Video: 'சஞ்சு, சஞ்சு...' விண்ணை முட்டிய முழக்கம் - திக்குமுக்காடிய சேப்பாக்கம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற அதிகாரப்பூர்வ ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்ய ஆடுகளத்திற்கு நுழைந்தபோது ரசிகர்கள் கரகோஷம் மற்றும் முழுக்கங்களை எழுப்பிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.   

Written by - Sudharsan G | Last Updated : Sep 22, 2022, 09:33 PM IST
  • ஒருநாள் போட்டியில், இந்திய 'ஏ'அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன்.
  • இந்திய 'ஏ'அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.
  • டி20 உலகக்கோப்பை இந்திய அணியில், சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை.
Video: 'சஞ்சு, சஞ்சு...' விண்ணை முட்டிய முழக்கம் - திக்குமுக்காடிய சேப்பாக்கம் title=

நியூசிலாந்து 'ஏ' அணி, இந்திய 'ஏ' அணியுடன், 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற தொடர்களை விளையாட இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முன்னதாக, நடைபெற டெஸ்ட் தொடரை பிரியங்க் பான்சல் தலைமையிலான இந்திய 'ஏ' அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. 

இதைத் தொடர்ந்து, சஞ்சு சாம்சன் தலைமையிலான ஒருநாள் 'ஏ' அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை  தேர்வு செய்து நியூசிலாந்து அணியை 167 ரன்களுக்கு சுருட்டியது. ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் சென் விக்கெட்டுகளையும் வீசினர். 

மேலும் படிக்க | T20 World Cup: இந்திய அணியில் மீண்டும் மாற்றம்? பிசிசிஐ விரைவில் முக்கிய முடிவு

பெரும் எதிர்பார்க்கப்பட்ட உம்ரான் மாலிக் 7 ஓவர்கள் வீசி 27 ரன்களை மட்டும் கொடுத்தார். ஒரு ஓவர் மெய்டனாக வீசிய அவர் விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை.தொடர்ந்து, ஆடிய இந்திய அணி 31.5 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், அதிகபட்சமாக ராஜத் பட்டிதார் 45 (41) ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 41 (54) ரன்களையும் குவித்தனர்.

போட்டிங்கின் போது, கேப்டன் சஞ்சு சாம்சன் ஐந்தாவது வீரராக களமிறங்கினார். அப்போது, சேப்பாக்கத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அவருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் சத்தம் போட்டு, முழுக்கங்களை எழுப்பினர். இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

சஞ்சு சாம்சன் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. பிசிசிஐ-யின் இந்த முடிவிற்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் தங்களின் ஆதங்கத்தை பதிவிட்டு வந்த நிலையில், சஞ்சு சாம்சன் பேசுப்பொருளானார். அந்த வேளையில்தான், அவர் இந்திய 'ஏ'அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். குறிப்பாக, டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெறாதது கவலையளிக்கவில்லை என்று அவர் கூறியிருந்தது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றது. 

சிறப்பான வீரர் என்ற முறையில் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு தெரிவித்து, சென்னை கிரிக்கெட் ரசிகர்கள், இன்று அவருக்கு ஆரவார முழுக்கம் எழுப்பியது அவருக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்திருக்கும். 1999ஆம் ஆண்டு, பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போராடி தோற்றது. அப்போது, சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் பாகிஸ்தான் அணிக்கு எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, சென்னை, கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ரசிகர்கள் கொண்ட நகரம் என பொதுவாக கூறப்படுகிறது. இன்றைய சம்பவம் அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது என்றே கூறவேண்டும். 

மேலும் படிக்க | ரோகித் கேப்டனுக்கு சரியில்லை... மீண்டும் அவரை கொண்டு வாங்க; ரசிகர்கள் சொல்ல காரணம் இருக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News