சனி பெயர்ச்சி பலன் 2023: வேலையில் சிக்கல் யாருக்கு, சனியின் ஆட்டம்

சனி பெயர்ச்சியால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது, வேலை தொழில் எப்படி இருக்கும், பொருளாதார நிலைமை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 29, 2022, 09:11 AM IST
  • சனி பகவானின் ஆட்சி வீடு கும்ப ராசி.
  • இந்த ராசிக்காரர்களுக்கு சனியின் தாக்கம்.
  • சில சங்கடங்களை சந்திக்க நேர்ந்தாலும் பொறுமை அவசியம்.
சனி பெயர்ச்சி பலன் 2023: வேலையில் சிக்கல் யாருக்கு, சனியின் ஆட்டம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023: ஜோதிடத்தில், சனி நீதியின் கடவுளாகக் கருதப்படுகிறார். பொதுவாக சனி பகவான் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி காலங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்பார்கள். அதன்படி திருக்கணித பஞ்சாங்கப்படி, ஜனவரி 17ஆம் தேதி சனிபகவான் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப் போகிறார். மேலும் ஜனவரி 30ஆம் தேதி சனி பகவானுக்கு அருகில் சூரியன் வரும் போது அஸ்தமனம் அடைகிறார். மார்ச் மாதம் 6ஆம் தேதி சனி பகவான் உதயமாகிறார். 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் தேதி வக்ர மடையும் சனிபகவான் நவம்பர் 4ஆம் தேதி மீண்டும் நேர்கதியில் பயணம் செய்வார்.

இந்த நிலையில் இந்த சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது, வேலை தொழில் எப்படி இருக்கும், பொருளாதார நிலைமை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேலும் படிக்க | ஏழரை சனியால் பாதிப்பா? இந்த பரிகாரங்கள் போதும், அள்ளிக்கொடுப்பார் சனி பகவான்

இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிக நெருக்கடி
ஜனவரி 17ஆம் தேதி நடக்க இருக்கும் சனிப் பெயர்ச்சியால் கும்பம், மீனம் மற்றும் மகர ராசிக்காரர்கள் சிரமத்தை சந்திக்க நேரிடும். சனிபகவானின் ராசி மாற்றத்தால் இந்த ராசிகள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். இதனால் இவர்களின் தொடர் வேலைகள் தடைப்பட்டு குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.

​ஏழரை சனி என்றால் என்ன?
சனி பகவான் எந்த ராசியில் அமர்கிறாரோ, அந்த ராசிக்கு முன் உள்ள ராசி மற்றும் பின் உள்ள ராசிக்கு ஏழரை சனி நடக்கும். அந்தவகையில் வரும் ஆண்டில் மகர ராசி (பாத சனி, வாக்கு சனி), கும்ப ராசி (ஜென்ம சனி), மீன (விரய சனி) ஏற்படும்.

அஷ்டம சனி, கண்ட சனி, அர்த்தாஷ்டம சனி எந்த ராசிக்கு ஏற்படும்

  • கடகம் ராசியில் அஷ்டம சனி ஏற்படும்- நீங்கள் எல்லா விதத்திலும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
  • சிம்மம் ராசியில் கண்ட சனி ஏற்படும்- சனியின் பாதிப்பு அதிகமாக இருக்கும். இருப்பினும் கடமையை சரியாக, நேர்மையாக செய்பவர்களுக்கு நன்மை நடக்கும்.
  • விருச்சிகம் ராசியில் அர்த்தாஷ்டம சனி ஏற்படும்- தொழிலில் அலைச்சல் ஏற்படும். சோம்பேறித்தனம் ஏற்படும்.

இந்த நிலையில் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி நடக்கக்கூடிய ராசிக்காரர்கள் வரும் ஆண்டில் மிகுந்த கவனமாத்துடன் இருக்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மிடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | டிசம்பரில் இந்த ராசிகளுக்கு தன ராஜயோகம்: கிரக மாற்றத்தால் எக்கச்சக்க பண வரவு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News