ஆண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்த நிலையில், பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. வங்கதேசத்தின் சிலேட் மைதானத்தில் நடைபெறும் இந்த தொடரின் லீக் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. டாஸ் வெற்றி பெற்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்த நிலையில் இந்திய அணி பேட்டிங் களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தனர். அதிகபட்சமாக ரோடிகியூஸ் 76 ரன்களும், ஹர்மன்பிரீத் கவுர் 33 ரன்கள் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி, 109 ரன்கள் மட்டுமே எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியில் ஹேமலதா 3 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா மற்றும் வஸ்டாக்கர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்திய அணி இப்போட்டியில் வெற்றி பெற்றபோதும், ஒரு ரன்அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியஅணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, 19வது ஓவரின் 5வது பந்தில் வஸ்டாக்கர் ரன்அவுட்டானார். ஆனால், டிவி ரீப்ளேவில் அவர் ரன்அவுட் செய்யும்போது கோட்டின் உள்ளே இருப்பது தெளிவாக தெரிகிறது.
— cricket fan (@cricketfanvideo) October 1, 2022
That’ is such a poor decision by the third umpire ! Should have given pooja vastrakar benefit of doubt !! #indiavssrilanka #WomensAsiaCup
— Yuvraj Singh (@YUVSTRONG12) October 1, 2022
மேலும் படிக்க | T20 உலகக்கோப்பையில் விளையாடுவாரா பும்ரா? மவுனம் காக்கும் பிசிசிஐ - பின்னணி இதுதான்
இருப்பினும் போட்டியின் 3வது நடுவர் அவுட் கொடுத்து வஸ்டாக்கரை வெளியேற்றினார். களத்தில் இருந்த வீராங்கனைகளுக்கு 3வது நடுவரின் இந்த முடிவு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கும் இந்த ரன்அவுட்டை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் அவர் எழுதியிருக்கும் பதிவில், "3வது நடுவரின் மிக மோசமான முடிவு. ஒருவேளை அவுட்டில் அம்பயருக்கு சந்தேகம் இருந்திருந்தால், அதனை பேட்டிங் செய்து கொண்டிருந்த வஸ்டிராக்கருக்கு சாதகமாக கொடுத்திருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். நெட்டிசன்களும் இந்த அவுட்டை விமர்சித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | ஐயோ...! மயிரிழையில் உயிர் பிழைத்த முன்னாள் இந்திய வீரர் - போட்டியின்போது காயம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ