ரோஹித் சர்மா இல்லை... அடுத்த கேப்டன் யார் - இன்று அறிவிப்பு?

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 2, 2022, 01:33 PM IST
  • இந்தியா - தென்னாப்பிரிக்கா 3 ஒருநாள் போட்டி அக். 6, 9, 11 ஆகிய நாள்களில் நடக்கிறது.
  • டி20 உலகக்கோப்பையை முன்னிட்டு, இந்திய அணி அக். 6ஆம் தேதி ஆஸ்திரேலியா செல்ல உள்ளது.
  • இந்திய அணியின் கேப்டன் யாராக இருப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரோஹித் சர்மா இல்லை... அடுத்த கேப்டன் யார் - இன்று அறிவிப்பு? title=

மூன்று போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர்களை விளையாட தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், முதல் டி20 போட்டி கடந்த செப். 28ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இரண்டாவது டி20, கௌகாத்தியில் பர்சபரா மைதானத்தில் இன்று நடக்கிறது. தொடர்ந்து, கடைசி டி20 போட்டி மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் நாளை மறுதினம் (அக். 4) நடக்கிறது. 

இதையடுத்து, 3 ஒருநாள் போட்டிகளை இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட இருக்கிறது. அந்த வகையில், ஒருநாள் தொடருக்கான இந்திய அணி தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. மேலும், இம்மாதம் 22ஆம் தேதி டி20 உலகக்கோப்பை தொடங்க உள்ளதால், தேர்வான இந்திய வீரர்கள்
 வரும் அக்.6ஆம் தேதி ஆஸ்திரேலியா செல்ல உள்ளனர். ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோரும் பயணிக்க உள்ளனர்.

மேலும் படிக்க | இதெல்லாம் அவுட்டா? 3வது நடுவரை விளாசிய யுவராஜ் சிங்

Dhawan, தவான்

இந்நிலையில், தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவிக்க உள்ளதாக தகவல் உள்ளது. இன்றைய டி20 போட்டிக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தொடர்ந்து, ஒருநாள் அணிக்கான இந்திய கேப்டன் யார் என்ற கேள்வியும் முன்னர் எழுந்திருந்தது. மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில், ஷிகார் தவான் தலைமையில் இந்திய அணி தொடரை வென்றிருந்தது. எனவே, அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்படலாம் என கூறப்பட்டது. 

ஆனால், மறுப்புறம் சஞ்சு சாம்சனை ஒருநாள் தொடருக்கான கேப்டனாக அறிவிக்க பிசிசிஐ தரப்பில் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில், நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், சஞ்சு சாம்சன் கேப்டனாக செயல்பட்டார். மேலும், டி20 உலகக்கோப்பை அணியில் அவருக்கு வாய்ப்பளிக்காதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவற்றுக்கு பதிலளிக்கும் வகையில் பிசிசிஐ அவருக்கு கேப்டன் பொறுப்பை வழங்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. 

Sanju Samson, சஞ்சு சாம்சன்

ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கடந்த தொடர்களில் சிறப்பாக செயல்பட்டன. 2022ஆம் ஆண்டு தொடரில், இறுதிப்போட்டி வரை அந்த அணி முன்னேறியிருந்தது. எனவே, சஞ்சு சாம்சனும் கேப்டன் பொறுப்புக்கு பொருத்தமானவர்தான் என்ற பேச்சுக்களும் அதிகமாகியுள்ளன. 

கேப்டன்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாகவே ஒருநாள் அணி குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. முன்னணி வீரர்கள் அனைவரும் ஆஸ்திரேலியா செல்ல உள்ள நிலையில், இளம் வீரர்கள் பலருக்கு இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்பட உள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் முறையே அக். 6, 9, 11 ஆகிய தேதிகளில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | Video: 'சஞ்சு, சஞ்சு...' விண்ணை முட்டிய முழக்கம் - திக்குமுக்காடிய சேப்பாக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News