதன் அதிபதியாக கொண்ட கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்க உள்ளனர். 2023 அக்டோபர் 30ம் தேதி வரை ராகு கேதுவால் அற்புத பலன்களைப் பெற உள்ள ராசியினர் யார் என்று பார்ப்போம்.

மேலும் படிக்க | புத்தாண்டின் லக்கி ராசிகள் இவை: பணியிடத்தில் ஏற்றம், வியாபாரத்தில் லாபம், வாழ்வில் மகிழ்ச்சி!! 

மேஷ ராசி: இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாத் துறைகளிலும் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களின் முழு ஆதரவைப் பெறுவார்கள். மேலும் பதவி உயர்வும் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் வணிகத் துறையுடன் தொடர்புடையவர்களும் நிறைய நன்மை அடைவார்கள் மற்றும் அவர்களுக்கு நிதி நன்மைகள் கிடைக்கும். முதலீடு செய்வதற்கு இதுவே சிறந்த நேரமாக இருக்கும்.

மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த கிரகப் பெயர்ச்சி சாதகமாக அமையும். சமுதாயத்தில் மரியாதையும், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இதன் மூலம் மிதுன ராசிக்காரர்கள் பொருளாதாரத் துறையில் ஆதாயங்களைப் பெறுவார்கள். மேலும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.

கடக ராசி: கடக ராசிக்காரர்களும் ராகுவின் சஞ்சாரத்தால் பல நன்மைகளைப் பெறுவார்கள். இதன் மூலம் புதிய வருமானம் கிடைப்பதுடன் பணத்தட்டுப்பாடு நீங்கும். நண்பர்களின் உதவியால் தடைப்பட்ட வேலைகள் நிறைவேறும். பணியிடத்தில் வெற்றி பெறுவார்கள் மற்றும் திடீர் பணம் பெறுவதற்கான நல்ல அறிகுறிகள் உள்ளன.

விருச்சிக ராசி: ​​விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறலாம். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். இந்த நேரம் முதலீட்டிற்கு சிறந்ததாக கருதப்படுகிறது.

மீன ராசி: பணம் பெறுவதற்கான வலுவான அறிகுறிகள் உள்ளன, குடும்பத்துடனான உறவும் தன்னம்பிக்கையும் சாதகமாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | கும்ப ராசியில் நுழையும் சனியினால் ‘3’ ராசிகளுக்கு பண நெருக்கடி ஏற்படும்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News